ஹெல்த்கார்ட் வலையமைப்பை விரிவுபடுத்தும் 17ஆவது கிளை கல்கிசையில் திறப்பு

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சுகாதார சேவைப் பிரிவைச் சேர்ந்த, இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் நலன்புரி நுகர்வோர் சேவை வலையமைப்பான ஹெல்த்கார்ட், தனது 17வது கிளையை கல்கிசை நகரில் திறந்து தனது வணிக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட, நம்பகமான மருந்துச் சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு ஹெல்த்கார்ட் நிறுவனம் வழங்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஹெல்த்கார்ட் நிர்வாகம் மற்றும் அந்தக் கிளையின் ஊழியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் […]