140 ஆண்டுகால சுவைமிகு நினைவுகளுடன், இலங்கையில் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Coca-Cola

Share

Share

Share

Share

உலக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள Coca-Cola, வெறும் குளிர்பானம் என்ற வரம்பைத் தாண்டி, கடந்த 140 ஆண்டுகளாக நுகர்வோரின் பேராதரவைப் பெற்ற உலகளாவிய வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி, அட்லாண்டாவில் உள்ள ‘ஜேக்கப்ஸ்’ (Jacobs) மருந்தகத்தில் டாக்டர் ஜோன் பெம்பர்டன் (Dr. John Pemberton) என்பவரால் முதன்முறையாக நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த Coca-Cola-வின் பயணம் ஆரம்பமானது. அந்த வகையில், இலங்கையிலும் பல தலைமுறைகளின் நம்பிக்கையை வென்றுள்ள வர்த்தக நாமமான Coca-Cola, உள்நாட்டில் 65 ஆண்டுகால பெருமைமிக்க பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நீண்ட காலப்பகுதியில், இலங்கை நுகர்வோரின் ஒவ்வொரு சிறப்பான தருணங்களையும் கொண்டாடும் ஒரு முக்கிய அங்கமாக Coca-Cola விளங்கி வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இக்கொண்டாட்டம் இன்னும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை, குடும்பப் பாரம்பரியங்கள் மற்றும் தலைமுறைகளைக் கடந்த கொண்டாட்டங்களுடன் பின்னிப் பிணைந்து, நாட்டை புத்துணர்ச்சியூட்டும் தனது 65 ஆண்டுகால வெற்றிகரமான பயணத்தையும் கோகா-கோலா இவ்வாண்டு பூர்த்தி செய்கிறது.

ஒரு சாதாரண கண்ணாடி குவளையிலிருந்து ஆரம்பமான கோகா-கோலாவின் பயணம், இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், நாளொன்றுக்கு 2.2 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வுகளுடன் உலகின் மிகவும் பிரபலமான வர்த்தக நாமங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. அதன் தனித்துவமான சிவப்பு-வெள்ளை நிற அடையாளம், பிரசித்தி பெற்ற போத்தல் வடிவம் மற்றும் பிரதியீடு செய்ய முடியாத சுவை என்பன, கலாசாரங்கள் மற்றும் கண்டங்களைக் கடந்து மக்களின் இணைப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளன.

இலங்கையில் 65 ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த கோகா-கோலா, வெறும் தாகம் தீர்க்கும் பானமாக மட்டுமன்றி, வாடிக்கையாளருடன் ஒரு ஆழமான உறவைக் கட்டியெழுப்பியுள்ளது. சித்திரைப் புத்தாண்டு மற்றும் நத்தார் பண்டிகை கால உணவு மேசைகள் முதல், விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டிகள், பயணங்களின் இடையிலான தங்குமிடங்கள், திருமண விழாக்கள் மற்றும் அன்றாட குடும்ப உணவுகள் வரை கோகா-கோலா எப்போதும் ஒரு பரிச்சயமான மற்றும் நம்பிக்கைக்குரிய அங்கமாக இருந்து வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக, நாட்டின் வளர்ச்சியோடு இணைந்து பயணிக்கும் அதேவேளை, சமூக மேம்பாடு, வாழ்வாதாரங்களை உருவாக்குதல், சுழற்சிப் பொருளாதாரம், இளைஞர் மேம்பாடு மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகளில் முதலீடு செய்தல் போன்றவற்றின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், நுகர்வோருக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘எப்போதும் கோகா-கோலாவைத் தேர்ந்தெடுப்பதற்கு நன்றி’ (Thank You for Always Picking Coca-Cola) என்ற நெஞ்சார்ந்த பிரச்சாரக் கருப்பொருளின் கீழ் இந்த மைல்கல் ஆண்டு கொண்டாடப்படுகின்றது. அதேபோல, இந்த 65 வருட வெற்றிக்கதையின் பிரதான நாயகர்களாக நுகர்வோரையே Coca-Cola முன்னிலைப்படுத்தி கொண்டாடுகிறது. குளிர்ந்த Coca-Cola-வுடன் மக்கள் ஒன்றாக அமர்ந்து ருசித்த ஒவ்வொரு வேளை உணவு, ஒவ்வொரு கொண்டாட்டம், மலர்ந்த நட்புறவுகள் மற்றும் மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவுகள் என அனைத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு சமர்ப்பணமாகவே இப்பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய சிறப்பம்சமாகும்.

கோகோ-கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவர் மரியோ பெரேரா இது குறித்துக் கூறுகையில், “உலகளவில் 140 ஆண்டுகளும், இலங்கையில் 65 ஆண்டுகளும் கோகோ-கோலா மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் மிக முக்கியமான தருணங்களிலும் ஒரு அங்கமாக இருப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றது. இந்தக் கொண்டாட்டம் எங்களைப் பற்றியது மட்டுமல்ல. இது கோகோ-கோலாவைத் தங்களது வீடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் அன்றாட சடங்குகளில் வரவேற்ற தலைமுறை தலைமுறையான வாடிக்கையளாரைப் பற்றியது. ‘எப்போதும் கோகோ-கோலாவைத் தேர்ந்தெடுப்பதற்கு நன்றி’ என்பது இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கிய மக்களுக்கு நாங்கள் செலுத்தும் நெஞ்சார்ந்த நன்றியாகும்.” எனத் தெரிவித்தார்.

கோகோ-கோலா தனது குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை திரும்பிப் பார்க்கும்போது, அதன் கவனம் எதிர்காலத்தை நோக்கியே உறுதியாக உள்ளது. அதாவது உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதேவேளை உலகிற்கு தொடர்ந்து புத்துணர்ச்சியூட்டுவதாகும். புத்தாக்கம் மற்றும் சமூகத்தை தனது நோக்கத்தின் மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான மாயாஜாலத் தருணங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. ஏனெனில், கோகோ-கோலா தனது கதையைக் கொண்டாடினாலும், அதன் உண்மையான மாயாஜாலம் என்பது எப்போதும் அதைத் தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிய மக்களுக்கே உரியது.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...