MAS நிறுவனமானது Eco Go Beyond பாடசாலை பேண்தகைமை திட்டத்தை இந்தியாவிற்கு விரிவுபடுத்துகிறது

Share

Share

Share

Share

Bodyline தயாரிப்பு பிரிவு, Intimate Fashions India திட்டத்தை மேற்கொள்ள உதவி வழங்குகிறது
இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான MAS Holdings நிறுவனத்தினால் 15 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட Eco Go Beyond முயற்சியானது தற்போது இலங்கைக்கு வெளியே தமது சேவையை விரிவுபடுத்துகிறது, அதன்படி, MAS Eco Go Beyond sustainable Development Education திட்டம் இந்தியாவிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தமுயற்சி தற்போது இலங்கைக்கு அப்பால் சென்று தமது சேவையை மேற்கொளவது இதுவே முதல் முறையாகும்.
காயரம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நந்திவரம் அரசு ஆண்கள் பள்ளி ஆகிய பாடசாலைகளில் Eco Go Beyond திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, Intimate Fashions India (Pvt) Ltd, Bodyline Trading (Pvt) Ltd இன் மூலோபாய வணிகப் பிரிவானது, உற்பத்திப் பிரிவுகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது. அங்கு, விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் கல்வியாளருமான ராம்நாத் சந்திரசேகருடன் மாணவர்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததுடன், சுற்றுச்சூழல் பேண்தகைமை பிரச்சினைகளை அடையாளம் காண்பதன் மூலம் நடைமுறை அனுபவத்தின் ஊடாக அறிவைப் பெற முடிந்தது.
“MAS இல் எங்கள் செயல்பாடுகளை புரிந்து கொண்ட சமூகங்கள் எங்களது வணிகத்தின் மிகப்பெரிய பலம் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதுடன் அவர்கள் நமக்குத் தரும் ஒத்துழைப்புடன், அவர்களின் நல்வாழ்வை நாம் உறுதி செய்கிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பே நிலையான கல்வி வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துகொண்டதுடன், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எங்களின் Eco Go Beyond திட்டத்தை நிறுவி, பேண்தகைமையான பாடசாலைகள் திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த முயற்சியை இந்தியாவிற்கு விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், எங்களின் இந்த புதிய முயற்சியில் நம்பிக்கை வைத்து எங்களுடன் கைகோர்க்கும் புத்திஜீவிகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என MAS Holdings இன் சமூக பேண்தகைமை பிரிவின் பிரதானி திருமதி அமந்தி பெரேரா தெரிவித்தார்.
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கையில் 15 வருடங்களாக செயற்பட்டு வரும் Eco Go Beyond திட்டம் நாடு முழுவதும் உள்ள 120க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உணர்திறன், செயல்படுத்தல் மற்றும் வெகுமதி ஆகிய மூன்று கட்டங்களின் மூலம் நிலைத்தன்மைக் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது. குறிப்பாக, தற்போதுள்ள அமைப்பை மாற்றுவதில் பள்ளிகள் வினையூக்கிகளாக செயல்படுவதாக MAS நம்புகிறது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் வளங்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் கற்றல் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் பார்வையாளர்களை கவரக்கூடிய மிகவும் பயனுள்ள இடங்களாக பள்ளிகளை அடையாளம் காணலாம்.
காயரம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் நந்திவரம் அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் மாணவர்கள், கல்வியாளர்கள், விஷேட அதிதிகள், பேச்சாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் MAS Holdings, Bodyline, மற்றும் Intimate Fashions India இன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
MAS அடுத்த சில ஆண்டுகளில் Eco Go Beyond திட்டத்தின் விரிவாக்கத்தை ஆரம்பிக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், MAS செயல்படும் பிற சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சென்றடைவதன் மூலம், செழிப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான மாற்றத்தை ஏற்படுத்த MAS கொண்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

MAS Holdings தொடர்பில்
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS குழுமம், ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு-விநியோகஸ்தர் ஆகும். இதில் 118,000 பேர் பணியாற்றுகின்றனர். இன்று, MAS தனது தயாரிப்புகளை 16 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகள் மூலம் உற்பத்தி செய்கிறது. MAS இன் வர்த்தக நாமங்கள், தொழில்நுட்பம், FemTech, Start-ups மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆடை பேட்டைகள் எப்போதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளன.
35 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளில், MAS ஆனது அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. MAS ஆனது 2022 இல் “Fast Company’s World Changing Ideas and being Highly Commended at Reuters Responsible Business Awards 2022” இறுதிக் கட்ட போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பாராட்டத்தக்கது.
உற்பத்தித் திறன் மற்றும் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஆடைத் துறையில் முன்னணியில் உள்ள MAS ஆனது உலகம் முழுவதும் அதன் பெயரைப் பிரகாசிக்கச் செய்துள்ளது. இன்று, தயாரிப்புகள், உயிரினங்கள் மற்றும் புவி ஆகிய மூன்று பகுதிகளில் நிலையான மாற்றத்தை உருவாக்க MAS உறுதிபூண்டுள்ளது. இந்த முன்முயற்சிகள் மூலம், கனவுகளை நனவாக்குவதும் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் மாற்றங்களை உருவாக்குபவர்களாக அனைத்து ஊழியர்களையும் ஊக்கப்படுத்துவதை MAS நோக்கமாகக் கொண்டுள்ளது.

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...