உலகின் முன்னணி மின்சார வாகன சந்தையில் முதலிடம் பெற்று 2023இல் விற்பனையில் சாதனைபடைக்கும் BYD BYD யின் ஆண்டு விற்பனை 3 மில்லியன் அலகுகளைத் தாண்டியது

Share

Share

Share

Share

BYD 2023-ஐ விற்பனையில் சாதனை படைத்து நிறைவு செய்துள்ளது, 3 மில்லியன் வருடாந்த விற்பனை இலக்கை தாண்டியதன் மூலமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகளாவிய புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle – NEV) விற்பனை சாதனையாளராக மாறியுள்ளது. இந்த ஆண்டு, BYD முதல் முறையாக உலகளாவிய ரீதியில் கார் விற்பனையில் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சீன சந்தையில், BYD சிறந்த விற்பனைக்குரிய கார் பிராண்ட் மற்றும் உற்பத்தியாளர் என்ற தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் 341,043 அலகுகள் விற்பனையாகியுள்ளது, இது 45% அதிகரிப்பாகும், ஆண்டு முழுவதும் மொத்தமாக 3,024,417 வாகனங்கள் விற்பனையாகி, முந்தைய ஆண்டை விட விற்பனையில் 61.9% உயர்வை எட்டியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் உலகமயமாக்கலில் முன்னேற்றம்

2023 ஆம் ஆண்டில், BYD இன் சர்வதேச சந்தையின் பிரசன்னம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்தது, ஏற்றுமதிகள் 334.2% ஆல் அதிகரித்து 242,765 அலகுகள் 6 கண்டங்களில், 70 நாடுகளில் விற்பனையாகியுள்ளது. இலங்கையில் உள்ள மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings PLC) உடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் BYD தனது பிரசன்னத்தை தெற்காசிய வலயத்திலும் வியாபித்துள்ளது.

உலகளாவிய உயர்மட்ட பங்காளிகளின் ஆதரவுடன் கூடிய BYDன் தொழில்நுட்ப வீரியமும், அர்ப்பணிப்பும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு, அதிக சூழல் நல பாதுகாப்புடன் கூடிய, வினைத்திறனான போக்குவரத்து சாதனங்களை வழங்க வழி வகுத்துள்ளது. BYDன் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை உலகளாவிய வாடிக்கையாளர்கள் பலர் விரும்புவதோடு BYD பல தயாரிப்பு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.

வலுவான சந்தை பிரதிபலிப்புடன் கூடிய விரிவாய்ப் பரவியுள்ள பிராண்ட் மட்ரிக்ஸ்

2023 ஆம் ஆண்டில், BYD தனது பிராண்ட் மட்ரிக்ஸை (Brand Matrixஐ) நிறைவு செய்தது, இதில் Dynasty Series, Ocean Series, DENZA, FANGCHENGBAO மற்றும் YANGWANG ஆகியவை அடங்கும். இந்த முன்னேற்றமானது உலகளாவிய ரீதியில் புதிய ஆற்றல் துறையில் மிகவும் விரிவான கோப்புறைகளில் (Portfolios) ஒன்றாக BYD இன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

Dynasty மற்றும் Ocean series வியக்கத்தக்க 2,877,353 அலகுகள் விற்பனையை அடைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 55.3% அதிகரிப்பைக் குறிக்கிறது. DENZA 2023 இல் 127,840 அலகுகளை விற்பனை செய்தது. DENZA D9 ஆண்டின் சிறந்த MPV விற்பனை சாதனையாளராக மாறியது. மேலும், DENZA N7 க்காக அறிமுகப்படுத்தவிருக்கும் OTA, அறிவார்ந்த வாகன தொழில்நுட்பத்தில் BYD இன் முன்னணி நிலையை வெளிப்படுத்தும் வகையில் அமையவுள்ளது.

YANGWANG மற்றும் FANGCHENBAO ஆகிய இரண்டும் 2023 இல் அறிமுகமாகி நவம்பர் மாதம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், சிறந்த சந்தை பிரதிபலிப்புகளைப் பெற்றது. YANGWANG U8 மில்லியன்-நிலை NEV பிரிவில் ஒரு சிறந்த விற்பனையாளராக உருவெடுத்த அதே நேரத்தில் BAO 5 Off-Road பிரிவில் வலுவான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

BYD ஆனது சீனாவின் NEV சந்தையில் முன்னணியில் இருந்ததை தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் முன்னனி NEV விற்பனையாளர் ஆகியுள்ளதுடன், இப்போது உலகளாவிய ரீதியில் வாகனத் துறையில் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டும் உள்ளதானது BYD புதிய ஆற்றல் துறையில் தன்னகத்தே கொண்டுள்ள திறனை வெளிப்படுத்துகின்றது. “ஒரு சிறந்த வாழ்க்கைக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை” மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன், BYD பசுமையான எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு “பூமியை 1°C ஆல் குளிர்விக்கும்” அதன் தூரநோக்கு பார்வைக்கும் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

BYD தொடர்பில்

BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளை கொண்டுள்ளது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பிலிருந்து அதன் பயன்பாடுகள் வரை, BYD ஆனது முழு அர்பணத்துடன் எரிபொருள்கள் மீதான காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் தீர்வுகளை வழங்கி உலகளாவிய ரீதியில் புதைபடிவ எரிபொருட்கள் மீதான தங்கியிருத்தலை குறைத்துள்ளது. அதன் புதிய ஆற்றல் வாகன தடயமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், மற்றும் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐ பார்வையிடவும்.

BYD Auto தொடர்பில்

2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட BYD Auto, சிறந்த வாழ்க்கைக்கான தொழில்நுட்ப புத்தாக்கங்களை பயன்படுத்துவதற்கு அர்ப்பணித்துள்ள ஒரு பன்னாட்டு உயர்தொழில்நுட்ப நிறுவனமான BYD இன் வாகன துணை நிறுவனம் ஆகும். உலகளாவிய போக்குவரத்துத் துறையின் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், BYD Auto தூய மின்சார மற்றும் Plug-in hybrid வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. புதிய ஆற்றல் வாகனங்களின் முழு தொழில்துறை சங்கிலியின் முக்கிய தொழில்நுட்பங்களான பேட்டரிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்னணு கட்டுப்படுத்தி ஆகியவற்றில் இந்த நிறுவனம் தேர்ச்சி பெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில், Blade Battery, DM-i Super Hybrid தொழில்நுட்பம், ePlatform 3.0, CTB தொழில்நுட்பம், e⁴ Platform, BYD DiSus Intelligent Body Control System மற்றும் DMO Super Hybrid System ஆகியவை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. EV மாற்றத்தில் படிம எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்திய உலகின் முதல் கார் தயாரிப்பாளராகும். மேலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக சீனாவில் புதிய ஆற்றல் பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்திலும் உள்ளது.

மேலதிக தகவலுக்கு, www.byd.com ஐப் பார்வையிடவும்.

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...