Samsung Sri Lanka நிறுவனமானது வரவிருக்கும் Galaxy S24 தொடருக்கான முன்கூட்டிய ஆர்டர்களினை இப்போதே ஏற்றுக்கொள்வதோடு, முன்கூட்டிய ஆர்டர்களுக்கான பிரத்யேக சலுகைகளையும் வழங்கக் காத்திருக்கின்றது.

Share

Share

Share

Share

இலங்கையின் கொழும்பில், ஜனவரி 21, 2024: அன்று, சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Samsung ஆனது, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S24 தொடருக்கான முன்கூட்டிய ஆர்டர்களினை அதிகாரப்பூர்வமாக சேகரிக்கும் படலத்தினை தற்போது ஆரம்பித்துள்ளது. இவற்றுள் Galaxy S24 Ultra, Galaxy S24 Plus மற்றும் Galaxy S24 என்பனவும் உள்ளடங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளினை வழங்கும் நோக்கோடு, Galaxy S24 தொடர்களுக்கான முன்கூட்டிய சிறப்பு விலைகளினை வழங்குவதில் Samsung ஆனது பெருமகிழ்ச்சி அடைகின்றது, முன்கூட்டிய ஆர்டர்களுக்கான விலைகள் பின்வருமாறு: Galaxy S24 Ultraக்கு LKR 450,099 + VAT, Galaxy S24 Plusக்கு LKR 346,199 + VAT மற்றும் Galaxy S24க்கான LKR 276,999 + VAT.

இக்காலப்பகுதியில் Galaxy S24 தொடர் சாதனங்களினை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 வருட உத்தரவாதமும், அத்துடன் முதல் 2 ஆண்டுகளுக்குள்ளாக ஒருமுறை திரை மாற்றுதல், 3வது ஆண்டில் பகுதிச் வீனங்களில் 50% தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமும் இலவசமுமான பல்வேறு நலன்களினை அனுபவிக்க முடியும். Dialog மற்றும் Mobitel என்பன வழங்கும் Data Bundleகள் மற்றும் வாடிக்கையாளர்கள் OneDrive மற்றும் Adobe Premium என்பனவற்றிற்கு 2 மாத இலவச சந்தாக்களையும் அனுபவிக்க முடியும்.

Samsung Sri Lanka இன் நிர்வாக இயக்குனரான SangHwa Song அவர்கள் , Galaxy S24 தொடர் ஆனது Mobile கண்டுபிடிப்புகளின் அடுத்த சகாப்தத்தினை அறிமுகப்படுத்தும் வகையினில், உலகத்துடனான நமது இணைப்பில் ஒரு குறிப்பிட்டுக் கூடிய முன்னேற்றத்தினை யாவருக்கும் பறை சாற்றுகின்றது. Samsung இன் மரபு வழிப் புத்தாக்கம் மற்றும் பாவனையாளர் நடத்தை பற்றிய புரிதலின் அடிப்படையில் Galaxy AI, ஆனது அனைவரின் அன்றாட வாழ்வியலை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக Galaxy AI இன் ஆற்றலினைப் பயன்படுத்தும் சர்வதேசப் உலகளாவிய பாவனையாளர்களைக் காண்பதில் தனது மகிழ்ச்சியினை உவகை பொங்க வெளிப்படுத்தினார்.

Samsung வழங்கும் Galaxy S24 தொடரானது புரட்சிகரமான AI அம்சங்களினைக் கொண்டுவருகின்றது, பாவனையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளுடன் எவ்விதமாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றது. வடிவமைப்புத் தொடர்பாக மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும், Galaxy S23 தொடரில் காணப்படும் வளைந்த திரை வடிவமைப்பிற்குப் பதிலாக டைட்டானியத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் Ultra Model ஆனது தனித்து நிற்கின்றது. டைட்டானியத்தினை அறிமுகப் படுத்தியதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இந்த மாறுதலானது மேலதிக எடை அல்லது அதன் தடித்த தோற்றம் என்பது சேர்க்கப்படாமையானது அதன் பாவனைக் காலத்தினை அதிகரிக்கின்றது.

Galaxy S24 தொடர் ஆனது Galaxy AI உடன் இணைந்து வருகின்றது, இது பல்வேறு சாதனங்களில் AI இன் புதிய அனுபவங்களினை வழங்குகின்றது. இவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமானது Live Translate ஆகும், இது கையடக்கத் தொலைபேசியின் பயன்பாட்டின் ஒரு பகுதியாகும். இது நிகழ்நேர, இருவழி குரல் மற்றும் உரை மொழிபெயர்ப்புகளினை அனுமதிக்கின்றது. Wi-Fi அல்லது cellular இணைப்பு இல்லாவிட்டாலும், உரையாடல்கள் சாதனத்தில் இருக்கும் என்பதால், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவ்வம்சமானது சாதனத்தில் நேரடியாகச் செயல்படுகின்றது. இத்தொடரானது Split-Screen இன் நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர் பயன்முறையையும் அறிமுகப்படுத்துகின்றது.

செய்தியிடல் App களில், நுண்ணறிவு சார் உதவியாளர் முறையானது, உரையாடல் Phone களை மேம்படுத்துகின்றது, மேலும் தொடர்புகளை மிகவும் கண்ணியமாகவும் இலக்கண ரீதியாகச் சரியானதாகவும் ஆக்குகின்றது. Chat Assistant ஆனது மனம்கவர், சமூக ஊடக தலைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு அதன் திறன்களைப் பயன்படுத்துகின்றது. AI ஆல் இயக்கப்படும் Samsung Keyboard ஆனது 13 மொழிகளில் நிகழ்நேரத்தில் செய்திகளினை மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டதாகும்.

Android Auto வோடு இடையூறு அற்ற வேலைகளினை மேற்கொள்ள, Galaxy S24 தொடரில் உள்ள AI உதவியாளர் உள்வரக் கூடிய செய்திகளினைச் சுருக்கி, ETAவைப் பகிர்வது போன்ற செயல்களைப் பரிந்துரைக்கிறது மற்றும் Ready-to-use பதிவுகளினை வழங்குகிறது. இது பாவனையாளர் ஒருவர் தனது கவனமானது வேறெங்கும் சிதறாமல் வாகனத்தினைச் செலுத்துவதி ஒருமுகப்படுத்த உதவுகின்றது.

Samsung Notes ஆனது ஒரு பாரிய AI தர மேம்படுத்தலினைப் பெறுகின்றது, இது உரைச் சுருக்கங்களை தோற்றுவிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட வடிவங்களுடன் Template களை உருவாக்குவதோடு மற்றய மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளினை மேற்கொள்ளவும் அனுமதிக்கின்றது. AI ஆனது குரல் பதிவுகள் ஊடாக பல்வேறு பட்ட பேச்சாளர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும், அது மட்டும் அல்லாது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய உரை வடிவத்திலான ஒலி பெயர்த்தல்களையும் வழங்குகின்றது.

JKOA, Singer, Softlogic, Dialog, SLT-Mobitel மற்றும் NTB போன்ற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்களிடமிருந்து Galaxy S24 தொடரினை Online இல் இலகுவாக முன்கூட்டியே ஆர்டர்களினை மேற்கொள்ள முடியும். விரும்பினால் Samsung இன் தெரிவு செய்யப்பட்ட பிரத்தியேக Off Line விற்பனவு நிலையங்களான, JKOA, Singer, Singhagiri, Softlogic, Dialog, SLT-Mobitel மற்றும் NTB என்பனவற்றில் முன்கூட்டிய ஆர்டர்களினை நீங்கள் நேரிலேயே செய்து கொள்ள முடியும்.

உங்களுக்குரிய Galaxy S24 தொடர் சாதனங்கள் ஆவன தவறாது உங்களுடைய கைகளில் கிடைக்கும் முகமாக, குறிப்பிட்ட சில விற்பனவு நிலையங்களில் ஒரு சாதனத்திற்கு குறைந்தபட்ச முன்கூட்டிய ஆர்டர் தொகையாக ரூ. 5,000 வினையோ அல்லது அதன் முழுத் தொகையினையோ செலுத்தவும்முடியும். ஆம், முன்கூட்டிய ஆர்டரிகளின் நன்மைகளினைப் பெறுவதனை உறுதிசெய்யவதற்கு, பிப்ரவரி 2, 2024க்குள்ளாக முழுக் கட்டணத்தையும் செலுத்துவது இன்றியமையாததாகும்.

முன்கூட்டிய ஆர்டர்களினை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள், தமது சாதனங்களினை டெலிவரி மூலமோ அல்லது நேரிலோ சென்று அவற்றினை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என்பதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும். முன்கூட்டிய ஆர்டர் செய்யப்பட்ட சாதனங்களுக்கான டெலிவரிகளும் நேரில் சென்று அவற்றினை பெற்றுக்கொள்தலும் பிப்ரவரி 2, 2024 அன்று ஆரம்பமாகும்.

முன்கூட்டிய ஆர்டர் சலுகை ஆவன குறிப்பிட்ட சில காலத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். முன்கூட்டிய ஆர்டர்களினை மேற்கொள்ள நேரடிப்பணமாகவோ, Debit மற்றும் Credit அட்டைகள் மூலமோ செலுத்த முடியும். சலுகைகள் தொடர்பாக அவற்றில் மாற்றம் செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ Samsung ஆனது முழு உரித்தும் உடையதாகும். மேலும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி சாதனங்களின் விலைகளில் மாற்றங்களினை மேற்கொள்ள முடியும். மேலும் ஏதேனும் சர்ச்சைகள் ஏற்படும் இடத்து இலங்கையில் உள்ள நீதிமன்றங்களால் பிரத்தியேகமாக அவை கையாளப்படும்.

சிறந்து விளங்கும் வலுவான அர்ப்பணிப்புடன் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கோடு, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான Samsung ஆனது, புத்தாக்க மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களினை தனது உறுதுணையாகக் கொண்டுள்ளது.

இலங்கையில், No.1 Smartphone Brand ஆக Samsung ஆனது தொடர்ந்து நான்கு வருடங்களாக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ எமது இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் கெளரவப்படுத்தப் பட்டுள்ளது என Slim Sri Lanka வின் மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து வயதினை உடையோரையும் உள்ளடக்கும் வகையில் பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், Gen Z மற்றும் மில்லினியல் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அசைக்க முடியாத Samsung இன் அர்ப்பணிப்பானது இடையறாததாகும்.

 

 

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...