எதிர்கால ரக்பி வீரர்களின் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் Appeton

Share

Share

Share

Share

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் மற்றும் ஆரோக்கிய வர்த்தக நாமமான Appeton, எதிர்கால இலங்கை ரக்பி நட்சத்திரங்களை ஊக்குவிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும் பல மூலோபாய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. இளம் விளையாட்டு வீரர்களின் போஷாக்குக்கு தேவையான ஆதரவை வழங்கி, அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில் Appeton இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை சிறப்பம்சமாகும்.

தடகள வெற்றிக்கு தடகள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் பாடசாலைகள் மட்டத்தில் ரக்பியை வலுப்படுத்த Appeton உறுதிபூண்டுள்ளது. இளம் ரக்பி வீரர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் அவர்களின் உடல் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் Appeton Nutrition, விளையாட்டுத்திறனையும், குழு உணர்வையும் களத்திலும் வெளியிலும் ஊக்குவிக்கும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து நிரப்பியாக குறிப்பிடலாம்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, சிறுவயதிலிருந்தே பாடசாலைகளின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க நாட்டின் முன்னணி பாடசாலைலகள் சிலவற்றுடன் கூட்டுசேர்வதற்கு Appeton எதிர்பார்த்துள்ளது. இதன் கீழ் கொழும்பு வெஸ்லி கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி மற்றும் கொழும்பு இசிபத்தன கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் Appeton, இசிபத்தன கல்லூரியின் 10 வயதுக்குட்பட்ட ரக்பி அணிகளின் போஷாக்கு பங்காளியாக தேவையான ஆற்றலை வழங்குவதற்கும் செயற்படவுள்ளது. கல்லூரியின் 10 வயதுக்குட்பட்ட ரக்பி ஜெர்சிகள் மற்றும் முதல் XV பைகளுக்கு Appeton நிதி அனுசரணை வழங்கவுள்ளது.

வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பல தயாரிப்புகளை Appeton Nutrition கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இளம் ரக்பி வீரர்களின் உடல் மற்றும் மன நலனுக்காக விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் தயாரிப்புகளை வழங்குவதோடு அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், தேசத்திற்கு திறமைகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தவும் Appeton செயல்படும்.

Appeton வர்த்தக நாமத்தை முன்னிலைப்படுத்தி Hemas Pharmaceuticals பிரைவேட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பாதுகாப்பு வர்த்தகப் பிரிவின் பிரதானி திரு. ரிமாஸ் ரிஸ்வி கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் வருங்கால ரக்பி நட்சத்திரங்களை வலுப்படுத்த முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து மூலம் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான நம்பகமான தயாரிப்பான Appeton மூலம், இளம் ரக்பி வீரர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், விளையாட்டில் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர்தர மேலதிக ஊட்டச்சத்துகளை வழங்குவதற்கு நாங்கள் உதவுகிறோம். மேலும் இதன் மூலம் நாளைய திறமையான வீரர்களாக மாறுவதற்கு தேவையான பலம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை இந்த தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

இந்த கூட்டாண்மையின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், இது வீரர்களின் உடல் வளர்ச்சிக்கு அப்பால் குழுப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவும் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த குணங்களை ஊக்குவிப்பதன் மூலம், கம்பனியின் தூரநோக்குப் பார்வையானது ரக்பி வீரர்களின் குழுவிற்கு சிறந்து விளங்குவதுடன் ஒருமைப்பாடு, மதிப்பு மரியாதை மற்றும் தோழமை ஆகியவற்றை வழங்குவதாகும்.

30 வருடங்களாக இலங்கை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள Appeton இலங்கை இளைஞர்களின் போஷாக்கு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இலங்கையர்கள் Appeton Nutrition என்பது ஊட்டச்சத்து சிறப்பானது என்பதை உணர்ந்து, அதன் மூலம் வளரும் மக்களின் பல தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. நுகர்வோருக்கு புத்தாக்கமான மற்றும் தரமான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதில் உறுதிபூண்டுள்ள Appeton, பெற்றோர்கள் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான நிபுணர்களின் நம்பகமான பங்காளியாகவும் குறிப்பிடப்படலாம். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான எதிர்கால சந்ததியினருக்கான தொடக்க ஊட்டச்சத்தாகவும் Appeton அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது இளைஞர்களின் விரைவான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நேர்த்தியாக வழங்குகிறது.

Appeton ஆனது நுகர்வோருக்கு உயர்தர மேலதிக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளை வழங்கும் ஒரு புகழ்பெற்ற வர்த்தக நாமமாகும், மேலும் சிங்கப்பூர், ஹொங்கொங், மியான்மார், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நைஜீரியா மற்றும் கிரீஸ் உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

மில்லியன் கணக்கான நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்த Appeton, ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தி வாழ்க்கையை மரபுரிமையாக பெற உழைத்துள்ளது. சிறந்த மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன், அவர்கள் அனைத்து வயதினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்த அளவிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர், உடல் கட்டமைப்பு மற்றும் எடை அதிகரிப்பு மேலதிக ஊட்டச்சத்து முதல் அத்தியாவசிய மல்டி விற்றமின்கள் வரை, சுகாதார நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குகிறார்கள். உலகெங்கிலும் உள்ள நுகர்வோரின் நல்வாழ்வு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...