ஹெல்த்கார்ட் வலையமைப்பை விரிவுபடுத்தும் 17ஆவது கிளை கல்கிசையில் திறப்பு

Share

Share

Share

Share

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சுகாதார சேவைப் பிரிவைச் சேர்ந்த, இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் நலன்புரி நுகர்வோர் சேவை வலையமைப்பான ஹெல்த்கார்ட், தனது 17வது கிளையை கல்கிசை நகரில் திறந்து தனது வணிக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட, நம்பகமான மருந்துச் சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு ஹெல்த்கார்ட் நிறுவனம் வழங்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது நன்கு எடுத்துக்காட்டுகிறது.

ஹெல்த்கார்ட் நிர்வாகம் மற்றும் அந்தக் கிளையின் ஊழியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் புதிய கிளை திறப்பு விழா, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் மற்றும் குழுமத்தின் தலைமை மனித வள மற்றும் நிறுவனத் தொடர்பு அதிகாரி மிஷெல் சேனாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தரமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தயாரிப்புகளை நுகர்வோர் மிகவும் எளிதாக வாங்குவதற்கு வாய்ப்பளிப்பதுடன், அவர்களுக்கு மிகவும் நட்பான மற்றும் பொருத்தமான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஹெல்த்கார்ட்டின் வணிகத் திட்டங்களில் மற்றொரு சிறப்பு நடவடிக்கையாக இந்தப் புதிய கிளையைக் குறிப்பிடலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், ஒவ்வொரு நுகர்வோரின் தனிப்பட்ட தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஹெல்த்கார்டின் தனித்துவமான “Purple Service” மாதிரியாகும். அதன் மூலம் நுகர்வோருக்குத் தேவையான ஆலோசனைகள், நட்பான சேவை மற்றும் மருந்துகளின் தரம் தொடர்பான உயர் தரத்தை உறுதிப்படுத்தி, நம்பிக்கை மற்றும் வசதி நிறைந்த தனித்துவமான சேவை அனுபவத்தை வழங்குவதில் ஹெல்த்கார்ட் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

புதிய கிளை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற, சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் அவர்கள் குறிப்பிடுகையில், “கல்கிசை நகருக்கு எங்கள் வணிக வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளமை, தரமான சுகாதார சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது. நுகர்வோரை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் எமக்கே தனித்துவமான ‘Purple Service’ சேவை மாதிரியின் மூலம், ஒவ்வொரு ஹெல்த்கார்ட் கிளையிலும் நம்பகமான மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் பொருத்தமான தனித்துவமான சேவை அனுபவத்தை வழங்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தொிவித்தார்.

இலங்கையின் மருந்தக விற்பனைத் துறையில் நம்பகமான பெயரைப் பெற்றுள்ள ஹெல்த்கார்ட், தனது உயர் தயாரிப்பு தரங்கள் மற்றும் சிறந்த நுகர்வோர் சேவையை தொடர்ச்சியாக பேணிக்கொண்டு, தனது கிளை வலையமைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. கல்கிசை நகரில் திறக்கப்பட்ட இந்தப் புதிய கிளை அந்த அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது – மேலும் வர்த்தக நாமத்திற்கே தனித்துவமான சேவை அனுபவத்தை பல நுகர்வோருக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கும், இலங்கை முழுவதும் தரமான சுகாதார சேவைகளை எளிதாக அணுகக்கூடிய ஒன்றாக மாற்றும் நீண்டகால நோக்கத்தை அடைவதற்கும் இந்த ஆரம்பம் நல்லதொரு பங்களிப்பை வழங்கும்.

வடக்கிலும் கால்பதித்தது BYD: விற்பனை, சேவை...
Atlas Axillia වෙතින්, ශ්‍රී ලංකාවේ...
‘Exporters’ Forum 2026’ හරහා ශ්‍රී...
இலங்கையின் படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை...
Geoffrey Bawa Moonamal Award Convenes...
ஹெல்த்கார்ட் வலையமைப்பை விரிவுபடுத்தும் 17ஆவது கிளை...
Sunshine Holdings celebrates 29 wins...
Capital Trust Holdings joins European...
ஹெல்த்கார்ட் வலையமைப்பை விரிவுபடுத்தும் 17ஆவது கிளை...
Sunshine Holdings celebrates 29 wins...
Capital Trust Holdings joins European...
A Drizzle of Caramel, a...