இலங்கை – நுகர்வோர் மின்னணு மற்றும் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Samsung, நுகர்வோரிடையே மிகவும் பிரபலமான Galaxy A வரிசையின் புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியான Galaxy A06ஐ இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய Galaxy A06, உயர்தர அம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளருக்கும், அன்றாட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துகின்ற பயனர்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
உயர்மட்ட அம்சங்களுடன் பெரும்பாலான நுகர்வோரால் எளிதில் வாங்கக்கூடிய வகையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்ப சிறப்பம்சங்களை வழங்குவதில் Samsung இன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அழகான வடிவமைப்புடன் புதுமையான தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் Galaxy A06, ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் இருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து சேவைகளையும் அனுபவிக்கும் வசதியை வழங்குகிறது.
6.7″ HD+ PLS LCD அகலமான திரையைக் கொண்ட Galaxy A06, வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை எளிதாகக் கையாளும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் 60Hz புதுப்பிப்பு வீதம் பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க முடிகிறது. 50MP பிரதான பின்புற கேமராவுடன் கூடிய இது, தெளிவான மற்றும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுப்பதற்கான நவீன கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள பயனர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதற்காக 2MP Sensor உம் உள்ளது. இது தொழில்முறை தரத்திலான புகைப்படங்களை உருவாக்க மிகவும் முக்கியமானது. மேலும், அதன் 8MP முன்புற கேமரா தெளிவான மற்றும் கவர்ச்சிகரமான செல்ஃபிகளை எடுத்து சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் திறனை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.
இந்த சிறப்பு ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மற்றொரு சிறப்பம்சம் அதன் செயல்திறன். Helio G85 செயலியுடன் கூடிய இது பல பணிகளை செய்வதோடு, gaming அல்லது streaming இற்கு வசதியான அனுபவத்தையும் வழங்குகிறது. 6GB RAM மற்றும் 128GB உள்ளக சேமிப்பகத்துடன் கூடிய இதன் சேமிப்பு திறனை 1TB வரை விரிவுபடுத்த முடியும் என்பதும் ஒரு சிறப்பம்சம். பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் மற்றொரு வசதியாகக் குறிப்பிடலாம்.
மேலும், இந்த ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் வடிவமைப்பும் பயனருக்கு மிகுந்த வசதியை வழங்குகிறது. 8.0மிமீ தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொண்ட இதனை பாதுகாப்பாக பிடிக்க முடியும். அதன் பக்கவாட்டு தோற்றமும் பாதுகாப்பு உறையும் எந்த தடையுமின்றி பயன்படுத்த வாய்ப்பளிப்பதோடு, அதன் நீடித்த உபயோகத்தையும் உறுதி செய்கிறது. மேலும் இரண்டு கட்ட OS புதுப்பிப்புகள் மற்றும் நான்கு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட Galaxy A06 ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி நீண்டகால மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பது உறுதி.
வாடிக்கையாளர்களுக்கு இந்த அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட Galaxy A06 ஐ மூன்று மாதிரிகளில் வாங்க Samsung வாய்ப்பளித்துள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பகம் கொண்ட Galaxy A06 கையடக்கத்தொலைபேசி 42,009 ரூபாவுக்கும், 4GB RAM + 128GB சேமிப்பகம் கொண்ட Galaxy A06 கையடக்கத்தொலைபேசி 48,089 ரூபாவுக்கும், 6GB RAM + 128GB சேமிப்பகம் கொண்ட Galaxy A06 கையடக்கத்தொலைபேசி 54,159 ரூபாவுக்கும வாங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இது மாணவர்கள், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நம்பகமான, தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை தேடும் எவருக்கும் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Samsung அறிமுகப்படுத்தியுள்ள Break-Free Offer மூலம் 12 மாதங்கள் வரை ஒருமுறை இலவசமாக ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் திரையை புதுப்பித்துக் கொள்ளவும், 15,531 ரூபா வரை சேமிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர் SangHwa Song, ‘அனைவருக்கும் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு Galaxy A06 மூலம் நன்கு நிரூபணமாகியுள்ளது. உயர்தர ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை மலிவு விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் உயர்தர கேமரா, நீண்ட பேட்டரி வாழ்நாள் மற்றும் உயர் திரை செயல்திறன் எங்கள் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.
இந்த புதிய அறிமுகத்துடன், ஸ்மார்ட் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி சந்தையில் தனது சிறப்பை மேலும் முன்னேற்றிய Samsung, பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ற தரமான மற்றும் மதிப்புமிக்க புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக செயல்படுகிறது.
வாங்குவதற்கு முன், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பிற்காக Samsung தயாரிப்பு பேக்கேஜிங்கில் ஒட்டப்பட்டுள்ள ர் Hologram ஸ்டிக்கரை சரிபார்ப்பதன் மூலம், Samsung அங்கீகரிக்கப்பட்ட உண்மையான விற்பனை முகவரிடமிருந்து வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள Samsung இலட்சிணை காட்சிப்படுத்தப்பட்டுள்ள John Keells Office Automation மற்றும் Softlogic Mobile Distribution இடங்களிலும், Singer, Singhagiri மற்றும் Damro/Network Partner Dialog போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்களிடமிருந்தும் Galaxy A06-ஐ வாங்க முடியும்.