TikTok இன் 2025 முதல் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கை வெளியீடு

Share

Share

Share

Share

சமூக ஊடக தளமான TikTok நிறுவனம் 2025 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், பயனாளர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை வழங்குவதற்காக நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சமூக விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள தனது பயனர் சமூகத்திற்கு நேர்மறையான அனுபவத்தை உறுதி செய்வதில் TikTok தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

TikTok நிறுவனம் 2025 முதல் காலாண்டில் இலங்கையில் 45.6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை அகற்றியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 99.9% வீடியோக்கள் முன்னெச்சரிக்கையாக அகற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் 92.9% வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள்ளேயே அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 முதல் காலாண்டில் TikTok நிறுவனம் உலகம் முழுவதும் 21.1 கோடி வீடியோக்களை அகற்றியுள்ளது, இது தளத்தில் பதிவேற்றப்பட்ட மொத்த உள்ளடக்கத்தில் வெறும் 0.9% மட்டுமே ஆகும். இந்த அகற்றப்பட்ட வீடியோக்களில் பெரும்பகுதியான 184,378,987 (18.4 கோடி) வீடியோக்கள் தானியங்கி கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் திறனை வெளிப்படுத்துகிறது. மறுஆய்வுக்குப் பிறகு 7,525,184 (75 லட்சம்) வீடியோக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் சமநிலையான அணுகுமுறையை காட்டுகிறது. முன்னெச்சரிக்கை அடிப்படையிலான அகற்றல் விகிதம் 99.0% ஆகவும், கொடியிடப்பட்ட உள்ளடக்கத்தில் 94.3% பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நீக்கப்பட்ட மொத்த காணொளிகளில் கணிசமான பங்கான 30.1% TikTok இன் கொள்ளடக்கக் கொள்கைகளுடன் ஒத்துப்போகாத உணர்ச்சிகரமான அல்லது வயது வந்தவர்களுக்கான விடயங்களைக் கொண்டிருந்தன. கூடுதலாக 11.5% காணொளிகள் தளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மீறியுள்ளன. அதே வேளையில் 15.6% தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மீறியுள்ளன. மேலும், நீக்கப்பட்ட காணொளிகளில் 45.5% தவறான தகவல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன, மற்றும் 13.8% திருத்தப்பட்ட ஊடகம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்கல் அறிக்கையின் தொடர்ச்சியான வெளியீடு உள்ளடக்கம் மற்றும் கணக்கு நடவடிக்கைகளின் அளவு மற்றும் இயல்பு குறித்த புரிதல்களை வழங்குகிறது, இது TikTok இன் முழுமையான வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

Evolution Auto Officially Opens Flagship...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් 2026 මූල්‍ය වර්ෂයේ...
Sampath Bank maintains its growth...
South Asia’s first “Quit Like...
Sri Lanka rolls out the...
ඉමිහිරි රසයක් සමඟින් නැවුම් අත්දැකීමක්...
50 Years of Nourishing a...
Mahindra Ideal Finance, 2026 මූල්‍ය...
ඉමිහිරි රසයක් සමඟින් නැවුම් අත්දැකීමක්...
50 Years of Nourishing a...
Mahindra Ideal Finance, 2026 මූල්‍ය...
Sunshine Holdings celebrates International Children’s...