The Doc on the Tok: ஆண்களின் மனநலம் குறித்து TikTok இல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இலங்கை மருத்துவர்

Share

Share

Share

Share

ஒரு ஆணினிடம் நாம் நலம் விசாரித்தால், அவர் எப்போதும் ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்றே பதிலளிப்பார். ஆனால், அதற்கு அவர் உண்மையிலேயே நன்றாக இருக்கிறார் என்று அர்த்தமல்ல. அந்தப் பதிலுக்குப் பின்னால் அவரது மன அழுத்தம், பதற்றம் மற்றும் அவரது பொறுப்புகளின் சுமை போன்ற பல விடயங்கள் மறைந்திருக்கின்றன என்பது இரகசியமல்ல. தனக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைப்பதே ஆண்களின் வழக்கமாக உள்ளது. அது தங்களின் தன்மானத்திற்கும், ஆளுமைக்கும் இழுக்கு என்று அவர்கள் நினைப்பதுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த நிலை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஆண்களிடம் காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, ஆண்களினதும், சிறுவர்களினதும் நல்வாழ்வுக்காக ‘ஆண்கள் ஆரோக்கிய வாரம்’ (Men’s Health Week) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்கள் தங்கள் பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும் சவாலை முறியடிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சமூக ஊடகங்களே சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிறந்த தளமாகும். அதை நன்கு புரிந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த மருத்துவரான சுனெத் ராஜவாசன், தனது TikTok தளத்தின் மூலம் இந்த சவால்கள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பலராலும் ‘தி டொக் ஆன் த டொக்’ (Doc on the Tok) என்று அழைக்கப்படும் அந்த TikTok தளத்தின் மூலம், பலர் பேசத் தயங்கும் தலைப்புகள் குறித்து விறுவிறுப்பாகப் பேசி, பெருமளவிலான மக்களின் அன்பையும், ஆதரவையும் மருத்துவர் சுனெத் ராஜவாசன் பெற்றுள்ளார். சுகாதாரத் தகவல்களை எளிதில் புரியும் வகையில் வழங்குவதிலும், பலருக்குப் பேசக் கடினமாக இருக்கும் தலைப்புகளைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு முதல் மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் சுனெத், இலங்கை குடும்ப மருத்துவர்கள் கல்லூரி (CGPSL) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்ப மருத்துவர்கள் கல்லூரி (RCGP) ஆகியவற்றின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பணியாற்றி

வருகிறார். இன்று, அவரது வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைவதோடு, அவர்களுக்குக் கல்வி, துல்லியமான தகவல்கள் மற்றும் மனரீதியான ஆதரவைப் பெற்றுத் தருகின்றன.

ஆண்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?
பொதுவாக, உடலியல் ரீதியான நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது, மருத்துவப் பரிசோதனைகளைத் தள்ளிப் போடுவது, மன அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது மற்றும் அதிகப்படியான சோர்வை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்வது ஆண்களின் பழக்கமாக உள்ளது. தொடர்ந்து உழைப்பது மட்டுமே தங்களின் பொறுப்பு என்று நினைக்கும் அவர்கள், உடல் மற்றும் மன ரீதியான வேதனைகளைத் தொடர்ந்து தாங்கிக்கொள்ள சிரமப்படுகிறார்கள்.

தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, மனநலச் சவால்கள் பெரும்பாலும் அவர்களின் அன்றாடக் கடமைகள், பொறுப்புகள் மற்றும் வெளியில் காட்டும் சாதாரண தோற்றத்திற்குப் பின்னால் மறைந்து விடுகின்றன.

‘பல ஆண்களுக்குச் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்பட்டது என்னவென்றால், ‘வலிமை என்பது மௌனமாக இருப்பது’ என்பதுதான். குடும்பத்தைப் பராமரிக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், தளராமல் இருக்கவும் அவர்களுக்குப் பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், ‘உண்மையிலேயே நான் பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன்’ என்று சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சினெத் ராஜவாசன்.

மனநலம் குறித்த சமூக விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருந்தாலும், ஆண்கள் தங்கள் உணர்வுகளையோ அல்லது பலவீனங்களையோ வெளியில் வெளிப்படுத்த இன்னும் தவறிவிடுகிறார்கள். எப்போதும் வலிமையாகவும், திறமையாகவும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தியும் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் அழுத்தத்தால், வாழ்க்கை தாங்க முடியாத அளவு பாரமாக மாறும் போது கூட, உண்மையைச் சொல்வதற்கு அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. சமூகம் பெரும்பாலும் ‘உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும்’ ‘உணர்வுகளை அடக்கி வைப்பதையும்’ ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறது என்று அவர் கருதுகிறார். இதன் விளைவாக, உதவி தேடுவது தங்களின் பலவீனம் என்று நினைக்கும் பல ஆண்கள், மன அழுத்தம், பதற்றம், மன முறிவு மற்றும் துயரங்களை ரகசியமாகத் தாங்கி வாழ்கிறார்கள்.

டிஜிட்டல் தளங்கள் வழி பிறக்கும் மாற்றம்
மருத்துவர் சுனேத் பாரம்பரிய மருத்துவக் கல்வியை TikTok தளம் மூலம் டிஜிட்டல் உலகிற்கு நெருக்கமாகக் கொண்டு வந்து, ஆண்களின் மனநலம் உள்ளிட்ட சுகாதாரத் தகவல்கள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். #MensMentalHealth போன்ற ஹேஷ்டேக்குகள் மூலமும், மன நல விழிப்புணர்வுக் கருவிகள் மூலமும், மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசவும், சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

Doc on the Tok போன்ற உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு இத்தகைய வெளிப்படையான விவாதங்கள் மிகவும் முக்கியமானவை. அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும், பதிவிடும் பின்னூட்டமும், பகிர்ந்துகொள்ளும் அனுபவமும் மற்றொரு நபருக்குத் தனது உடல்நலப் பரிசோதனையைச் செய்துகொள்ளவோ, மனரீதியான ஆதரவைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது பல வருடங்களாகத் தவிர்த்து வந்த முக்கியமான உரையாடலைத் தொடங்கவோ ஒரு தூண்டுகோலாக அமைகிறது.

“ஆண்கள் ஆரோக்கிய வாரம் நமக்கு நினைவூட்டுவது போல, இது போன்ற வெளிப்படையான உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் முக்கியமானவை. அதேபோல், TikTok போன்ற சமூக ஊடகத் தளங்களால் இந்த முக்கியமான உரையாடல்கள் முன்னரை விட மிகவும் வெளிப்படையாகவும், எளிதாகவும், தொடர்ச்சியாகவும் மக்களிடையே நடந்து வருகின்றன.” என்று மருத்துவர் சுனெத் ராஜவாசன் உறுதியுடன் கூறுகிறார்.

Sri Lanka strengthens business confidence...
ජී.එස්.පී ප්ලස් යලි සලකා බැලීම...
99x Rebuilds Flood-Damaged IT Labs...
Sunshine Holdings records 16.6% YoY...
Janashakthi Life සමාගම Great Place...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය...