ஜனசக்தி லைஃப், பணியிட மனிதநேயத்தை உயிர்காக்கும் சமூக நடவடிக்கையாக மாற்றுகிறது

Share

Share

Share

Share

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், சமீபத்தில் சமூக நலன் மற்றும் சுகாதார ஆதரவிற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இரத்த தான முகாம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்தது. Excel World இல் நடைபெற்ற இந் நிகழ்வு, நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் நலன்புரிக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது. இது, நிறுவன சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் பணியிட மனிதநேயத்தை உயிர்களை காப்பாற்றும் செயலாக மாற்றுகிறது.

இந் நிகழ்வில் ஜனசக்தி லைஃப் மற்றும் ஜனசக்தி ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறை மற்றும் தொழில் பங்குதாரர்கள் பெருமளவில் பங்கேற்று, கூட்டு சமூக உணர்விற்கு வலிமையான சான்றை உருவாக்கினர். இந்த ஒற்றை முயற்சியில், தாராள மனதுடைய 65 கொடையாளர்கள் வழங்கிய 29,000ml இற்கும் அதிகமான இரத்தம் மூலம் சுமார் 200 உயிர்களைக் காப்பாற்றலாம். ஏனெனில், ஒவ்வொரு யூனிட் இரத்தமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூன்று நோயாளிகளுக்கு பயனளிக்கும்.

“உண்மையான நிறுவன வெற்றி என்பது வணிகச் சாதனைகளால் மட்டுமல்ல, இலங்கையர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தேவையுள்ள மற்றும் சமூகத்திற்கு உகந்த செயல்களை நிறைவேற்றுவதன் மூலமே அளவிடப்படுகிறது என நாங்கள் ஜனசக்தியில் நம்புகிறோம்.” என ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே அவர்கள் தெரிவித்தார். “இந்த இரத்த தான முகாம், கருணை மற்றும் சேவை ஆகிய எங்களின் முக்கிய விழுமியங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் வணிகங்கள், சுகாதாரம் மற்றும் சமூக நலனில் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு காரணமாக திகழ முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.” என்றார்.

இரத்தத்தை செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால், ஒவ்வொரு தானமும் மதிப்புமிக்கதாக மற்றும் ஈடு செய்ய முடியாத பரிசாக அமைகிறது. எனவே, இந் நடவடிக்கை ஒரு மிக முக்கிய, தேசியத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அவசர மருத்துவச் சூழ்நிலைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் முக்கிய சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு தன்னார்வ இரத்த தானங்களில் சார்ந்துள்ள நாட்டில், ஜனசக்தி லைஃப்பின் இம் முயற்சி தேசிய சுகாதார உட்கட்டமைப்பை நேரடியாக வலுப்படுத்துகிறது.

“எங்கள் அணியின் உற்சாகமான பங்கேற்பையும், பரந்த சமூகத்தின் பங்களிப்பையும் கண்டு நாம் பெருமையடைகிறோம்.” என ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத் தலைவர் ஷமிந்திர திஸாநாயக்க குறிப்பிட்டார். “இம் முன்னெடுப்பு அக்கறை மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. முக்கிய காரணங்களுக்காக நாம் ஒன்று கூடும்போது, நமது பணியிடத்தைத் தாண்டி, நாடெங்கிலும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருகிறோம்.” என்றார்.

இந்த முன்னெடுப்பின் வெற்றியானது, சமூகப் பொறுப்புள்ள ஒரு முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃபின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றது. அத்துடன், மூலோபாய நிறுவன சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள் எவ்வாறு குறிப்பிடத்தக்க சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஊழியர்களின் ஈடுபாட்டை வளர்த்து, அர்த்தமுள்ள செயல்கள் மூலம் நிறுவனத்தின் நற்பெயரையும் வலுப்படுத்த முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.

ஜனசக்தி லைஃப் பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...