CCWE Fashion Week மற்றும் சர்வதேச மாநாடு 2026 இன் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம்

Share

Share

Share

Share

தெற்காசியாவிலேயே பெண் தொழில்முனைவோருக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் முதலாவது Fashion Week நிகழ்வை இலங்கை நடத்தவுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிலோன் பெண் தொழில்முனைவோர் சம்மேளனம் (Ceylon Chamber of Women Entrepreneurs – CCWE), “CCWE Fashion Week மற்றும் சர்வதேச மாநாடு 2026” நிகழ்வை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இது இலங்கையிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் பெண் தொழில்முனைவோருக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் முதலாவது ஆடை வடிவமைப்பு வாரம் (Fashion Week) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய முயற்சியை வெளிப்படுத்தியுள்ளது. “ஒவ்வொரு தரப்பு மக்களின் வாழ்விலிருந்து பின்னப்பட்ட உள்ளடக்கிய நூல்கள்” (Threads of Inclusion Woven from Every Walk of Life) என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு 2026 ஜூலை 16 முதல் 20 வரை கொழும்பு, Cinnamon Life இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஆடை வடிவமைப்பில் இலங்கையை முன்னணியில் நிறுத்துகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி, வெறும் ஆடை வடிவமைப்போடு (Fashion) நின்றுவிடாமல், பல்வேறு சமூகங்கள், தொழில்துறைகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்திற்கு அர்த்தமுள்ள மதிப்பை வழங்குகிறது. வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் (SMEs), கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தவும், நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெண் தலைமையிலான வணிகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், ஏற்றுமதி திறனை அதிகரிப்பதன் மூலமும், ஆக்கப்பூர்வமான துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலமும், தெற்காசியா முழுவதும் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாகச் செயல்படும்.

பெருநிறுவன பங்காளர்களின் வலுவான வலையமைப்பின் ஆதரவுடன், இந்த முயற்சி HNBஇன் முதன்மை அனுசரணையுடன் (Title Sponsor) வழிநடத்தப்படுகிறது. இது பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்குமான ஒரு கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CCWE அமைப்பின் தலைவரும், இந்த Fashion Weekஇன் தலைவருமான கலாநிதி அயந்தி குருசிங்க, “இன்று நாம் ஒரு நிகழ்வை விட மேலான ஒன்றைப் பற்றி அறிவிக்கிறோம் — இலங்கையில் உள்ள பெண் தொழில்முனைவோரை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றியமைக்கப்போகும் ஒரு தேசிய இயக்கத்தை நாம் அறிமுகப்படுத்துகிறோம். இந்த தளம், ஒவ்வொரு தரப்பு மக்களின் வாழ்விலிருந்தும் வரும் பெண்களுக்கான கதவுகளைத் திறப்பதற்கும், அவர்களின் திறமைகளை வணிகமாக மாற்றுவதற்கும், சந்தைகளுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மற்றும் பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் வாய்ப்புகள் மற்றும் சமத்துவம் ஆகியவை இணையும் ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில், பிராந்தியத்தை வழிநடத்தும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது.” என தெரிவித்தார்.

HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த மேலும் கூறுகையில்: “135 ஆண்டுகளுக்கும் மேலாக, எச்என்பி வங்கி அனைத்து இலங்கை மக்களின் முன்னேற்றத்திலும் ஒரு பங்காளராக இருந்து வருகிறது. பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பது என்பது அந்த பாரம்பரியத்தை நாம் எவ்வாறு தொடர்கிறோம் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முயற்சி, பெண்கள் சந்தைகளை அணுகவும், நிலையான வணிகங்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. பெண்களுக்கு சரியான வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்படும் போது, அதன் தாக்கம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கும் விரிவடைகிறது. நிதி உள்ளடக்கம் மற்றும் வணிக மேம்பாட்டின் மூலம் அந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், நீண்ட கால வளர்ச்சிக்கான வழிகளை ஆதரிப்பதற்கும் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பின் காரணமாகவே, முதன்மை அனுசரணையாளராக (Title Sponsor) செயல்பட நாங்கள் முடிவெடுத்தோம்.” என தெரிவித்தார்.

CCWE Fashion Week மற்றும் சர்வதேச...
කාන්තා ව්‍යවසායිකාවන් උදෙසා දකුණු ආසියාවේ...
Janashakthi Insurance PLC සමාගමේ ස්වාධීන...
71% of organizations suffered at...
Bairaha Farms PLC Raises the...
One Love Reggae Festival 2026...
Former Indian U19 World Cup...
Mahindra Ideal Finance, 2025-26 මූල්‍ය...
One Love Reggae Festival 2026...
Former Indian U19 World Cup...
Mahindra Ideal Finance, 2025-26 මූල්‍ය...
Jaffna Kingsකණ්ඩායමේ අයිතිය Sports Commune...