Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பான Kaloora இன் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது

Share

Share

Share

Share

களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பு மாதிரியான Kaloora வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டலை Prime Lands உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இது அந்நகரத்தின் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளக் கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. இந்நிகழ்வு, இலங்கையில் அதிவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக களுத்துறை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது.

Kaloora வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை Prime Group இன் கட்டுமானப் பிரிவான Prime Constructions Pvt Ltd பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றது. இது இக்கட்டுமானப் பணியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மிகச்சிறந்த பொறியியல் மற்றும் திட்ட-வழங்கல் நிபுணத்துவத்தை கொண்டு சேர்க்கின்றது. தற்போது கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டமானது அதன் எதிர்கால வதிவாளர்களுக்காக, தனது சிறந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் உத்தியோகபூர்வப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

களுத்துறை நகரிலிருந்து ஐந்து நிமிடத் தொலைவிலும், நாகொடை வைத்தியசாலையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலும், தொடாங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து 15 நிமிடத் தொலைவிலும் அமைந்துள்ள Kaloora, பாடசாலைகள், சுப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் மிக இலகுவாக அணுகக்கூடிய தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தினுள், 24 மணிநேரப் பாதுகாப்பு, நீச்சல் தடாகம், முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டிடம், உள்ளரங்க கிரிக்கெட் வசதி மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றுடன் அன்றாட வாழ்க்கை முறை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது; இது கொழும்பு நகரின் அதிநவீன சொகுசு வாழ்க்கை முறையின் வசதிகளையும் கம்பீரத்தையும் மாறாமல் களுத்துறையில் வழங்குகின்றது.

பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பங்களுக்காக பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்டுள்ள Kaloora, விசாலமான வீடுகள், சமகாலக் கட்டிடக்கலை மற்றும் சிந்தனைப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை முறை வசதிகள் ஆகியவற்றை ஒரு பாதுகாப்பான, அமைதியான சூழலில் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கின்றது.

Kaloora, பாதுகாப்பான அமைதியான சூழலுடன் மிக நேர்த்தியாக ஒன்றிணைகின்றது. அத்துடன், சமூக வாழ்வு அன்றாட சௌகரியங்களுடன் சீராக இணங்கிச் செல்கின்றது. இது முதலீடுகள் செழித்தோங்குவதற்கும், குடும்பங்கள் பெருமையுடன் தமக்கானதொரு இல்லத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்குமான ஒரு சிறந்த தளத்தை உருவாக்குகின்றது
Prime Lands Ltd. இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “Kaloora களுத்துறையின் ஒரு முக்கிய மைல்கல்லாகும், ஏனெனில் இது நகரின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்புத் திட்டமாகும்.

உயர்தரமான, சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட வாழ்விடங்களை உருவாக்குவதில் தனக்குள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் இந்த அடையாளக் கட்டுமானத்தை அறிமுகப்படுத்துவதில் Prime பெருமிதம் கொள்கின்றது. தற்போது இதன் கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய இலக்கணத்தை வழங்குவதுடன், அப் பிராந்தியத்தின் சமகால வதிவிட வாழ்க்கைத் தரத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகின்றது. குடும்பங்கள் முழுமையான நம்பிக்கையுடன் குடியேறி வாழ்வதற்கேற்ற ஒரு பாதுகாப்பான, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குடியிருப்பு சூழலை நாங்கள் வடிவமைத்துள்ளதுடன், எங்களின் நெகிழ்வுத்தன்மைமிக்க கொடுப்பனவுத் திட்டங்கள் மூலம் இத்தகைய உயர்தரத்திலான ஒரு இல்லத்தை சொந்தமாக்கும் கனவு இப்போது இன்னும் பல குடும்பங்களின் கைக்கெட்டும் தூரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார்.

Kaloora உடன், Prime Group இலங்கையின் நம்பிக்கையை வென்ற ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம் எனும் வகையில், நாடு முழுவதையும் சேர்ந்த சமூகங்களின் வாழ்வை வளமூட்டும் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுங்கள், https://www.primelands.lk/house/KALOORA-KALUTARA/en

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...