Samsung Sri Lanka ஆனது 2024 ஆம் ஆண்டில் புத்தம் புதியதோர் ஆரம்பமாக, புத்தம் புதிய Samsung தொழில்நுட்பத்தினை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களையும் வரவேற்கின்றது

Share

Share

Share

Share

2023 ஆம் ஆண்டு நிறைவடையும் இத்தறுவாயில், Samsung Electronics ஆனது இல்லங்களுக்கான மின்னணு சாதனங்களின் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. அதன் தொழிற்பாடு, நயப்பாங்குப் பாணி மற்றும் பாவனையாளர் நட்பு என்பன தடையின்றி இணைக்கும் உயர் மதிப்பு தயாரிப்புகளுக்கு ஏற்றவிதமாக, Samsung ஆனது நுகர்வோரை, ஆரம்பித்திருக்கும் இப்புதிய ஆண்டில் தன்னோடு கை கோர்த்துக் கொண்டு சிறந்த பயணத்தினைத் தொடங்க அழைக்கின்றது.

உலகின் முன்னணி Brand களின் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான Brand Finance ஆனது, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் இல்லத்து உபகரணங்களின் Brand ஆக Samsung ஆனது தனது நிலையினை உறுதிப் படுத்தியிருப்பதன் இரகசியம் என்னவெனில், தனிச்சிறப்புவாய்ந்த அனுபவங்களினை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதும், மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அதன் தொடர்ச்சியான உறுதியான அர்ப்பணிப்புமே என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளது எனத் திடமாகக் கூறியுள்ளது. ஆம்.. ஆம் வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், தொடர்ந்தும் புத்தாக்கங்களினைப் படைப்பதன் மூலமும் இல்லங்களுக்கான மின்னணு சந்தையில் தனது முதன்மை நிலையினைத் தக்க வைத்துக் கொள்ளும் Samsung இன் உறுதிப்பாட்டினை, இம் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆனது உறுதிப்படுத்தியுள்ளது.

படத்தின் தரம் மற்றும் புத்தாக்கம் என்பனவற்றின் எல்லைகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்திக் கொண்டு வரும் Samsung ஆனது, தனது மிகப்பிந்திய புத்தம்புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளினை அறிமுகப்படுத்தி வருகின்றது. 2017 ஆம் வருடத்தில், Samsung ஆனது தனது முதல் QLED தொலைக்காட்சியினை சந்தையில் அறிமுகப் படுத்தியதன் மூலம் “Next –Generation Display ” எனும் வாக்கியத்தினை அறிமுகப்படுத்தியது. இது Quantum Dot தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தொழில்துறையில் முதல் முறையாக 100 % வர்ணத்தினைக் கொண்ட தொலைக் காட்சிப் பெட்டியினை வெளியிட்டது. 2018 ஆம் வருடத்தில், Samsung நிறுவனம் ஆனது தனது அடுத்த புதிய படைப்பான QLED 8K ஐ அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து Quantum Mini LED யின் அனுசரணையுடைய NEO QLED மற்றும் Self-Illuminating MICRO LED யினை 2021 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தியது. புதுமையான தொழில்நுட்பங்களின் இவ்வகைத் தொகுப்புகள் ஆவன ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சி படத் தரத்தினை மறுவரையறை செய்து, புத்தம் புதிய தொழில்திறன் மதிப்பாக்கத்தினையே உருவாக்கி வருகின்றது.

தொலைக்காட்சி உற்பத்தி சந்தையில் Samsung ஆனது தொடர்ந்தும் 17 வருடங்களாக முன்னணி வகிப்பதானது, நுகர்வோர் – மையத் தத்துவத்தினை பிரதானமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாவனையாளர் அனுபவங்களுடன் மிகவும் புத்தாக்கம்மிக்க தயாரிப்புகளினை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு இது ஓர் சான்றாகும். இக் குறிப்பிடத்தக்க சாதனையானது, உயர்மதிப்புக் காட்சி அனுபவங்களையும், நுகர்வோர் – மைய தத்துவ வடிவமைப்பினை வழங்குவதில் Samsung இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

சந்தையின் Samsung ஆனது வகிக்கும் முன்னணி நிலைக்கும் அப்பால், பேண்தகைமையானது எமது இல்லங்களிலிருந்து தொடங்குகின்றது என Samsung ஆனது நம்புகின்றது. அதன் புதுமையான படைப்புகள் யாவும் 20 வருட உத்தரவாதத்துடன், எமது சமையலறை மற்றும் அன்றாட சகல வாழ்க்கை உபகரணங்களுடனும் இணைக்கப் பட்டிருப்பதனால், அனைத்துக் குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடிய சகல தேவைகளுக்குமான நிலையான தீர்வுகளினை வழங்குகின்றது. Samsung இன் சலவை இயந்திரங்களுக்கான Digital Invertor Motor மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான Digital Invertor Compressor ஆகியவற்றிற்கு புரட்சிகரமான 20ஆண்டுகால உத்தரவாதத்தினையும் வழங்குகின்றது. இம்முன்முயற்சியானது நுகர்வோருக்கு சந்தோஷமான மன நிலையினை வழங்குவதற்கும், இத்தயாரிப்புகளின் நீடித்த கால பாவனைக்கும், மின்- கட்டணத்தினைக் குறைப்பதற்கும், பேண்தகைமை கொண்ட உயர்தர சாதனங்களினை உபயோகிப்பதற்கும் வாய்ப்பினை வழங்குகின்றது.

Samsung இன் மிசாரக் கட்டண சேமிப்புத்திறன் மற்றும் பேண்தகைமைக்கான அர்ப்பணிப்பு அதன் Digital Inverter தொழில்நுட்பத்தில் தெளிவாகப் புலப்படுகின்றது. இது சாதனங்களின் பயன்பாட்டினை மென்மேலும் அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாது சுற்றுச்சூழல் மாசடைதலினைக் குறைக்கின்றது மற்றும் நம்பகத்தன்மையின் மூலமும் அதன் பாவனையாளர்களுக்கு நிரந்தர நிம்மதிப் பெருமூச்சினை விட சந்தோஷமான மன நிலையினையும் வழங்குகின்றது. இவ் 20 வருடகால உத்தரவாதத்துடன், Samsung ஆனது அதன் நுகர்வோருக்கு இரண்டு தசாப்தங்களாக பராமரிப்புச் சேவை, உதிரிபாகங்களின் நீடித்துழைப்பு மற்றும் அவற்றினை இலகுவாகப் பெற்றுக் கொள்வதத்திற்கு உறுதிப்பாட்டினையும் வழங்குகின்றது.

2024 ஆம் ஆண்டில், Samsung ஆனது இலங்கை சந்தையில் தனது புதுமையான தயாரிப்புகளினை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. புத்தாக்கத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு SmartThings மூலம் இலகு பாவனைத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தி பல்வேறு பட்ட சாதனங்களின் எவ்வித தடைகளும் அற்ற ஒருங்கிணைப்பிற்கு வழிவகுக்கின்றது.

Samsung இன் புத்தாக்கம், பேண்தகைமை மற்றும் நுகர்வோர் திருப்தி ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, காலத்தால் நீடித்து நிலைத்து நிற்கும் வகையினில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுமுள்ளது. இதன் காரணமாகத் இல்லத்துகுத் தேவையான திறமையான மின்னணு சாதனங்களுக்காகத் தெடிக்கொண்டிருக்கும் அதன் நுகர்வோருக்கு இலகுவான சிறந்த தேர்வாக Samsung படைப்புகள் ஆவன அமைகின்றன. இவ்வருடப் புத்தாண்டில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் இத்தறுவாயில், Samsung இனால் மட்டுமே வழங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம், நிலையான தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் பாரம்பரியம் ஆகியவற்றின் நிகரற்ற புதிய தயாரிப்புகளின் கலவைகளினை அனுபவிக்க, Samsung ஐயே தெரிவு செய்யவும்.

 

HNB, එතෙර කාසියෙන් රට බබලන්නට...
මෙරට වාරි ප්‍රතිසංස්කරණ ඉතිහාසයේ සුවිශේෂී...
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok
MCA- C பிரிவு NDB கிண்ண...
ඔස්ට්‍රේලියානු රජයේ ජාතික සැලසුම් හේතුවෙන්...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
ශ්‍රී ලංකාවේ අභිනව නායකත්වයට සුබ...