Prime Residencies, நவீன ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி நிறுவனமான Prime Group இன் அங்கத்துவ நிறுவனம், கொழும்பு 09, பேஸ்லைன் வீதிக்கு முகப்பாக அமையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புத் திட்டமான The Prime Colombo இன் ஆரம்பக்கட்ட அறிமுகத்தை அறிவித்துள்ளது. “நகரத்தை சொந்தமாக்குவதற்கான ஒரு புத்திசாலித்தனமான வழி” (a smarter way to own the city) என்ற தனித்துவமான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள The Prime Colombo, நவீன, நகர்ப்புற வாழ்க்கை மற்றும் முதலீட்டிற்கான ஒரு புதிய முன்மொழிவை பிரதிபலிக்கிறது. இது அமைவிடம், வடிவமைப்பு மற்றும் நீண்ட காலப் பெறுமதி ஆகியவற்றை ஒரே முகவரியில் ஒன்றிணைக்கின்றது.
The Prime Colombo திட்டம், கொழும்பில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பலராலும் விரும்பப்படும் குடியிருப்புப் பிரதேசங்களான கொழும்பு 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய இடங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, வெஸ்லி கல்லூரி மற்றும் சாஹிரா கல்லூரி போன்ற அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கான நேரடி அணுகலையும் இக்குடியிருப்புத் திட்டம் வழங்குகின்றது. அத்துடன், வணிகப் பகுதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான இலகுவான போக்குவரத்து வசதிகளுக்கு மேலாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, தேசிய பல் வைத்தியசாலை, ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகள், வர்த்தக மையங்கள் மற்றும் சிறந்த நகர்ப்புற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அன்றாட அத்தியாவசிய வசதிகளையும் மிக அருகிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பையும் இது வழங்குகிறது. இவ்வாறாக அன்றாட வாழ்க்கைத் தரத்தை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்லும் The Prime Colombo, குடியிருப்பாளர்கள் தங்களது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கி வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது.
கட்டிடக்கலைத் துல்லியத்தின் ஒரு முன்மாதிரியாக 39 குடியிருப்புத் தளங்களுடன் வானளாவ உயர்ந்து நிற்கும் The Prime Colombo, நகர்ப்புற குடியிருப்பாளர்களின் சமகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகள், தனிப்பட்ட தன்மை மற்றும் சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட வாழும் இடங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இடவெளித் திட்டமிடல் மற்றும் கட்டிட அமைப்பு முறையிலிருந்து, அதன் rooftop வாழ்க்கைமுறை வசதிகள் மற்றும் வாகன நிறுத்த ஏற்பாடுகள் வரை இக்குடியிருப்புத் திட்டத்தின் ஒவ்வொரு பரிமாணமும், அதன் கருப்பொருளில் எவ்வளவு ஈர்க்கக்கூடியதாக உள்ளதுடன், அதன் செயலாக்கத்திலும் மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட்ட ஒரு தயாரிப்பை வழங்குவதில் Prime Lands Residencies PLC கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
The Prime Colombo இன் உச்சியில், இலங்கையின் மிக உயரமான rooftop outdoor gym மற்றும் pickleball court ஆகியன அமைக்கப்படவுள்ளன. கொழும்பில் முற்றிலும் தனித்துவமான இரண்டு singular rooftop வாழ்க்கைமுறை அனுபவங்களாக இவை அமையும்.
குடியிருப்பாளர்களுக்கு அதிஉயர்ந்த ஆரோக்கியம், நகரின் பரந்த அழகிய காட்சிகள் (panoramic city views) மற்றும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்குவதன் மூலம், The Prime Colombo நகரக் காட்சியின் அனுபவத்தையே மறுவரையறை செய்யக்கூடியதாக அமையவுள்ளது.
இங்கு இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 45 மில்லியன் இலங்கை ரூபாய் முதல் கிடைப்பதுடன், ஆரம்பக்கட்ட அறிமுக விலைகளுக்காக 4 வருட வட்டியற்ற தவணைக்கட்டணத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் நான்கு வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2030 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நிறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களைப் பொறுத்தமட்டில், இந்த முகவரியின் மைய அமைவிடமானது நேரடியாகவே வலுவான வாடகைத் தேவையையும், ஈர்க்கக்கூடிய நீண்ட கால மூலதன மதிப்பேற்ற சாத்தியக்கூறுகளையும் வழங்குவதுடன், 6% க்கும் அதிகமான மதிப்பிடப்பட்ட வாடகை வருவாயையும் பெற்றுத்தரும். கொழும்பு 09 பிராந்தியத்தின் தொடர்ச்சியான போக்குவரத்து இணைப்பு மற்றும் அதன் அதீத வரவேற்பு ஆகியன இதற்குப் பக்கபலமாக அமைகின்றன.
வடிவமைப்பு மற்றும் அமைவிடத்திற்கு வழங்கும் அதே அளவிலான முக்கியத்துவத்தை வாழ்க்கைமுறை வசதிகளுக்கும் வழங்கும் ஒரு திட்டமாக The Prime Colombo திகழ்கிறது என்பதை இந்த அத்தியாவசிய வசதிகள் உணர்த்துகின்றன. முதலீட்டாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்குமேற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய தவணைக்கட்டணத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கொழும்பை சொந்தமாக்குவதற்கான ஒரு புத்திசாலித்தனமான வழியை தனித்துவமான முறையில் நடைமுறைக்கு சாத்தியமானதாக மாற்றுவதுடன், இந்த வாய்ப்பை அனைவரும் எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மையையும் மேலும் வலுப்படுத்துகின்றது.
30 வருட கால அனுபவம், 70 க்கும் மேற்பட்ட பாதுகாப்பான வீட்டு வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், இலங்கை முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட நில அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வலுவான பின்னணியுடனும், கடந்த தொடர்ச்சியான வருடங்களில் Real-Estate Asia விருதுகளில், இலங்கையின் சிறந்த வீட்டுமனை அபிவிருத்தியாளர் விருதை வென்ற பெருமையுடன் திகழும் Prime Group, நம்பகமான விநியோக வரலாற்றுடன், நுணுக்கமான தேவையுடைய வீட்டு நுகர்வோர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்த ஆழமான புரிதலையும் கொண்டு இயங்குகின்றது.



