கட்டான தொழிற்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கண்டனம் தெரிவித்துள்ள கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்

Share

Share

Share

Share

கட்டானாவின் ஹல்பேயில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மீது தனிநபர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 30, 2023), கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஓமானிய பிரஜையான முகாமைத்துவ பணிப்பாளரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று மேற்கொண்ட இந்த சட்டவிரோதமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதினால் முகாமைத்துவப் பணிப்பாளரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) நிறுவனமான இந்த தொழிற்சாலையினால் 300 மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஆடைத் தொழிலில் துறையின் பாரிய அமைப்பாக, இதுபோன்ற வன்முறைச் செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்ட அமுலாக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, சட்டத்தினை நிலைநிறுத்தவும், இந்தத் தாக்குதலைத் தூண்டியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்வும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எமது அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இந்த விவகாரம் நாட்டின் சட்டங்களின்படி அமைதியான முறையில் தீர்வுகாணும் வரை பொறுமையோடு காத்திருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.” என கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

සංජීව් හුලුගල්ල මහතා Cinnamon Life...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக...
The Jewel in Colombo’s skyline...
නව ගිලන් රථ දෙකක් පරිත්‍යාග...
Softlogic Life honours its best...
The Jewel in Colombo’s skyline...
නව ගිලන් රථ දෙකක් පරිත්‍යාග...
Softlogic Life honours its best...
ශ්‍රී ලංකාවේ සුව සේවා අංශයේ...