ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சந்தைப் போட்டி இன்றியமையாதது: JAAF தலைவர் ஷரத் அமலியன்

Share

Share

Share

Share

Economic Dialogue’: IMF and Beyond தொடர்பில் பட்டயக் கணக்காளர் மன்றத்தின் முக்கிய பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவின் உறுப்பினராக, இலங்கையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைப் பேணுவதற்கு சந்தைப் போட்டியை ஊக்குவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) தலைவர் ஷரத் அமலியன், வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் ஆடைத் தொழில்துறையின் செயற்பாடுகளைத் தொடர இலங்கையின் திறமையின் காரணமாக, சர்வதேச கொள்வனவாளர்களின் நம்பிக்கையைப் பேண முடிந்ததாக அமலியன் சுட்டிக்காட்டினார். கோவிட் தொற்றுநோய்களின் போது ஆடைத் தொழிலை ஒரு “அத்தியாவசிய சேவையாக” பரிந்துரை செய்ய அரசாங்கத்தின் ஆதரவு நம்பிக்கையைத் தூண்டும் சூழலை உருவாக்குவதில் முக்கியமானது என தெரிவித்தார்.

தற்போது ஆடைத் துறை ஆர்டர்களில் 20-25% வீழ்ச்சியைக் காட்டுவதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (SMEs) பாதித்துள்ள நுகர்வோர் சில்லறை சந்தையில் சமீபத்திய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதியை எளிதாக்கும் சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்று அமலியன் குறிப்பிட்டார். இலங்கைக்கு அண்மித்த நாடுகள் வழங்கியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வசதியான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார். ஏற்றுமதி துறையில் போட்டித்தன்மையை பேணுவதற்கு வலுவான ஆதரவை வழங்கிய வர்த்தமானி அண்மையில் இரத்துச் செய்யப்பட்டமை ஏற்றுமதி துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போது வாடிக்கையாளர் சில்லறை விற்பனையில் சில தடைகள் உள்ளன, ஆனால் நாம் போட்டித்தன்மையுடன் முன்னேற வேண்டும். இங்கு நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறந்த நிலையில் வைத்திருக்கவும், வணிக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான சூழலை உருவாக்கவும் வலுவான தேவை உள்ளது. இப்போது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், உலகளாவிய ஆடைத் துறையில் எங்களின் நிலையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பை நாங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிசெய்கிறோம்.” என அமல்யன் கூறினார்.

இலங்கையின் முன்னேற்றத்திற்காக வர்த்தக நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதுடன் போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவது அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பிரதான உரையில் தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் முதலீட்டுக்கான தடைகளை நீக்கி, அதிக போட்டித்தன்மை கொண்ட சமூகப் பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்கும், பிராந்தியத்தில் பரந்த பொருளாதார ஒத்துழைப்பில் இணைந்து கொள்வதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த ‘Economic Dialogue’: IMF and Beyond தொடர்பான பட்டயக் கணக்காளர் மன்றத்திற்கு அரசியல்வாதிகள், அரசு மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Sampath Bank Partners with Home...
HNB කළමනාකාර අධ්‍යක්ෂ/ප්‍රධාන විධායක නිලධාරී...
ශ්‍රී ලංකාවේ කෘෂි ක්ෂේත්‍රය සවිබල...
FitsAir Celebrates Three Years of...
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்...
Softlogic Life in Asia’s Top...
Coca-Cola, 2025 ICC කාන්තා ලෝක...
Sophos report finds education sector...
Softlogic Life in Asia’s Top...
Coca-Cola, 2025 ICC කාන්තා ලෝක...
Sophos report finds education sector...
RIUNIT Apartment Market Analysis: Colombo...