குறைந்த செலவில் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதில் இலங்கையின் சுகாதாரத் துறையில் முன்னோடி மற்றும் மிகப்பெரிய மருத்துவமனை வலையமைப்பான MediHelp மருத்துவமனைக் குழுமம், நவீன வசதிகளுடன் கூடிய தனது 17வது மருத்துவமனை கிளையை அண்மையில் கல்கிசையில் ஆரம்பித்தது. இந்த மருத்துவமனைக் கிளை, கல்கிசை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை சேவைகளுக்கான வசதிகளை வழங்கும்.
புதிதாக திறக்கப்பட்ட MediHelp கல்கிசை மருத்துவமனை, உள்நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் கூடிய MediHelp குழுமத்தின் இரண்டாவது மருத்துவமனையாக மாறியுள்ளதுடன், மேலும் அதன் முதல் மருத்துவமனை ஹொரண நகரில் அமைந்துள்ளது. MediHelp கல்கிசை மருத்துவமனையில் ஏற்கனவே வெளிநோயாளர் சேவைகள், அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், மருத்துவ ஆய்வக சேவைகள், சிறப்பு மருத்துவ ஆலோசனை, டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்கோ கார்டியோகிராபி, உடற்பயிற்சி ECG, EEG, பிசியோதெரபி சேவைகள், சிறு அறுவை சிகிச்சைகள், சுகாதார பரிசோதனைகள், பல் மருத்துவம் ஆகியவை சேவைகள் உள்ளடங்குகின்றன.
உள்நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளுக்கான அறுவை சிகிச்சை அறை வசதிகள், உள்நோயாளிகளுக்கான தனி அறைகள், ஒரே நாளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகளுக்கான தனி பிரிவுகள் போன்ற மருத்துவ வசதிகளுடன் இது பொருத்தப்பட்டுள்ளது, விரைவில் CT ஸ்கேன் வசதிகளும் Medihelpஇன் கல்கிசை மருத்துவமனையில் கிடைக்கும். இது தவிர, புதிய MediHelp கல்கிசை கிளையில் அதிநவீன மருத்துவ சாதனங்கள், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகன தரிப்பிடம், அனுபவம் வாய்ந்த தாதியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சமீபத்திய மருத்துவ உபகரணங்களும் உள்ளன.
மெடிஹெல்ப், கல்கிசை மருத்துவமனை மூலம் பல்வேறு ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குகிறது. இவற்றில் பொது உடலியல், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், புற்றுநோய் பராமரிப்பு, ஈ.என்.டி., இருதயவியல், பொது அறுவை சிகிச்சை, நரம்பியல், எலும்பியல், குழந்தை மருத்துவம், இரைப்பை குடல் நோய்கள், யூரோஜெனிட்டல் டெர்மட்டாலஜி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உட்பட பல சிறப்பு மருத்துவர்களின் சேவைகளைப் பெறலாம். நரம்புகள் கட்டப்படுவதைத் தடுப்பதற்கான அறுவை சிகிச்சை, சிறுநீரகம் மற்றும் கண் நோய்கள் மற்றும் பால்வினை நோய்களுக்கான சிகிச்சை ஆகிய சேவைகளும் இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை குழுமத்தின் மருத்துவ சேவைகள் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் சரித விஜேசிறிவர்தன, “நாங்கள் மருத்துவமனை குழுமத்திற்கான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்புகளில் பாரியளவில் முதலீடு செய்துள்ளோம். அதன் காரணமாக, மருத்துவமனை சேவைத் துறையில் உலகளாவிய சிறந்த சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப எமது சேவைகளைப் பராமரிக்க முடிந்தது. மேலும், கிருமி நீக்கம் மற்றும் கட்டுப்பாடு, மருத்துவ சேவை நிர்வகிப்பு ஆகியவற்றின் மூலம் மருத்துவமனையின் ஒவ்வொரு துறையின் சேவைகளையும் சர்வதேச தரத்தின்படி எங்களால் பராமரிக்க முடிந்தது. நோயாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதன் மூலம், எங்கள் மருத்துவமனை குழு மருத்துவ சேவைகளில் இருந்து உகந்த முடிவுகளை அடைய முடிந்தது.” என தெரிவித்தார்.
MediHelp கல்கிசை மருத்துவமனை, அதன் மருத்துவமனை சேவைகளின் உத்தியோகபூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு மே 31, 2023 வரை பல்வேறு நிவாரணங்களையும் நன்மைகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கல்கிசை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் மிகவும் உகந்த மருத்துவமனை சேவையை வழங்க முடியும்.