Prime Melwa ஆசியாவின் உலகளாவிய Marina-Front கட்டடக்கலை மைல்கல் நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது

Share

Share

Share

Share

Prime Melwa Port City (Pvt) Ltd, கொழும்பு துறைமுக நகரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த marina living அனுபவத்திற்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. இது இப்பிராந்தியத்தின் மிக உயரிய கடல் முகப்பு வதிவிடத் திட்டங்கள் ஒன்றின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசியாவின் உலகளாவிய Marina Front கட்டடக்கலை மைல்கல் என அடையாளப்படுத்தப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டமானது, தெற்காசியாவில் ஆடம்பர நீர்முகப்பு வாழ்வியல் அனுபவத்தை மறுவரையறை செய்து, உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில் இலங்கையின் நிலையை உயர்த்தவுள்ளது.

எமது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பிக்கும் ஒரு தீர்க்கமான மைல்கல்லாக, உலகளாவிய ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு உருவாகும் இந்த வதிவிடத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை அறிவிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

கொழும்பு துறைமுக நகரின் மிகச் சிறந்த, மதிப்புமிக்கதோர் பகுதியில் அமையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டமானது, ஒப்பற்ற marina-front, நீர்முகப்பு மற்றும் கடல் முகப்பு வாழ்க்கை முறையை ஒரே இடத்தில் அனுபவிப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்பை வழங்குகிறது.

உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில், ஒரு திட்டத்தின் மதிப்பு எப்போதும் மூன்று நிலையான கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை அமைவிடம், கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் அதனை உருவாக்கும் நிறுவனம் ஆகியவையாகும்.

கொழும்பின் தனித்துவமான marina மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை நோக்கியவாறு அமையவுள்ள இத்திட்டமானது, கண்கவர் பரந்த காட்சிகளையும், உறுதியாக அதிகரிக்கும் மதிப்பீட்டு வளர்ச்சியையும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒப்பற்ற வாழ்க்கை முறை அனுபவத்தையும் வழங்கவுள்ளது. தெற்காசியாவின் மிகப் பெறுமதியான மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எதிர்கால நகரமான கொழும்பு துறைமுக நகருக்குள் அமைந்துள்ள Prime Melwa Port City, தடையற்ற பெருங்கடல் எல்லைகளைக் கொண்ட ஒரு தனித்துவமான marina-front அமைவிடத்தைக் கொண்டு விளங்குவதுடன், ஒரு அரிய நீர்முகப்பு வதிவிட முகவரியை உருவாக்குகிறது. இந்த விதிவிலக்கான அமைவிடமே இத்திட்டத்தை ஒரு உண்மையான தனித்துவமிக்கதோர் அடையாளமாக உயர்த்துகிறது.

இத்திட்டத்தின் வடிவமைப்பே, இந்த வளர்ச்சியை ஒரு சிறப்பான கட்டடக்கலைப் படைப்பாக உயர்த்துகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிங்கப்பூரின் P&T Singapore கட்டடக்கலை நிறுவனத்தினால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியத்தில் இதுவரை கண்டிராத அளவிலான அதிநவீனத் தன்மை, நேர்த்தி மற்றும் தூய்மையான கடல் முகப்பு வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துகிறது. காலத்தால் அழியாத கட்டடக்கலை உன்னதம், சமகால ஆடம்பரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளுக்கான எவ்வித சமரசமுமற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் பிரதிபலிக்கும் வகையில், இதன் ஒவ்வொரு அங்கமும் மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை உருவாக்கும் நிறுவனம், பலம், நம்பிக்கை மற்றும் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த சேவையுடன், நவீன ரியல் எஸ்டேட் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமாகத் திகழும் Prime Group, நாட்டின் மிக வலுவான மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான Melwa நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இப்பங்காண்மையானது, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் நவீன ரியல் எஸ்டேட் துறையின் அடுத்த கட்டத்தை புதிய பரிமாணத்தில் மாற்றி அமைக்கவுள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை தொடர்பில் Prime Group இன் இணை-தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில், அமைவிடம் என்பது எப்போதும் ஒரு திட்டத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு துறைமுக நகரானது தெற்காசியாவின் மிகச் சிறப்பான, பிரம்மாண்ட இலக்காக திகழ்கிறது. இத்தகைய துறைமுக நகருக்குள் நீங்கள் எந்தவொரு பகுதியில் முதலீடு செய்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. அது இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது; ஏனெனில், இதன் Marina Zone என்பது இந்த முழுத் திட்டத்தினதும் மிக மதிப்புமிக்க, அதிக தேவையுள்ள, அதிவேகமாக சொத்து மதிப்பு உயரக்கூடிய மற்றும் மிகவும் அரிய வதிவிட முகவரியைப் பிரதிபலிக்கிறது. எமது இந்த உயரிய திட்டமானது, மரினா முகப்பு, நீர்முகப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றையும் நேரடியாக நோக்கியவாறு அமையவுள்ள ஒரேயொரு குடியிருப்புத் திட்டமாகும். இது உயர்தர வதிவிட வாழ்க்கைத் தரத்தையும், என்றும் அழியாத முதலீட்டு மதிப்பையும் ஒன்றிணைக்கும் ஒரு உண்மையான பிரத்தியேக வாழ்க்கை முறை மற்றும் முதலீட்டு வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.” என்றார்.

விற்பனைகள் தற்போது அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தெற்காசியாவின் மிக உயரிய தேவையுள்ள மற்றும் மதிப்புமிக்க வதிவிட முகவரிகளில் ஒன்றில் தங்களது குடியிருப்புகளை உறுதி செய்துகொள்ளுமாறு கொள்வனவு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் Prime Melwa Port City அழைப்பு விடுக்கின்றது. இத்திட்டமானது, இலங்கையின் வளர்ந்து வரும் சொத்துச் சந்தைத் துறையின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், இலங்கை ரியல் எஸ்டேட் துறையை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் Prime Group நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...