சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக 10 ROSPA தங்க விருதுகளை வென்ற MAS KREEDA

Share

Share

Share

Share

உலகளாவிய ஆடைத் துறையில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான MAS Holdingsஇன் துணை நிறுவனமான MAS KREEDA, அண்மையில் மேலும் பல தனித்துவமான சாதனைகளை அடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான தமது சுகாதார மற்றும் பாதுகாப்பு செயல்திறன் கொண்ட விபத்துக்களை தடுப்பதற்கான சமூகத்தின் (The Royal Society for the Prevention of Accidents -ROSPA) 10 தங்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது.

துபாயில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின் போது, MAS KREEDA ஆனது பின்வரும் பத்து மூலோபாய வணிக பிரிவுகளை (SUBs) உள்ளடக்கிய தங்க விருதுகளை வென்றது. இதன்படி Kreeda Balangoda Kreeda Methliya, Kreeda Shadeline, Kreeda Synergy, Kreeda Vaanavil, Kreeda Campus, Kreeda Al Safi Sahab, Kreeda Al Safi Dulayl, Kreeda Al Safi Madaba, Kreeda Arya 2 ஆகியன இந்த அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்க விருதுகளைத் தவிர, MAS இன் மற்றொரு துணை நிறுவனமான Bodyline (Pvt) ROSPA விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதையும் வென்றது.

MAS KREEDA இன் பேண்தகைமையான வர்த்தக பிரிவின் பொது முகாமையாளர் எரங்க தில்ஹான் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதுகள் பணியிடத்தில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு MAS இன் அர்ப்பணிப்பை நிரூபித்துக் காட்டுவதுடன், இது நடைமுறையில் ‘மக்களுக்கு முதலிடம்’ கொடுப்பதையும் உறுதியளிக்கிறது. ஆடை உற்பத்திக்கு அதிக இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், அதனுடன் பணிபுரியும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது எங்கள் பொறுப்பு.” என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த எரங்க, “MAS உடன் இணைந்த ஒவ்வொரு பிரிவுக்கும் ROSPA இன் தங்க விருதுகள் பெற்றுக்கொண்டமையானது, அணிகளுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் சர்வதேச அளவிலான பணியிடத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இத்தகைய சிறப்பைப் பேணுவதற்காக விருது பெற்ற பிரிவுகள் குறித்து நாங்கள் பெருமையடைவதுடன் எதிர்காலத்திலும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு கலாச்சாரம் மூலம் தொழில்துறையில் உயர் வரையறைகளை அமைக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என கூறினார்.

UK இன் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விருதுகள் திட்டமான ROSPA விருது வழங்கும் நிகழ்வு இந்த ஆண்டு 68வது முறையாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளீர்ப்பதுடன், இது 7 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றது. அனைத்து துறைகளிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

ஆடைத் துறையில் செயல்படும் உலகளாவிய வர்த்தக நாமங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் (global brands & customers), பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக உயர் தரங்களை நிர்வகிக்கும் உற்பத்தியாளர்களுக்கான அளவுகோலாக ROSPA வை கருதுகின்றனர்.

MASஇன் துணை நிறுவனங்களின் பணியிட பாதுகாப்பு சிறப்பிற்காக விருதுகளை வென்ற வரிசையில், புதிய விருதுகளாக ROSPA கருதப்படுகிறது. மேலும், MAS KREEDA ஆனது 2023 இல் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார சிறப்பு விருதுகளில் பல விருதுகளை வென்றுள்ளது. ISO 45001 சான்றிதழ், IOSH, UK உடனான OSH Transformational Leadership திட்ட செயலாக்கம், முதிர்ந்த பாதுகாப்பு மதிப்பீட்டு கலாச்சாரம் மற்றும் சிறந்த இயந்திர பாதுகாப்பு நடவடிக்கைகளானது நிறுவனத்தின் மிகவும் நுட்பமான பாதுகாப்பு செயற்பாட்டிற்கான சான்றாக விளங்குகின்றது.

 

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...
BYD Automobile සමාගමේ ප්‍රකාශය –...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Sampath Bank and NCE Empower...