“தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்காக கல்வியையும் தொழில்துறையையும் இணைக்கும் ‘Pearson BTEC Connect South Asia’”

Share

Share

Share

Share

உலகின் முன்னணி கல்விச் சேவை வழங்குநரான Pearson, உலகை வடிவமைக்கும் திறன்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் ‘BTEC Connect South Asia’ மாநாட்டை அண்மையில் நடத்தியது. வேகமாக மாறிவரும் தொழில் உலகிற்கு ஏற்ப, எந்தவொரு துறைக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைத் திறன்களுடன் மாணவர்களை ஆயத்தப்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்காக இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கல்வி மற்றும் தொழில்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 150க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இது ஏன் முக்கியமானது?
உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 15-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் உழைப்பாளர் படையில் 18.6% சதவீதமானோர் வேலையில்லாமல் இருந்தனர். அடுத்த தசாப்தத்தில் சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் புதிதாக உழைப்பாளர் படையில் இணையவுள்ள போதிலும், சுமார் 300,000 முறையான வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சரியான தொழில்முறைத் திறன்களைக் கொண்ட ஊழியர்களைக் கண்டறிய முடியாமல் திணறி வருகின்றன. மறுபுறம், பல பட்டதாரிகள் தங்களது கல்வித் தகைமைகளுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

கல்வித் துறைக்கும் வர்த்தக சமூகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, தொழில்துறையின் தேவைகளுக்குப் பொருத்தமான கல்வி முறையொன்றை ஊக்குவிப்பதே ‘BTEC Connect South Asia’ மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டமானது, இலங்கையின் தொழிலநுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் மூலோபாயக் கட்டமைப்பு (2026-2035) மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டு வேலைத்திட்டங்களைப் பிரதிபலிக்கிறது. இந்த தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற பல துறைகளில் பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இளைஞர்கள் தங்களது கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறி, வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதற்கு நடைமுறை மற்றும் தொழில்முறை கற்றலுடன் இணைந்து தகவல் தொடர்பு, சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் எந்தவொரு சூழலுக்கும் பொருந்தக்கூடிய நெகிழ்வுத்திறன் போன்ற திறன்கள் மிகவும் அவசியமானவை என்பதை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இங்கு வலியுறுத்தினர்.

Pearson நிறுவனத்தின் பிரித்தானியா மற்றும் சர்வதேச பிராந்திய, நிறுவனக் கற்றல் மற்றும் திறன்கள் பிரிவின் துணைத் தலைவர் Jane Baker கருத்துத் தெரிவிக்கையில்: “இலங்கையின் இளைஞர்களிடம் திறமைகளும் அதீத எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஆனால் பெரும்பாலும் தங்களது திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. Pearson BTEC தொழிற்துறை தகைமைகள் அந்த நிலையை மாற்றியமைக்கின்றன.

மாணவர்கள் நடைமுறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும், நிஜமான தொழில்முறைச் சூழலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமும் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதால், அவர்கள் முழுமையான நம்பிக்கையுடனும் வேலைவாய்ப்பிற்கான தயார்நிலையுடனும் தங்களது கல்வியை நிறைவு செய்கிறார்கள். சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் புதிதாக வேலைவாய்ப்புச் சந்தையில் இணையும் இவ்வாறானதொரு பின்னணியில், அவர்கள் தங்களது எதிர்கால தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, கல்வி நிறுவனங்களும் முதலாளிமார்களும் இணைந்து பணியாற்றுவது இன்றியமையாததாகும்’ என தெரிவித்தார்.

அன்று நடைபெற்ற பிரதான நிபுணத்துவக் குழுக் கலந்துரையாடல் ‘Ready Institutions: Building Talent for an Unpredictable World’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றதுடன், எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கல்வி நிறுவனம் என்பது என்ன என்பது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இதில் Dialog Axiata PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, SLANSHEI அமைப்பின் தலைவர் கலாநிதி நிசாம் ரசாக், கேட்வே குழுமத்தின் (Gateway Group) தலைவர் கலாநிதி ஹர்ஷ அல்லஸ் மற்றும் இந்தியாவின் KCIC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிறிஸ்டோபர் ஜோன் ஆகியோர் கலந்துகொண்டனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் பட்டதாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் திறன்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்தும், தற்போது உலகில் உருவாகி வரும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிறுவனங்கள் ஏன் தொடர்ந்து தங்களை Update செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

எதிர்கால தொழில் உலகிற்காக மாணவர்களை ஏற்கனவே ஆயத்தப்படுத்தி வரும் கல்வி நிறுவனங்களைப் பாராட்டுவதற்கும் Pearson நிறுவனம் இங்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைய, திறன்மிக்க மற்றும் தொழில் சார்ந்த கல்வியை வழங்கியமைக்காக பிராந்தியம் முழுவதிலும் உள்ள ‘Pearson BTEC’ மையங்களுக்கு 12 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ‘ESOFT’ நிறுவனம் பிளாட்டினம் (Platinum) விருதையும், ‘British College of Applied Studies (BCAS)’ நிறுவனம் தங்க (Gold) விருதையும் வென்றெடுத்தன.

25 வருடங்களுக்கும் மேலாக இலங்கையிலுள்ள மாணவர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ‘Pearson Higher National’ தொழிற்துறை தகைமைகள் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளன. இதன் மூலம் மாணவர்கள் கல்வியினூடாக தாங்கள் எதிர்பார்க்கும் எதிர்காலக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Pearson தொடர்பில்
கல்வியின் மூலம் மக்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றிகரமான வாழ்க்கையை அடைவதற்குக் கைக்கொடுப்பதே Pearson முதன்மை நோக்கமாகும். ஒவ்வொரு கற்றல் வாய்ப்பும் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு தனித்துவமான திருப்புமுனையாக அமையலாம் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிஜ வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறை மற்றும் அதிஉயர் கற்றல் அனுபவங்களை உருவாக்குவதற்காக எங்களது சுமார் 18,000 ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். வாழ்நாள் முழுவதற்குமான கல்வியை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் நாங்கள், சுமார் 200 நாடுகளில் உள்ள நுகர்வோருக்கு டிஜிட்டல் கல்வி உள்ளடக்கங்கள், மதிப்பீட்டு முறைகள், தொழில்முறைத் தகைமைகள் மற்றும் தரவுச் சேவைகளை வழங்குகிறோம். எங்களைப் பொறுத்தவரை கல்வி என்பது வெறும் ஒரு தொழிலோ அல்லது வணிகமோ அல்ல, அது நாங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் எங்களது உண்மையான அடையாளமாகும். எங்களைப் பற்றிய கூடுதல் விபரங்களை plc.pearson.com இல் பெற்றுக்கொள்ளலாம்.
Media contact:
Bhavya Suri | [email protected]

செப்டம்பரில் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளபோதிலும்,...
Sampath Bank Introduces One-Stop Housing...
வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை வெற்றிகரமாக...
“மனதளவில் வலிமையானவர்கள் – செல்வச் செழிப்புள்ள...
Daraz ශ්‍රී ලංකා සමාගම සිය...
JAAF welcomes Government’s commitment to...
Pearson BTEC Connect South Asia...
Coca-Cola Beverages Sri Lanka celebrates...
JAAF welcomes Government’s commitment to...
Pearson BTEC Connect South Asia...
Coca-Cola Beverages Sri Lanka celebrates...