2023 ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ Jersey அனுசரணையாளராக MAS உடன் கைகோர்க்கும் SLC

Share

Share

Share

Share

எதிர்வரும் பெப்ரவரி 2023இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான மகளிர் கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராக, தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், இலங்கை கிரிக்கெட் (SLC) உடன் மீண்டும் கூட்டிணைந்துள்ளது.

MAS முதன்முதலில் மகளிர் கிரிக்கெட் அணிக்காக 2007-2008 இல் Jerseyகளைத் தயாரிக்கத் தொடங்கியது மற்றும் 2012 முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணிக்கு உத்தியோகப்பூர்வ Jersey அனுசரணையாளர் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையில் மகளிர் கிரிக்கெட் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு MAS தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகிறது, மேலும் 2008 மற்றும் 2010க்கு இடையில் மகளிர் கிரிக்கெட் அணிக்கான அணி அனுசரணையாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

MAS Active இன் அனுசரணை குறித்து, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுப் பணிப்பாளர் அம்ரா அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக, நாங்கள் SLC உடன் வலுவான பங்காளித்துவத்தைப் பேணி வருகிறோம், அணிகளின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். எமது தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஒருமுறை அனுசரணை வழங்குவது உண்மையில் ஒரு பாக்கியம், அவர்களுக்கு வழங்கும் ஆடை மேம்பட்ட செயல்திறன் கொண்ட ஆண்களுக்கான ஜெர்சிகளுக்கு நாங்கள் செய்யும் புதுமையான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

MAS Active (Pvt) Ltd இல் Jersey வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது, இதில் மனித உடலில் வெப்பம் மற்றும் வியர்வை மண்டலங்களை அடையாளம் காண Body mapping தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்,   காற்றோட்டம் மற்றும் அதிக உறிஞ்சுதலின் மாறுபட்ட அளவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வெப்பநிலை மற்றும் வானிலை முறைகள் உட்பட விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விளையாட்டின் போது அசௌகரியத்தைத் தடுக்கவும், வீரரின் செயல்திறனை உயர்த்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலகுரக, Stretchable, Breathable துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Wicking மற்றும் Moisture நிர்வகிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது, அவை சரியான பொருத்தம் மற்றும் வசதியை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

“நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறோம், எங்கள் மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் வெற்றிப் பயணத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெருமையாக இருக்கிறது” என்று அம்ரா அக்பர் கூறினார். மேலும், இலங்கையில் உள்ள பெண்களுக்கான முக்கியத்துவம் என்ன என்பதை வலியுறுத்தி, MASஇன் பெருநிறுவன விவகார பணிப்பாளர் ரஜித்தா ஜயசூரிய,, “எல்லாத் தரப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில், நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தத் துறைகளில் தங்கள் திறனைக் கண்டறிய இளம் பெண்கள் மற்றும் பெண்களை ஊக்குவிப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு MAS இன் ஒட்டுமொத்த அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த ரஜித்தா ஜயசூரிய,, “இந்த முயற்சிகள் மூலம் 2024 பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு இலங்கையின் மகளிர் Paralympians மற்றும் எமது மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சிகளுக்குத் தேவையான விளையாட்டு ஆடைகளுக்காக எம்மால் அனுசரணை வழங்க முடிந்தது.” என தெரிவித்தார்.

MAS Holdings தொடர்பாக

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு-விநியோகஸ்தர் ஆகும். இதில் 118,000 பேர் பணியாற்றுகின்றனர். இன்று, MAS தனது தயாரிப்புகளை 17 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகள் மூலம் உற்பத்தி செய்கிறது. MAS இன் வர்த்தக நாமங்கள், தொழில்நுட்பம், FemTech, Start-ups மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆடை பேட்டைகள் எப்போதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளன.

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...