Samsung மற்றும் Warner Bros. Pictures ஆகியோர் 8K தரத்திலான திரைப்பட Trailer களை அதன் பாவனையாளர்களின் கண்முன் கொண்டு வர ஒன்றிணைகின்றனர்

Share

Share

Share

Share

இத்தொழில் சார் கூட்டானது அனைத்து ஆயிரக்கணக்கான சர்வதேச ரீதியிலான சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரபலமான திரைப்பட Trailer களை வழங்குவதன் மூலம், முன்னெப்போதையும் விடவும், நுகர்வோரை மகிழ்விக்கும் முகமாக அதிநவீன 8K தரத்திலான திரைப்படங்களினை அவர்கள் கையாருக்கே கொண்டுவருகின்றது.

தொடர்ச்சியாகப் 17 ஆண்டுகளாக உலகிலேயே முன்னணித் தொலைக்காட்சி தயாரிப்பாளரான Samsung Electronics, ஆனது Warner Bros. Pictures உடன் ஒரு அர்த்தபூர்வமான கூட்டுவணிகச் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றன்து. இக்கூட்டுவணிகச் செயற்பாட்டினைத் தனது நியோ QLED 8K திரைகளில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்பட Trailer களைக் காண்பிக்கின்றது. இதன் மூலம் சர்வதேச ரீதியில் 65,000 க்கும் மேற்பட்ட Retail Store களில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.

“இத்தொழில் சார் கூட்டானது 8K யினை உளீற்கும் ஒரு அற்புதமான முயற்சியாகும். இது NEO QLED 8K இன் சிறப்பியல்புகளினை வெளிக்கொணருகின்றது. அது மட்டும் அல்லாது சினிமா தரத்தினில் திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதற்கு அதன் பாவனையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றது” என்று Samsung Electronics Visual Display Business இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர் Cheolgi Kim அவர்கள் கூறினார். Samsun ஆனது Warner Bros. உடன் தனது கரங்களினை கோர்த்துக் கொண்ட நிகழ்வானது Ultra – Premium TV தொழில்நுட்பம் ஊடாக அதன் பாவனையாளர்கள் தமக்குப் பிடித்த திரைப்படங்களை முழு மனநிறைவுடன் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினையும் Samsung ஆனது பெற்றுத் தந்திருக்கின்றது.

8K Content இற்கான கேள்வியினைப் பரீட்சித்துப் பார்த்து அதன் தேவைதனை நன்கு புரிந்து கொள்ளும் முகமாக, Samsung மற்றும் Warner Bros. என்பன இந்த ஆண்டின் தொடக்கக் காலப் பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 450க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை இஸ்தாபனங்களில் ‘Creed III’ Trailer ரைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக தமது கூட்டுவணிகச் செயல்ப் பாட்டினைப் பரீட்சித்துப் பார்த்தனர். இம் முயற்சியானது சர்வதேச ரீதியாகப் பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான கவனத்தையும் விருப்பார்வத்தினையும் பெற்றது. இது, அக் Content இற்கான அதிகரித்து வரும் கேள்வியினை எடுத்துக்காட்டுகின்றது. அதனைப்புரிந்து கொண்ட மாத்திரத்திலேயே , Samsung மற்றும் Warner Bros. இம் இணைந்து இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது, சர்வதேச ரீதியாக Samsung Neo QLED 8K யில் உள்ள உயர்தர Content இனைக்கொள்வனவு செய்யும் போது, “Blue Beetle, Dune: Part Two,” “Wonka” மற்றும் “Aquaman மற்றும் “The Lost Kingdom” போன்ற எதிர் காலத்தில் வரவிருக்கும் திரைப்படங்களின் கவர்ச்சிகரமான Trailer களின் வரிசைகளைக் கண்டுகளிக்கவும் முடியும் “.

Warner Bros. ஆனது பொழுது போக்குகளின் உருவாக்கம், அவற்றின் உற்பத்தி மற்றும் அவற்றின் விநியோகம் ஆகியவை தொடர்பாக சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கும் ஓர் நிறுவனமாகும். இதன் நிமித்தம் Warner Bros. Pictures உடனான Samsung இன் இக்கூட்டுவணிகச் செயல்பாடானது, Samsung இன் ரசிகர்களுக்கு உயர்தர பொழுதுபோக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8K Trailer களைக் கையருகில் கொண்டு சேர்க்க ஏதுவாக அமைந்துள்ளது.

Samsung இன் Neo QLED 8k திரைகள் TV துறையினில் தொடர்ந்தும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது. அவற்றின் தாக்கம் சர்வதேசத்திலும் உள்ள Content உற்பத்தி மட்டும் அல்லாது சில்லறை சந்தைகள் வரை சென்றடைகின்றது. மேலும் அது Neural Quantum Processor 8K மற்றும் Quantum Matrix Technology மூலம் இயக்கப்படுகின்றது, அவை மிகத்தெளிவான மனத்திற்குக் களிப்பூட்டும் விவபரங்கள், துல்லியமான படவர்ணங்கள் மற்றும் அதி-யதார்த்தத்தினை உடைய தெளிவான படத்தரத்தையும் சிறந்த அனுபவத்தையும் அதன் நுகர்வோருக்கு TV சந்தையில் வழங்குகின்றது.

Warner Bros. திரைப்படக் குழுமம் தொடர்பானது.

Warner Bros. திரைப்படக் குழுமமானது, Warner Brothers Pictures, New Line Cinema and மற்றும் Warner Bros. Pictures Animation என்பனவற்றினை இன்றைய தேதியில் உள்ளடக்கியது. Warner Bros. ஆனது சர்வதேசத்திலும் உள்ள அதன் பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு திரையிலும் அசாதாரண பொழுதுபோக்கை உருவாக்க உலகின் மிகவும் ஊக்கமளிக்கும் கதாசிரியர்களுடன் கூட்டுச் சேர்கின்றது. Warner Bros Motion Picture குழுமமானது நிறுவப்பட்டதில் இருந்தே திரைப்படத் துறையில் முன்னணியில் தொடர்ந்தும் இற்றைவரை வீறுநடை போட்டு வருகின்றது. அது மட்டும் அல்லாது ஒரு முன்னணி படைப்பாற்றல் சக்தியாகவும் தொடர்ந்தும் இருந்து வருகிறன்றது, சர்வதேசத் திரையரங்குகளில் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் திரைப்படங்கள் தொடர்பான ஒளிபரப்புத் தட்டுகளினைத் தயாரித்தும் வருகின்றது.

 

TMC Negombo successfully hosts personal...
Capital TRUST Properties Wins 5-Star...
Lankem Agro Launches Nationwide Tree...
New Media Solutions wins two...
Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...