RoSPA 2023 விருது விழாவில் இரண்டு தங்க விருதுகளை வென்ற MAS KREEDA

Share

Share

Share

Share

MAS க்கும் நாட்டிற்கும் இது தனித்துவமான மைல்கல்

அண்மையில் துபாயில் நடைபெற்ற 2023 RoSPA (Royal Society for the Prevention of Accidents) விருது நிகழ்வில் “சாதனை” பிரிவில் MAS KREEDA இரண்டு தங்க விருதுகளை வென்றது. தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை குறித்து இச் சாதனைகள் வழங்கப்பட்டது, MAS KREEDA Synergy மற்றும் Shadeline உற்பத்தி நிலையங்கள் ஆகியவை இந்த சாதனையின் பெருமைக்குரிய உரிமையாளர்களாவர். 67 ஆண்டுகளாக இயங்கும் RoSPA Health and Safety Awards என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகப்பெரிய தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விருது வழங்கும் திட்டமாகும். இவ் அமைப்பு, விபத்து தடுப்பு, சுகாதாரப் பிரச்சினைகள், செயல்திறன், தலைமைத்துவம், கலாச்சாரம் மற்றும் பணியாளர்களின் பங்கேற்பு போன்ற நடைமுறைகள் உட்பட பாதுகாப்பு முகாமைத்துவ அமைப்புகளில் நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.
RoSPA உலகளவில் 50க்கும் அதிக நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 2,000 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளை ஈர்ப்பதுடன், 7 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களை சென்றடைகிறது. குழு பலத்தை மேம்படுத்துவதிலும், நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது. மேலும், RoSPA விருதுகள், விபத்துகளைத் தடுப்பதற்கான உலகளாவிய அளவுகோலாக இருக்கும் அதே வேளையில், ஊழியர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்களால் மிகவும் மதிக்கப்படுகிறது.

MAS KREEDA இன் நிலைத்தன்மை வணிகப் பிரிவின் பொது முகாமையாளர் எரங்க தில்ஹான் கருத்து தெரிவிக்கையில், “இந்த இரண்டு தங்க விருதுகளையும் ROSPAவிடமிருந்து பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விருதுகள் எங்கள் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கலாச்சாரம், அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை வலுப்படுத்துவதில் தூதுவர்களாக இருக்கின்றனர்.”

தொழிற்சாலைகளில் முன்மாதிரியான சுகாதாரம், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்த விருது பாராட்டுகிறது. மேலும், நிறுவனத்தினால் அதன் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு வழக்கமாக வழங்கும் பயிற்சி, அதன் வசதிகளின் கடுமையான பாதுகாப்பு தணிக்கை மற்றும் பாதுகாப்பு மீறல்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத் தன்மை (Zero Tolerance Policy) கொள்கை உள்ளடக்கிய ஒரு விரிவான சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாக அமைப்பை செயல்படுத்தியுள்ளது. அத்துடன், நிறுவனம் அதன் விநியோகச் சங்கிலியில் புத்தாக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது, விநியோகஸ்தர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

MAS KREEDA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸியான் ஸாஹிர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருது MAS KREEDA விற்கு ஒரு சிறப்பு மைல்கல் மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் ஒரு சிறப்பு சாதனையாகும். KREEDA உடன் தொடர்புடைய அனைவரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்த விருதுகள் எங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிர்வாக அமைப்பின் செயல்திறனை உறுதிப்படுத்துகின்றன. எங்கள் குழுக்களின் நலம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் சிறந்து விளங்கும் அதேவேளையில் தொழில்துறைக்கு புதிய வரையறைகளை அமைக்கும் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சாலைகளும் ISO 45001 சான்றிதழ் பெற்றவை மற்றும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச தரத்திற்கு இணங்குகின்றன. நிறுவனம் பொறுப்பான பராமரிப்பு திட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டது, நிலையான மற்றும் பொறுப்பான நடைமுறைகளுக்கு அதன் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. MAS KREEDA இன் நிர்வாகம் IOSH Transformational Leadership திட்டத்தை நிறைவு செய்துள்ளது மற்றும் மூன்றாம் நிலை சான்றிதழ் பெற்றுள்ளது. நேர்மறையான மாற்றத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிறுவன கலாச்சாரத்தை நிறுவக்கூடிய வலுவான தலைமையை உருவாக்க இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Remote Ransomware on the Rise:...
කෘෂි යන්ත්‍රෝපකරණ සඳහා පහසු ලීසිං...
Sampath Bank Launches SL’s First...
அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும்...
இலங்கைக்கு முதல் முறையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில்...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Chevron felicitates female-owned and operated...