- PUCSL இனால் தொழிற்றுறை சார்ந்தோரின் வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமையையிட்டு JAFF ஆனது குழப்பமடைந்துள்ளது.
- கேள்வியானது குறைந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப் படுகின்றபோதிலும், கட்டண அதிகரிப்பானது வெறுமனே ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) 66% மின் கட்டண அதிகரிப்பிற்கு, 15 பிப்ரவரி 2023 தொடக்கம் தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. இதன் விளைவாக ஆடைக் கைத்தொழிலின் செலவீனங்களானது தாங்கிக் கொள்ள முடியாதளவு அதிகரித்துள்ளது. இவ் அதிகரிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக அமையப்பெற்ற இத் தொழிற்றுறையின் தொடர்ச்சியான செயற்பாடுகள், போட்டித்தன்மை மற்றும் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டித்தரும் அதன் நிலைத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஜூன் 2022 தொடக்கம் அனைத்தும் உள்ளடக்கிய மொத்த அதிகரிப்பானது 165% ஆகும், ஆனால் தற்போதைய அதிகரிப்பான 31% ஆனது மின்சார உற்பத்திச் செலவீனங்கள் தொடர்பாக 5% அதிகரிப்பினைக் கொண்டதாக அமைந்துள்ளது.
இக்கட்டண அதிகரிப்புத் தொடர்பாக தொழிற்றுறையினைச் சார்ந்தோரின் எழுத்து மற்றும் வாய்மொழி மூலமான வேண்டுகோள்கள் என்பன PUCSL இன் பொதுக் கலந்தாய்வுக் குழுவினருக்குச் சமர்ப்பிக்கப் பட்டபோதிலும் அவை ஒரு போதும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமை குறித்து Joint Apparel Association Forum (JAAF) ஆனது குழப்பமும் ஆச்சரியமும் அடைந்துள்ளது. தொழிற்றுறை சார்ந்தோரின் ஏகோபித்த இணக்கப்பாடானது இங்கு கருத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தான்தோன்றித்தனமான செயற் பாட்டின் தோற்றப்பாட்டினையே இது வெளிப்படுத்துகிறது.
PUCSL இல் நடைபெற்ற பொதுக் கலந்தாய்வின் போது JAAF இன் செயலாளர் நாயகம் ஆன Yohan Lawrence இனால் சமர்ப்பிக்கப்பட்ட தொழிற்றுறை தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்பன பின்வருமாறு:
- CEB யிற்கான கேள்வியானது மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது – JAAF இனால் அநேக தடவைகள் சுட்டிக்காட்டப் பட்டபடி, 2022 ஆம் ஆண்டிற்கான Q4 ஆனது தொடர்ச்சியான உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உற்பத்தி தொடர்பான அதன் கேள்விகளில் தொடர்ந்தும் 15-20% வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான இவ்வீழ்ச்சி 2023 இன் 2H வரை தொடரும் என JAFF ஆனது மதிப்பீடு செய்துள்ளது. உற்பத்தி சார்ந்த தொழிற்றுறையில் திடீர் என ஏற்பட்ட கேள்விக்கான வீழ்ச்சியின் நிமித்தமாக அத் துறையினர் தமது வேலை நேரத்தினைக் குறைத்துக் கொள்வதற்கான கட்டாயம் ஏற்பட்டது இதன் நிமித்தமாக மின்சாரத்திற்கான தேவைப்பாடும் குறைவடைந்தது. PUCSL இன் ஆவணங்களுங் கூட, ஜனவரி 2022 இல் மின்சார உற்பத்தியானது ஜனவரி 2023 ஐயும் விடவும் அதிகமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறது. அப்போது பரிந்துரை செய்யப்பட்ட மின்கட்டண உயர்வானது அவ்வேளையில் ஏற்பட்ட அதிகரித்த மின்சாரத் தேவையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அப்போது ஜனவரி 2023 இல் மின்சாரத்திற்கான தேவைப் போக்கினை கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தேவைப்பாடானது இருக்கவில்லை. மின்சாரத்திற்கான தேவைகளை மிகைப்படுத்திக் காண்பிப்பதன் எதிர் விளைவானது, அது தொடர்பான செலவீனங்களையும் மிகைப்படுத்திக் காண்பிக்கும் என்று JAAF ஆனது எச்சரித்தது. இதன் காரணமாக மின்சாரத்திற்கான தேவைகளை மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்யும் வரை, மின்சாரக் கட்டணம் தொடர்பான சீராக்கங்களை மேற்கொள்வதை நிறுத்தி வைக்குமாறும் CEB மற்றும் PUCSL என்பவற்றை கோரியது. கட்டணச் சீராக்கங்களை மேற்கொள்வதற்கு முன்பாக CEB ஆனது தனது சொந்த உற்பத்திச் செலவீனங்களைக் கட்டாயம் குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் JAAF ஆனது கோரிக்கை விடுத்தது. நாட்டின் மிகப்பெரிய கைத்தொழிலில் ஏற்றுமதியாளர்கள் தமது உற்பத்திகளுக்கான கேள்வியானது குறைவடைந்து வரும் நிலைக்கு முகம் கொடுத்துவரும் இத்தருணத்தில் நியாயமற்ற அதிகரித்த மின் கட்டண உயர்வானது எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என JAAF ஆனது தெரிவித்தது.
- தொழில்துறைப் போட்டியின் மீதான அதிகரிக்கப்பட்ட கட்டணங்களின் தாக்கம் – ஆடை உற்பத்தியில் ஈடு படக்கூடிய மற்றைய நாடுகளுடனும் அதோடு சர்வதேச சந்தையிலும் இலங்கை ஆடைத் தயாரிப்புகளுக்கான போட்டித்தன்மை காணப்படுவதானது இன்றியமையாததாகும். கடந்த ஆண்டு மின் கட்டணமானது உயர்த்தப்பட்ட நிலையிலும், இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிராந்திய ஜாம்பவான்களுடன், மின்சாரத்தை ஒரு kWhக்கு USD 9 தொடக்கம் 10 சதம் வரை வினையோகிக்கக் கூடிய வகையில் ஒப்பீட்டளவில் இலங்கையானது சம நிலையில் இருந்தது. இதற்கிடையில், பெனின் மற்றும் டோகோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நன்கு கவரும் விதமாக ஒரு kWhக்கு USD 8 சதம் என்ற மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தினை வழங்குகிறது. ஆனால் கவலைக்கிடமான விடையம் யாதெனில், ஒரு kWh க்கு சுமார் 12 சதம் எனும்
வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் கட்டண அதிகரிப்பானது, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இலங்கையின் போட்டித் தன்மையில் அது பாரிய தாக்கத்தினை செலுத்துவதானது முதலீட்டாளர் கவர்ச்சித் தன்மையையும் அற்றுபோக்கைச் செய்கிறது. - மின்சார நெரிசல் அற்ற மணி நேரம் மீதான கட்டண உயர்வானது மேற்கொள்ளப்படுகையில் இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையின் தயாரிப்புகள் மீது அது மீண்டும் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கம் – ஆடைக் கைத்தொழில்துறை உற்பத்தியாளர்களைப் பெரிதும் ஊக்குவிக்கும் நோக்குடனேயே முனைய கட்டண உயர்வின் போது JAAF இனால் நெரிசல் இல்லா நேர மின்பாவனையானது முன்னிலைப் படுத்தப்பட்டது, ஆனால் இப்போது மேற்கொள்ளப்படும் நெரிசல் இல்லா நேர மின்பாவனை மீதான கட்டண அதிகரிப்பானது அது அறிமுகப்படுத்தப் பட்டமைக்கான நோக்கத்தினையே வீணானதாக்கி விட்டது. நெரிசல் இல்லா நேர மின்பாவனைக் கட்டணமானது 2022 இல் kWh இக்கு LKR 6.58 இலிருந்து LKR 15 ஆக அதிகரிக்கப்பட்டது. எனினும் புதிய PUCSL ஆவணமானது அதனை kWh இக்கு LKR 15 இலிருந்து LKR 34 எனும் அதி உச்ச விலை உயர்வைச் சிபாரிசு செய்தது. இச்செயற்பாடானது கடந்த 12 மாதங்களுக்குள்ளாக 400% அதிகரிப்பைக் காட்டுகிறது. இலங்கையில் அர்ப்பணிக்கப் பட்ட ஆடைக் கைத்தொழில்துறையினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை JAAF ஆனது அழுத்திக் காண்பித்தது. குறிப்பாக ஏறாவூர் பகுதியில் ஆடைக் கைற்ரொழில் வலயத்தில் அரசாங்கமானது பாரிய அளவில் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிபாரிசும் செய்தது. முதலீட்டாளர்களைக் கவரும் விதத்தில் ஆடைக் கைத்தொழில்ச் சாலைகள் ஆவன 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக, நெரிசல் இல்லா நேர மின்பாவனைக் கட்டணங்கள் மீதான 400% அதிகரிப்பானது எவ்விதத்திலும் இலங்கையில் ஆடைக் கைத்தொழில் உற்பத்தியினை ஊக்குவிக்கப் போவதில்லை. அதி உச்ச உற்பத்தியினைத் தக்கவைத்துக்கொள்ள தேவையற்ற ஊக்குவிப்பு ஊதியங்களை வழங்க நேரிடும். அது மட்டும் அல்லாது மின் உற்பத்தியினை அதிகரிக்க நேரிடும். இச்செயற்பாடுகளாவன எவ்வித அடிப்படை பொருளாதார பகுத்தறிவிற்கும் முற்றிலும் எதிர் மாறாக அமைந்துள்ளது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கூரை மீது பொருத்தக்கூடிய சூரியக்கலம் – புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க வல்ல, கூரை மேல் பொருத்தக்கூடிய சூரிய சக்தி கலங்களின் பயன்பாட்டினைத் தீவிரப் படுத்துமாறு CEB யை JAAF ஆனது வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 70% ஆனது புதுப்பிக்கத்தக்க சாதனங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தோள் கொடுக்க முடியும். Net Plus க்கு என வர்த்தக ரீதியிலான சாத்தியமான கட்டண அலகுகள் இலங்கைக்கெனத் தேவை என JAAF ஆனது வலியுறுத்தியுள்ளது. மேலும் தற்போது ஆடைக்
கைத்தொழில்துறையில் எறக்குறைய 200 MW சூரிய மின்சக்தி நிறுவல்கள் காணப்படுகின்றன. ஆனால், இன் நிறுவனங்களுக்கு கடந்த 7 தொடக்கம் 8 மாதங்களாக கொடுப்பனவானது வழங்கப்படவில்லை. CEB ஆனது தாமதமான மற்றும் எதிர்கால கொடுப்பனவுகளை ஓர் நேர்த்தியான முறையில், செலுத்தாவிடின் JAAF ஆனது ஏற்கெனெவே உள்ள நிறுவனங்களை Net -Meetering பாவனையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது விரைவாகவே CEB இடம் இருந்து அதன் நிதிப்பாச்சல்ச் சுமையை நீக்கி விடும் என JAAF ஆனது விளக்குகிறது. மேலும் இது சூரியத்தடமானது அதிகரிக்கப்பட இடமளிக்கிறது. அதுமட்டுமல்லாது CEB ஆனது குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனுமதிப்பதோடு, தேசிய மின் கட்டமைப்பின் மீதான மின்சாரத்திற்கான தேவைப் பாட்டினையும் குறைக்கும். - மின்சாரத்தினை மின்பிறப்பாக்கியில் இருந்து இறுதிப் பாவனையாளருக்கு மின் விநியோக மூலங்களின் ஊடாக வழங்குதல் –
JAFF ஆனது நீண்ட காலமாகவே Power Weeling முறைமை தொடர்பாக ஊக்கப்படுத்தி வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முன்னோக்கிய நகர்வில் இதுவே மிகப்பெரிய வினையூக்கியாகத் திகழ்கிறது, மற்றும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இத்துறையில் முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழித்தடமாகவும் இருக்கிறது.
இவ்வகைப் புதிதாக்கிகளின் மீதான தனியார் முதலீடுகளாவான அதிகரிக்கும் பட்சத்தில் அவை CEB மீதான சுமையானது குறைக்கப்படவும், அத்தோடு, SOE ஆனது தனது நுகர்வோர்க்கு விலைகுறைப்பினையும் வழங்கவும் வழிவகுக்கிறது. Power Weeling முறைமையை நடைமுறைப்படுத்தும் முகமாக CEB இன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதனைத் துரிதப்படுத்துமாறு JAAF ஆனது வலியுறுத்தியது.
இவ் உண்மைகளைக் கருத்திற்க் கொண்டு, கைத்தொழிலில்த் துறையினரின் மின் கட்டணகளை 30% ஆல் அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவினைக் குறித்து JAAF ஆனது தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்க விரும்புகிறது. மற்றும் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பங்களில் அவ்விடையம் தொடர்பான யதார்தங்களையும், அவற்றின் தரவுகளையும், தன்மைகள் மற்றும் இயல்புகளையும் கருத்திற் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினை JAAF ஆனது வலியுறுத்துகிறது. ஆடைக் கைத்தொழில்துறைக்கான கேள்வியானது குறைவடைந்து வருவதனை எதிர்கொள்ளும் இக்காலகட்டத்தில் வெறுமென ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு கேள்விகள் அதிகரிக்கக் கூடும் என்ற அடிப்படையில் மின் கட்டண அதிகரிப்பினை மேற்கொள்வதானது அறவே வேண்டாததோர் செயற்பாடாகும். இது எற்கெனவே பெரும் போராட்டத்தின் மத்தியில் பயணித்துக்கொண்டு இருக்கும் கைற்ரொழில்த் துறைக்கு பாரிய சுமையாக அமைந்துவிடும். அது மட்டுமல்லாது இச்செயற்பாடானது எமது நாட்டின் பொருளாதாரத்தினையே இஸ்தம்பிதமடையச் செய்து விடும்.