MVTMஐ அறிமுகப்படுத்துகிறது MAS Matrix; பொறியியல் நெசவின் திறனை மறுவரையறை செய்யும் Athleisure Wear தொகுப்பு

Share

Share

Share

Share

MAS Holdings நிறுவனத்தின் கீழ் இயங்கும் பன்முகப்படுத்தப்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனமான MAS Matrix, அதன் சமீபத்திய தயாரிப்பு தளமான ‘MVTM’ ஐ அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. flat-knit தயாரிப்புகளுக்கான ஒரு மாற்றத்தில், MVTM எல்லையின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்புத் திறன், விளையாட்டு ஆடைகளில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. நவீன, வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தத் தொகுப்பானது, அதிக செயல்பாடு கொண்ட, பல்துறை மற்றும் நாகரீகமான வடிவமைப்புகளை வழங்குகிறது.

MVTM என்பது இயக்கம் (Movement) மற்றும் வேகத்தின் (Momentum) கலவையாகும். இந்தப் பல்துறை ஆடைகள் (Versatile Pieces) ஒரு நாள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்பு வரிசையானது இயக்கச் சுதந்திரத்தை அனுமதிக்கும் அதே வேளையில் வசதியான மற்றும் செயல்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் MVTM தயாரிப்புகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றன.

Matrix இன் திறன்கள்குறித்து கருத்து தெரிவித்த MAS Matrix பிரதம நிறைவேற்று அதிகாரி பாலித லியனகே, “Matrixஇல் எங்கள் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாங்கள் காலணிகளுக்கான பின்னப்பட்ட ஷூ கவர்களை (Knitted Uppers) உருவாக்குவதுடன் பின்னல் ஆடைகள் மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் முன்னெற்றம் அடைந்துள்ளது. இன்று MVTM அறிமுகம்மூலம் எங்களின் முழு திறன்களையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். செயல்பாட்டு மற்றும் நிலையான நாகரீக அலங்கார வடிவமைப்புகளுடன் புத்தாக்கமான ஆடைகளைச் சந்தைக்குக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்.” எனத் தெரிவித்தார்.

MAS Holdings இன் விரிவான நிலைத்தன்மை நடவடிக்கை, MAS Plan for Change உடன் இணைந்து, MAS Matrix தனது எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு மேலும் நிலையான மாற்றுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. பொறியியல் நெசவின் ஒரு தனித்துவமான அம்சம் ”knit to shape’ செய்யும் திறனாகும், இது traditional cut மற்றும் தையல் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது பாவனையாளர் முந்தைய கழிவுகளை 18-22%ஆக குறைக்கிறது. மேலும், MVTM தொகுப்பு நிலையான, இயற்கை மற்றும் மீளுருவாக்கக்கூடிய மூலங்களிலிருந்து பெறப்பட்ட மூலப் பொருட்களின் 77% பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இவற்றில் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியஸ்டர், organic, Better Cotton Initiative-certified cotton Fabrics வகைகள் மற்றும் Modal, Tencel, மற்றும் Hemp போன்ற உயிரியல் அடிப்படையிலான துணிகள் ஆகியவை அடங்கும்.

MVTM தொகுப்பில் 77% மீள்சுழற்சி செய்யப்பட்ட பாவனையாளர்களால் வீசப்படும் கழிவுகள் அல்லது இயற்கை மற்றும் மீளுருவாக்கக்கூடிய நூல்களால் ஆனது, இது நிலையான எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

MAS Matrix, MAS Holdings நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும், இது 1000 Stoll Flatbed இயந்திரங்களைக் கொண்டுள்ளது, இது Nike, Decathlon, Gymshark, Lacoste, Victoria’s Secret மற்றும் Stoko போன்ற உலகளாவிய வர்த்தக நாமங்களுக்கான Athleisure ஆடைகள், செயல்திறன் ஆடைகள், அத்தியாவசியங்கள் மற்றும் நெசவு கூறுகளை உள்ளடக்கிய தயாரிப்பு வகைகளை வழங்குகிறது. MVTM இன் அறிமுகம், MAS Matrix இன் கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அவர்களின் இயக்கமயமான வாழ்க்கை முறைகளுக்குத் தடையின்றி மாற்றியமைக்கக்கூடிய ஆடைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அதன் தனித்துவமான பாணி, செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு, MVTM Athleisure உலகில் அலைகளை உருவாக்கத் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

MVTM மற்றும் MAS Matrix பற்றி மேலும் தகவலுக்கு, https://mvtm.co/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

 

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...