Kaspersky தனது வணிக அடித்தளத்தை கம்போடியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் விரிவுபடுத்துகிறது

Share

Share

Share

Share

உலகளாவிய இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமை நிறுவனமான Kaspersky, இலங்கை, கம்போடியா மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆசிய பசிபிக்கிலுள்ள (APAC) புதிய பிரதேசங்களில் அதன் விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்கள் முழுவதும், குறிப்பாக நிறுவன இணையப் பாதுகாப்பு சந்தையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனத்தின் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது.

இணைய அச்சுறுத்தல்கள் உலகளவில் தொடர்ந்து உருவாகி, பெருகி வருவதால், Kaspersky அதன் முழுமையான இணையப் பாதுகாப்பு தீர்வுகள் சேவைகளை APAC இல் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைக் கொண்டுள்ளது. புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட சாதனையுடன், கம்போடியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இணைய பாதுகாப்பு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள நிறுவனம் தயாராக உள்ளது.

” இலங்கை, கம்போடியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் எங்களது விரிவாக்கமானது, அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆசியா பசிபிக்கின் பரந்த Cybersphereஐப் பாதுகாப்பதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பை இது காட்டுகிறது” என Kasperskyஇன் ஆசியா பசிபிக் முகாமைத்துவப் பணிப்பாளர் Adrian Hia கூறினார். “எங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை-முன்னணி நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், இந்த பிராந்தியங்களில் உள்ள தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அவர்களின் தனிப்பட்ட, வணிகம் மற்றும் முக்கியமான மற்றும் தேசிய தரவைப் பாதுகாப்பதற்கான Cyber எதிர்ப்பு அணுகுமுறையை உருவாக்க உதவுவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என கூறினார்.

Kasperskyஇன் இந்த புதிய பிராந்தியங்களில் தனது சந்தை தடத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையானது, அரசு, நிதி, சுகாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப செயல்படும் இணைய பாதுகாப்பு தீர்வுகளை பெற்றுக் கொள்ள உதவும். நிறுவனத்தின் விரிவான கோப்புறை தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMBகள்), மற்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு தீர்வுகளை உள்ளடக்கியது.

இலங்கை, கம்போடியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விரிவாக்கமானது Kasperskyஇன் உலகளாவிய மற்றும் பிராந்திய வளர்ச்சி மூலோபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கான நம்பகமான இணைய பாதுகாப்பு பங்காளியாக அதன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kasperskyஐ பற்றி மேலும் அறிய www.kaspersky.com ஐ பார்வையிடவும்

Kaspersky தொடர்பாக

Kaspersky என்பது 1997 இல் நிறுவப்பட்ட உலகளாவிய இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமை நிறுவனமாகும். Kasperskyன் ஆழமான அச்சுறுத்தல் நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவம், உலகெங்கிலும் உள்ள வணிகங்கள், முக்கியமான உள்கட்டமைப்பு, அரசாங்கங்கள் மற்றும் வாடிக்கையாளரைப் பாதுகாப்பதற்கான புத்தாக்கமான பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் சேவைகளாக தொடர்ந்து மாறுகிறது. நிறுவனத்தின் விரிவான பாதுகாப்பு கோப்புறையில் முன்னணி பாதுகாப்பு மற்றும் சிறப்பு பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் சேவைகள் மற்றும் அதிநவீன மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான Cyber Immune தீர்வுகள் ஆகியவை அடங்கும். 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் Kaspersky தொழில்நுட்பங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள், மேலும் 220,000 பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமானவற்றைப் பாதுகாக்க நாங்கள் உதவுகிறோம். மேலதிக தகவல்களுக்கு www.kaspersky.com ஐ நாடவும்.

 

 

Jungle Kitchen, with roots in...
TikTok Strengthens Measures to Combat...
ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 170 වැනි...
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது...
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
Planters’ Association of Ceylon Celebrates...