Sunshine Holdings PLC இன் மருத்துவப் பிரிவான Lina Manufacturing Pvt., கடவத்தை உற்பத்தி ஆலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ அமைப்புக்கான (QMS) ISO 9001:2015/SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட இந்த மதிப்பீடு, அதன் பல்வேறு தயாரிப்பு நோக்கங்களில் தர முகாமைத்துவத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ISO 9001:2015 சான்றிதழ் செயல்முறையானது, Dry powder inhalation, காப்ஸ்யூல்கள், சுவாசப் பொருட்கள், இருதய மருந்துகள், கிரீம்கள் மற்றும் Nasal Sprayகள் உட்பட Lina Manufacturing அனைத்து தயாரிப்பு நோக்கங்களையும் உள்ளடக்கியது. ஆகஸ்ட் 1, 2023 முதல், புதிதாக இணைக்கப்பட்ட கிரீம்கள் மற்றும் Nasal Spray வகைகளும் இந்த சான்றிதழில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கமானது, அதன் தர முகாமைத்துவ செயல்முறைகளை உலகளாவிய தரநிலைகளுடன் சீரமைப்பதற்கும் அதன் செயல்பாடுகள் முழுவதும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் தக்க வைத்துள்ளது.
Lina Manufacturing நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டி சயந்தன் கூறியதாவது, “ISO 9001:2015 என்பது உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்வதற்கும் அதை மீறுவதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். இது எங்கள் குழுவின் கூட்டு முயற்சி மற்றும் எங்கள் மருந்து தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார்.
Lina Manufacturing நீண்ட காலமாக சன்ஷைன் குழுமத்தின் நெறிமுறை பார்வையாக இருந்து வருகிறது “வாழ்க்கைக்கு சிறந்த” உள்ளூர் சந்தைக்கு உயர்தர மருந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் உறுதிபூண்டுள்ளது. இந்தச் சான்றிதழ் நிறுவனத்தின் இதுவரையிலான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் எட்டியுள்ளது. விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் திறமையான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்வதற்கு பொறுப்புடன் செயற்பட்டனர்.
ISO 9001:2015 சான்றிதழால் வழங்கப்படும் உலகளாவிய அங்கீகாரம் Lina Manufacturing நிறுவனத்தின் தர முகாமைத்துவ அமைப்பின் திறனை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய சந்தைகளில் எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கான ஊக்கச் சத்தியாகவும் செயல்படுகிறது. புதிய வெற்றிகளை அடைவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இந்த சான்றிதழ் உறுதியான அடித்தளத்தை வழங்குவதுடன் நம்பகமான மற்றும் தரமான மருந்து உற்பத்தியாளராக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lina Manufacturing ஆனது, சிறப்பான, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய மருந்துகளின் உற்பத்தியின் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அதன் பணியில் அசையாத இடத்தை பிடித்துள்ளது. ISO 9001:2015 சான்றிதழானது, இந்தக் கொள்கைகளுக்கு நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான ஆதாரத்தை வழங்குகிறது மற்றும் எப்போதும் மாறிவரும் மருந்துத் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான தளத்தை உருவாக்குகிறது.