சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் இணைந்து, மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு நிர்வகிப்பு வழிமுறையை வலுப்படுத்த நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Share

Share

Share

Share

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது. இது Janathakshan (GTE) Ltd என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் செயல்படுத்தப்பட்டது. NRC இன் நோக்கம் நீர்கொழும்பில் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை சேகரிக்கும் செயல்முறையை வலுப்படுத்துவதன் மூலம் PET பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து மீள்சுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

நீர்கொழும்பு ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும், மேல் மாகாணத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. எவ்வாறாயினும் பொறுப்பற்ற விதத்தில் வீதிகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றுவது மற்றும் சீராக கொட்டப்படும் கழிவு நிர்வகிப்பு நடைமுறைகள் இல்லாதது நமது சுற்றுச்சூழலில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, NRC மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுத்து, மீள்சுழற்சி செய்பவர்களுக்கு அனுப்பும் முன் கழிவுகளை நசுக்கி சிரிதாக்குவதன் மூலம் மதிப்பு கூட்டுதல் செயல்முறைக்கு உட்படும். Eco Spindles போன்ற மீள்சுழற்சி செய்பவர்களிடமிருந்து கழிவுகளை கச்சிதமான நசுக்கி மற்றும் துகள்களாக மாற்றுவதன் மூலம் NRC அதிக வருவாய் ஈட்டுகிறது. MRFகள், கழிவு சேகரிப்பாளர்களின் வலையமைப்பிற்கு சாதாரண கட்டணத்தை விட சுமார் இருமடங்காக செலுத்துகின்றன. NRC ஆனது “வாங்குதல்” மையமாக செயல்படுகிறது, உள்ளூர் சமூகங்கள் தங்கள் மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை நேரடியாக MRF க்கு விற்க வழிவகுக்கிறது.

“நீர்கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவு நிர்வகிப்பை வலுப்படுத்த முன்முயற்சி எடுத்த Coca-Cola Foundation, Janathakshan (GTE) Ltd Negombo Recycling Club மற்றும் Eco Spindles ஆகிய நிறுவனங்களை நான் வாழ்த்துகிறேன். இந்நாட்டில் பாரிய பிரச்சினையாக உள்ள ஒழுங்கற்ற கழிவுகளை அகற்றுவதைக் கவனித்து, கழிவு சேகரிப்பு வலையமைப்பு பலப்படுத்தப்பட்டு, கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படுகிறது. மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் நுகர்வுக்கு பயன்படுத்துவதன் மூலம், நிலையான எதிர்காலத்தை நாம் நம்பலாம்.” என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

“இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியை அதிகரிப்பதற்கும் முறைசாரா துறை கழிவு சேகரிப்பு அமைப்பின் வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆறு MRF களில் NRC ஒன்றாகும். இலங்கைக்கான முக்கிய தேசிய முன்னுரிமையான, மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு சேகரிப்பை அதிகரிக்கும் MRF இன் இந்த மாற்றியமைக்கக்கூடிய மாதிரியை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். குறிப்பாக இலங்கையில் உள்ளுர் சமூகங்கள் மாற்று வருமான ஆதாரங்களை ஆராயும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் நிலை மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் முயற்சியை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என Coca-Cola அறக்கட்டளையின் தலைவர் Saadia Madsbjerg கூறினார்.

NRC நீர்கொழும்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதுடன் மற்றும் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, சுழற்சி பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது, ஏற்றுமதி வருவாய் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கான 12: பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வான 13: மற்றும் காலநிலை நடவடிக்கையான 14: நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உதவுகிறது.

PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியை மேம்படுத்த, பொருள் மீட்பு வசதிகளை நிறுவுதல் மற்றும் முறைசாரா துறை கழிவு சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த Coca-Cola அறக்கட்டளை சமீபத்திய ஆண்டுகளில் 790,000 அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...