ரூபாய் மதிப்பின் மாற்றம் உலகளாவிய அழுத்தங்களைப் பிரதிபலிக்கிறதே தவிர, பொருளாதார பலவீனத்தை அல்ல; மேலும் இது ஏற்றுமதி போட்டித்திறனை வலுப்படுத்துகிறது என்று JAAF கூறுகிறது

Share

Share

Share

Share

டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிழப்பின் அண்மிய போக்குகள் குறித்து ஒன்றிணைந்த ஆடை ஏற்றுமதி சங்கத்தின் கவனமும் திரும்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ரூபாயின் மதிப்பிழப்பு வெறுமனே பொருளாதாரப் பலவீனத்தைக் காட்டிலும் உலகளாவிய நிகழ்வுகள் சார்ந்த சூழலில் ஆராயப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கின் போர்ச் சூழல், உலக மசகு எண்ணெய் விலைகளின் உயர்வு மற்றும் கப்பல் கட்டணங்களின் உயர்வு ஆகியன இதற்கு முக்கிய காரணிகளாக மாறியுள்ளன.

டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிழப்பு எந்த விதத்திலும் இலங்கையின் பொருளாதார செயல்திறனின் பின்னடைவாக விளக்க முடியாது எனக் கூறும் ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம், இது குறித்து வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க அவர்களும் கூறுகையில், மாற்று விகிதம் ஒரு பொருளாதாரத்தின் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோல் அல்ல என்றும், ரூபாயின் மதிப்பிழப்பால் பொருளாதாரத்திற்கு சில நேர்மறையான காரணிகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டுவது போல, ஒரு நாடாக இந்த நிலைமையை நாம் தனித்து எதிர்கொள்ளவில்லை, கடந்த சில வாரங்களில் இந்திய ரூபாயும் மசகு எண்ணெய் விலை உயர்வு காரணமாக டொலருக்கு எதிராக இவ்வாறு மதிப்பிழந்துள்ளது.

இதற்கு தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறிய மூலதனமும், அமெரிக்க டொலரின் வலிமையும் காரணமாக அமைந்தன என்றும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டுகிறது. டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 4.8% மதிப்பிழந்த நிலையில், இந்திய ரூபாய் 6.2% ஆகவும், இந்தோனேஷியன் ரூபியா நாணய அலகு 5.2% ஆகவும் மதிப்பிழந்துள்ளது. எனவே, டொலருக்கு எதிராக ஏனைய நாணய அலகுகளின் மதிப்பிழப்பு உலகளவிலும் பிராந்திய ரீதியிலும் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் நிலைமையாகும் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலைமையைப் போலன்றி, 2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்டது ஒரு உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியாகும் என மத்திய வங்கி நினைவூட்டுகிறது.

ரூபாயில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையற்ற தன்மையை நாம் சரியான சூழலுக்கு அமைவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை இலங்கைக்கு மட்டும் தனித்துவமானதும் அல்ல. உலகளாவிய காரணிகள், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற சூழல், தொடர்ந்து உயரும் மசகு எண்ணெய் விலை, மற்றும் அதிகரிக்கும் கப்பல் கட்டணங்கள் போன்ற காரணிகள் இப்பிராந்தியத்தின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நாணய அலகுகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதன் காரணமாக, அந்த நாடுகளின் நாணய அலகுகள் டொலருக்கு எதிராக மதிப்பிழக்கின்றன. இந்தியா உள்ளிட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ளும் சில நாடுகள், தமது நாணய அலகு மதிப்பிழப்பை அனுமதித்தவாறு, உலகளவில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மாற்றங்களுக்கு வசதி செய்துகொண்டிருக்கின்றன” என ஒன்றிணைந்த ஆடைச் சங்கத்தின் தலைவர் ஃபீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ரூபாய் மதிப்பிழந்த போதிலும், தற்போது நிலவும் பொதுநிதி நிர்வாகம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை, அத்துடன் நிதிப் பொறுப்புணர்வை அப்படியே பேணிவந்தால், ஏற்றுமதிப் பொருளாதாரம் வலுப்பெறுவதற்கும் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்தன்மையைப் பேணுவதற்கும் முடிவதன் மூலம், இலங்கையின் வெளிப்புற நிலைமை மேலும் சிறப்படையும் என்றும் தெரிவித்தார்.

ரூபாயின் மதிப்பிழப்பு காரணமாகவே பொருளாதாரம் சரிந்துவிடும் என்று கூறுவது உண்மையல்ல. ஆடை போன்ற ஏற்றுமதித் துறைகளுக்குப் போட்டித் தன்மையான மாற்று விகிதம் இருப்பதன் மூலம், ஏற்றுமதிகள் மிகவும் போட்டிக் கூடிய மட்டத்தை அடைகின்றன. இதன் காரணமாகவே வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்படுதல், ஏற்றுமதி வருவாய் வலுப்பெற்று மேலும் விரிவான பொருளாதார நன்மை கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டலாம். வெளிநாட்டு நாணயத்தைக் கொண்டு வந்து வெளிநாட்டு இருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கு இந்த வேளையில் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது” என்று ஃபீலிக்ஸ் பெரேரா மேலும் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் சுட்டிக்காட்டுவதைப் போல, இந்த வேளையில் எமது இலக்காக இருக்க வேண்டியது வாங்குவோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல், தவறான முன்னறிவிப்புகளுக்குச் செல்வதைத் தடுத்தல், மற்றும் ஏற்றுமதி வருவாய் ஈட்டும் தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகும். போட்டித்தன்மை வாய்ந்த மாற்று விகிதங்கள், நிலையான கொள்கைகள், திறமையான கப்பல் மற்றும் விமானச் சரக்கு நடைமுறைகள் மற்றும் இயக்கச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற காரணிகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் செயல்முறையைப் பாதுகாத்துக்கொள்ளவும், அதேவேளை உலகளாவிய சந்தையில் இலங்கையின் நிலையை வலுப்படுத்திக்கொள்ளவும் முடியும் என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...