Samsung ஆனது Galaxy A05 மற்றும் Galaxy A05s என்பனவற்றிற்கு 12 மாதங்களுக்குள்ளாக ஒரு முறை மாத்திரம் சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை அளிப்பினை அறிமுகப்படுத்துகின்றது

Share

Share

Share

Share

தினசரி நாம் முகம் கொடுக்கும் சவால்களினை எதிர்கொள்ளும் வகையினில் வடிவமைக்கப்பட்ட புதிய Galaxy A05 மற்றும் Galaxy A05s ஆகியவற்றை Samsung நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. மேலும் அதன் பாவனையாளர்களினைத் திருப்திப்படுத்தும் வகையினில், Samsung Sri Lanka ‘Break-Free Offer ‘ இனை அறிமுகப்படுத்துவதனையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றது. Galaxy A05 மற்றும் Galaxy A05s களுக்கான முதல் 12 மாதங்களுக்குள்ளாக ஒரு முறை மாத்திரம் சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை அளிப்பினை அறிமுகப்படுத்துகின்றது. இச்சலுகையானது டிசம்பர் 31, 2023 அன்று அல்லது அதற்கு முன்னர் activation செய்யப்பட்ட தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும், குறிப்பாக இது முதல் முறையாக activation செய்யப்பட்ட தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்றும் இச்சலுகையானது கைமாற்றத் தகாததாகும்.

இவ்விசேட சலுகையினை அனுபவிப்பதற்கு, வாடிக்கையாளர்கள் மாற்றீடுச் செயல்பாட்டின் போது கையாளுகைக் கட்டணமாக ரூ.3,000 ஐ மட்டுமே செலுத்த வேண்டும். இச்சலுகையானது ஓர் உரிமை கோரலுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மற்றய சலுகைகளுடன் இதனை இணைக்கவோ, கைமாற்றம் செய்யவோ, பணமாக இதனை மாற்றவோ முடியாது. Samsung இன் சேவை நிலையமானது தகமையினை உறுதிசெய்ய IMEI ஆனது Activation செய்யப்பட்ட திகதியின் அடிப்படையில் உரிமைகோரல்களினைக் கவனமாகச் சரிபார்க்கும்.

Galaxy A05 மற்றும் Galaxy A05s என்பனவற்றினைக் கொள்வனவு செய்ய ஆர்வமுள்ள அதன் பாவனையாளர்களுக்கு சுமூகமான கொள்வனவு அனுபவத்தினை உறுதி செய்வதனை நோக்கமாகக் கொண்டு Samsung Sri Lanka ஆனது அர்ப்பணிப்புடன் செயல்ப்படுகின்றது. Smartphone களினை Online மற்றும் Offline முறைகளின் ஊடாகவும் கொள்வனவு செய்யமுடியும். Online கொள்வனவுகளினை JKOA, Singer, Softlogic, Dialog மற்றும் SLT-Mobitel என்பனவற்றிலும், Offline மூலமாக விரும்பினால், அவற்றினைத் தேர்ந்தெடுக்கப்பட்ட Samsung இன் பிரத்யேக விற்பனவு நிலையங்களான, JKOA, Singer, Softlogic, Damro, Dialog மற்றும் SLT-Mobitel என்பனவற்றில் நாடு பூராவும் தற்போது கொள்வனவு செய்யமுடியும்.

இலங்கையில், No.1 Smartphone Brand ஆக Samsung ஆனது தொடர்ந்து நான்கு வருடங்களாக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ எமது இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் கெளரவப்படுத்தப் பட்டுள்ளது என Slim Sri Lanka வின் மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து வயதினை உடையோரையும் உள்ளடக்கும் வகையில் பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், Gen Z மற்றும் மில்லினியல் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அசைக்க முடியாத Samsung இன் அர்ப்பணிப்பானது இடையறாததாகும்.

 

 

 

 

 

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...