இலங்கையில் இளைஞர் மேம்பாடு, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக புதிய தேசிய இளைஞர் கொள்கை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் Global Unites

Share

Share

Share

Share

Global Unites அமைப்பு, இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நீதி, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பான சிறப்பு ஊடகக் கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம், பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 45 வயதிற்குட்பட்ட இளைஞர் தலைவர்களை ஒன்றிணைத்து, நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய தேசிய திட்டத்தை வகுப்பதற்கு Global Unites நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முக்கிய நோக்கம், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர் தலைமுறையின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதாகும்.
இலங்கையர்களுக்காக நியாயமான மற்றும் சமமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், விரிவான ஆராய்ச்சி மற்றும் இளைஞர் கருத்துக்களைப் பயன்படுத்தி வகுக்கப்பட்ட புதிய கொள்கை முன்மொழிவுகளை இந்த ஊடகக் கலந்துரையாடலில் முன்வைப்பதற்கு Global Unites நடவடிக்கை எடுத்தது.

மூன்று முக்கிய தேசிய முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட இந்த முன்மொழிவுகளில், முதலாவது இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றமாகும். இதன் மூலம், இளைஞர் தலைமுறை எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காண்பதும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளைஞர்களை உலகத்துடன் இணைந்த, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட, புத்தாக்கம் மிக்க நபர்களாக மாற்றுவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.

இரண்டாவது முன்னுரிமை, தேசிய நல்லிணக்கம், நீதி மற்றும் சமூக ஒற்றுமை ஆகும். அனைவருக்கும் பொதுவான இலங்கை அடையாளத்தை உருவாக்குதல், பல்வேறு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இங்கு கவனம் செலுத்தப்படும். எதிர்கால சந்ததியினருக்காக அமைதியான, நியாயமான மற்றும் செழிப்பான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

மூன்றாவது முன்னுரிமை, வரலாற்றுப் பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வுகளைக் காண்பதாகும். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நிலவிவரும் பாகுபாடுகள், ஒதுக்கல்கள் மற்றும் சமத்துவமின்மைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக மாற்றத்தக்க வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவது இங்கு நடைபெறுகிறது. அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதும், நீதி, மரியாதை மற்றும் நாட்டின் மீதான உரிமை உணர்வை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

Global Unites அமைப்பு, இலங்கை முழுவதும் உள்ள இளைஞர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காகப் பிராந்திய மட்டக் கலந்துரையாடல் தொடர் ஒன்றையும் தேசிய இளைஞர் கணக்கெடுப்பு ஒன்றையும் ஆரம்பிக்கும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம், இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்த கருத்துக்களைப் பெறுவதற்கு நோக்கமுள்ளதாகும்.

இளைஞர் குரலை விழிப்புணர்வதற்காக Platform Next Gen எனும் தேசிய சொற்பொழிவுப் போட்டி ஒன்றையும், நாட்டின் மாற்றம் குறித்த பல்வேறு இலங்கையர் கருத்துக்களை உள்ளடக்கிய “என் நாடு” எனும் பெயரில் நேர்காணல் தொடர் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கும் Global Unites இங்கு நடவடிக்கை எடுத்தது. இதனை மேலதிகமாக, விளம்பரப்படுத்தல், ஊடகம், ஆராய்ச்சி மற்றும் இளைஞர் பங்கேற்பு நடவடிக்கைகளுக்குத் தன்னார்வலர்களும் பங்காளர்களும் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த செயல்முறையின் இறுதியில், வகுக்கப்பட்ட இறுதிக் கொள்கை முன்மொழிவுகள், ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதனை மேலதிகமாக, இந்த முன்மொழிவுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச பங்காளர்களிடமும் வழங்கப்படவுள்ளன.

Global Unites அமைப்பின் தலைவரும் நிறுவனருமான பிரஷான் டி வைசர் அவர்கள், நியாயமான, சமத்துவமான மற்றும் அமைதியான இலங்கையை உருவாக்குவதற்காகப் பொதுவான பார்வையுடன் கூடிய கொள்கை சார்ந்த தலைவர்களையும் இளைஞர் தலைமுறையையும் இணைப்பதற்கு இந்த வேலைத்திட்டம் மூலம் ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

தீர்மானங்களை எடுக்கும் செயல்பாட்டில் இளைஞர் தலைமுறைக்கு வாய்ப்பும் உரிமையும் வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வலியுறுத்திய அவர், அனைவரையும் உள்ளடக்கிய உரையாடல்கள், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகால நல்லிணக்கத்திற்கான நிலையான பாதையை உருவாக்குவதற்காகவே இந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த இளைஞர் தேசிய முற்போக்கு இயக்கத்துடன் கைகோர்க்குமாறு ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புப் பிரதிநிதிகள், இளைஞர் தலைவர்கள், மேம்பாட்டுப் பங்காளர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் Global Unites அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு Global Unites ஊடாக பிரசான் டி விஸ்செர் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அல்லது [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

🌐 [www.globalunites.org](http://www.globalunites.org)
📧 [[email protected]](mailto:[email protected])
📱 @GlobalUnites

2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2...
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...