Prime Constructions இன் தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மீள உறுதி செய்து ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

Share

Share

Share

Share

ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியான Prime Group இன் நிர்மாணப் பிரிவான Prime Constructions (Pvt) Ltd (PCL), ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. தரம், நம்பிக்கை மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்கள் ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஒரு முக்கிய மைல்கல்காக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது.

ISO 9001:2015 இனால் Prime Constructions நிறுவனத்தின் திட்டமிடல் முதல் இறுதி விநியோகம் வரையிலான ஒவ்வொரு கட்டமும், சீரான மற்றும் தரமான செயல்முறைகளின் ஊடாகவே முன்னெடுக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறைபாடுகளைக் குறைப்பதற்கும், செலவுமிக்க திருத்த வேலைகளைத் தவிர்ப்பதற்கும் உதவுவதுடன், நிறுவனத்தின் நீண்டகால நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. அத்துடன், ஒவ்வொரு செயற்திட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தர முகாமைத்துவ தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை இச்சான்றிதழ் வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்துவதுடன், இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் தொலைநோக்கு சிந்தனைமிக்க ரியல் எஸ்டேட் வர்த்தகநாமம் என்ற Prime Group-இன் நற்பெயரையும் மேலும் வலுப்படுத்துகின்றது.

இந்தச் சான்றளிப்பு, Prime Constructions இன் செயற்திட்டங்கள் உரிய நேரத்தில், திட்டமிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் மற்றும் உயர்தரமான தரநிலைகளுடன் விநியோகிக்கப்படும் என்ற மேலதிக நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அத்துடன், கட்டுமானப் பொருட்களின் தரம், பரிசோதனைகள் மற்றும் மைல்கற்கள் தொடர்பான தெளிவான ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படையான தொடர்பாடல் மூலம் வீட்டு உரிமையாளர்கள் பெரிதும் பயனடைவர். வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து அவற்றை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதுடன், வாடிக்கையாளர் திருப்தியைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் நடைமுறையைத் தனது செயல்பாடுகளில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற Prime Constructions இன் நோக்கத்தையும் இந்தச் சான்றிதழ் பூர்த்தி செய்கின்றது.

முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு ISO 9001:2015 இனால், உறுதியான ஆளுகை, சீர்மை மற்றும் சர்வதேச நியமங்களின் பிரகாரம் செயலாற்றுவது மற்றும் நிறுவனத்தினுள் தொடர்ச்சியான மேம்படுத்தல் கலாசாரம் பின்பற்றப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சான்றளிப்பினூடாக செலவு சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வளங்கள் விரயமாவது தணிக்கப்படுவதுடன், செயற்பாட்டு ரீதியாக ஏற்படும் தவறுகள் குறைக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், போட்டிகரமான விலையிடலை வழங்கவும், எதிர்பாராத எல்லைமீறிய செலவுகளை தவிர்த்துக் கொள்ளவும் Prime Constructions இற்கு ஏதுவாக அமையும்.

Prime Constructions இன் பொது முகாமையாளர் பொறியியலாளர் சுஜித் ரூபசிங்க குறிப்பிடுகையில், “ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளமை என்பது, தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றில் எமது குழுவினர் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. இந்தச் சாதனையானது எமது செயல்முறைகளை அங்கீகரிப்பதுடன், சரியான முறையில் பணிகளை முன்னெடுப்பதில் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துகின்றது. ஒரு நிறுவனமாக, சிக்கலான செயற்திட்டங்களை ஒழுக்கத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் கையாளும் திறன் Prime Constructions இடம் உள்ளது. நாம் எமது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடனான நம்பிக்கையை வலுப்படுத்தி வரும் ஒரு நிலையில், இது மிக முக்கியமான ஒரு திறனாகக் கருதப்படுகின்றது.” என்றார்.

43 by the Sea Marine Drive, The Palace, The Season, கொழும்பு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள Tower Cosmos & Amaa, Shine On மற்றும் Skye Blossome போன்ற Prime Constructions இன் சமீபத்திய குறிப்பிடத்தக்க திட்டங்களாக அமைந்துள்ளன. இவை, இலங்கை முழுவதும் பல்வேறுபட்ட உயர்தர கட்டுமானங்களை வழங்கும் நிறுவனத்தின் திறனைப் வெளிப்படுத்துகின்றன. இச்செயற்திட்டங்கள், பாரம்பரியத்தையும் நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைப்பதிலும், வாழ்க்கை முறைக்கு முன்னுரிமையளிக்கும் சமூகங்களை உருவாக்குவதிலும் மற்றும் பாரிய அளவிலான நகர்ப்புறத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் Prime Group கொண்டுள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒன்றிணைந்து, தொலைநோக்கு மேம்பாட்டுச் சிந்தனைகளையும் நேர்த்தியான செயல்பாடுகளையும் கொண்டுள்ள Prime Group, நம்பகமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த வாழ்வியல் அனுபவங்களை வழங்குவதன் மூலம் நவீன ரியல் எஸ்டேட் துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

Tesla Model Y කාර් රථයට...
புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங்...
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818...
Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று...
ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
JAAF reaffirms confidence in long-term...