Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா வர்த்தக வாகனங்களுக்கு விசேட லீசிங் சலுகையை வழங்கும் HNB PLC

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Mahindra Bolero City Pickups, ALFA Plus Load Carriers, Mahindra KUV AMT மற்றும் Mahindra Powerol Generatorகள் ஆகியவற்றுக்கான மலிவு விலையிலான லீசிங் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில், வாகனத் துறையின் முன்னணி நிறுவனமான Ideal Motors (Pvt) Ltd உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இந்தக் கூட்டாண்மை மே 15, 2025 அன்று முறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய வணிகப் போக்குவரத்து மற்றும் மின்சார தீர்வுகளுக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்தக் கூட்டாண்மை, இலங்கையின் தொழில்முனைவோருக்காகத் tailor-made செய்யப்பட்ட நெகிழ்வான நிதித் தேர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் முதுகெலும்பான தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான HNB இன் உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துகிறது. அதிக தேவைப்படும் இந்த பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் வசதிகளை நீட்டிப்பதன் மூலம், இந்த முன்முயற்சி அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் உற்பத்தித்திறன், இயக்கம் மற்றும் செயல்பாட்டு மீள்திறனை மேம்படுத்துகிறது.

இந்தக் கூட்டாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த HNB இன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் வாடிக்கையாளர் வங்கிச் சேவைப் பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம, “அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நிதித் தீர்வுகளின் மூலம் பொருளாதார வலுவூட்டலை நோக்கிய HNB இன் ஆழ்ந்த அர்ப்பணிப்பை இந்தக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. Ideal Motorsஇன் மஹிந்திரா வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களின் தொகுப்பு, நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) நீண்ட காலமாக ஒரு முக்கிய ஊக்கியாகச் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் நம்பகமான தயாரிப்புகளை எமது கட்டமைக்கப்பட்ட லீசிங் தீர்வுகளுடன் இணைப்பதன் மூலம், குறிப்பாக செலவுத் திறன் மற்றும் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாக இருக்கும் இக்காலகட்டத்தில், வணிகங்கள் வளர்ச்சி அடையத் தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்,” எனக் குறிப்பிட்டார்.

Ideal Motorsஇன் சட்ட, சந்தைப்படுத்தல் மற்றும் பெருநிறுவன விவகாரப் பணிப்பாளர் நிமிஷா வெல்கம இந்தக் கூட்டாண்மை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மிகவும் நம்பகமான நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB உடன் இணைந்து, எமது மஹிந்திரா வாகனங்கள் மற்றும் மின்சாரத் தீர்வுகளின் அணுகலை சந்தையின் பரந்த பிரிவினருக்கு விரிவுபடுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தக் கூட்டாண்மை, தரமான, நம்பகமான வர்த்தக வாகனங்கள் மற்றும் மின்சாரத் தொகுதிகளை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், அவர்களின் வணிகங்களை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் தேவையான நிதி நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. எமது தயாரிப்பு நிபுணத்துவத்தை HNB இன் புத்தாக்கமான லீசிங் மற்றும் நிதித் தேர்வுகளுடன் இணைப்பதன் மூலம், வளர்ந்து வரும் போட்டிச் சூழலில் தொழில்முனைவோர், SMEs மற்றும் ஏற்றி இறக்கல் நிறுவனங்களின் மாறிவரும் இயக்கம் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை ஆதரித்து, நாடு முழுவதும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” எனக் குறிப்பிட்டார்.

இந்த முன்முயற்சியின் மூலம், உள்ளூர் வணிகங்களின் இயக்கம் மற்றும் எரிசக்தித் தேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக தனது பங்கை HNB தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. நீண்டகால மதிப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட நிதி தயாரிப்புகளை வழங்குவதில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

வலுவான நாடு தழுவிய வலையமைப்பு மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவையின் மீதுள்ள கவனத்துடன், IDEAL Motors இலகுரக கனரக வாகனப் பிரிவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் ஆதரவுடன், IDEAL Motors இலங்கை முழுவதும் விரிவான போக்குவரத்து தீர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான பல சலுகைகளுடன் “சம்பத்காட்ஸ் Town...
Samsung නවෝත්පාදන සමඟින් ජීවිතය ස්මාර්ට්...
Introducing Samsung Exclusive Easy Pay:...
ඇමරිකා එක්සත් ජනපදය 30%ක තීරු...
Trinasolar, ශ්‍රී ලංකාව පුරා මෙගාවොට්...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா...
‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில்...
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின்...
ආකර්ෂණීය වාසි රැසක් සමඟින්, සම්පත්කාඩ්ස්...