செலான் வங்கி, சைகை மொழிக்கான அங்கீகாரத்தை பரிந்துரைப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி அச்சமூகத்தை ஆதரிக்கும் நோக்கில் இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஐ அறிமுகப்படுத்தியது.
செலான் வங்கியின் Signfluencer campaign, செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தை அங்கீகரிப்பதுடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள பயனுள்ள தகவல்தொடர்பு வழிகளை வழங்குவதன் அவசியத்தின் மீது விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்த முக்கிய சமூகத்திற்கு சிறப்பான சேவை அளிப்பதற்கு மேலதிகமாக அவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவந்து நிதி சம்பந்தமான நடவடிக்கைகளில் பங்குபற்றுதலுக்கான தடைகளை நீக்கி, வங்கிச் சேவையை உள்ளடக்கியதாக மாற்றுவதே செலான் வங்கியின் நோக்கமாகும்.
இலங்கையின் சனத்தொகையில் 9%, அதாவது 1.9 மில்லியனுக்கு சமனான அல்லது 55 பேரில் ஒருவர், ஏதாவது ஒரு வகையான செவிப்புலன் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. காதுகேளாதவர்கள் தொடர்புகொள்வதற்கு சைகை மொழி இன்றியமையாததாக இருந்த போதும் இலங்கையில் செவித்திறன் குறைபாடுள்ள நபர்கள் சமூகத்தில் முழுமையாக ஈடுபட பல சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே, பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் அனைவருக்குமிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்குமான தேவை எழுகிறது.
பலருக்குத் தெரியாத நிலையில், இலங்கைக்கு அதன் சொந்த தனித்துவமான சைகை மொழி உள்ளது. இது செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தின் தினசரி வாழ்வில் அவர்களின் முதன்மையான தகவல்தொடர்பு வழிமுறையாக முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், இன்றைய சமுதாயத்தில் மிகவும் பொதுவான தகவல்தொடர்பு முறைகள் வாய்மொழி மற்றும் எழுத்து வடிவங்கள் போன்ற பாரம்பரிய முறைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க தகவல்தொடர்பு இடைவெளி ஏற்படுகிறது.
“எங்கள் வாடிக்கையாளர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் தளங்களை உருவாக்குவதே செலான் வங்கியில் நாம் செய்யும் அடிப்படை நெறிமுறையாகும். தனிநபர்கள் மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுடன் தொடர்புடைய நிறுவனமாக, புதுமையான தீர்வுகளை உருவாக்குதல், அனைத்துப் பின்னணிகள், திறன்கள் மற்றும் திறமைகளைக் கொண்ட மக்களுக்கு வாய்ப்பு அளித்தல், ஒன்றாக தேசத்தின் முன்னேற்றத்தை ஆதரிக்க நம்பிக்கை மற்றும் தொடர்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் செலான் வங்கி உறுதி பூண்டுள்ளது. மற்றவர்களின் உண்மை நிலைகளை புரிந்துகொள்வதும் அவற்றிற்கு மதிப்பு அளிப்பதும் இந்த மனநிலையை வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன தெரிவித்தார்.
செலான் வங்கி, இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஆக நிகிதாவை அறிமுகப்படுத்தியது. நிகிதா, சைகை மொழியை அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டியது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தனிமையை ஒழிப்பதை நோக்காகக் கொண்டு மக்களின் மனங்களில் ஏற்றுக்கொள்ளல் தன்மையை வளர்க்க உறுதுணையாவார்.
சமூகத்தின் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அங்கீகாரத்தை ஏற்படுத்துவதன் ஆரம்ப கட்டமாக, எந்தவொரு தனிப்பட்ட அல்லது பொது Instagram கணக்கு வழியாக நிகிதாவிற்கு நேரடி செய்தியை (DM) அனுப்புவதன் மூலம் சைகை மொழியில் அவர்களின் பெயரை எவ்வாறு கையொப்பமிடுவது என்பதை அறிந்து கொள்ள செலான் வங்கி அனைவரையும் அழைத்தது. மேலும் வங்கி, சைகை மொழியில் பெயர்களை கையொப்பமிடும் வீடியோக்களைப் பகிருமாறு தனிநபர்களை கேட்டுக்கொண்டது. சைகை மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போன்ற எளிமையான செயல் மூலம் விழிப்புணர்வை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க முடியும் என்று செலான் வங்கி உறுதியாக நம்புகிறது.
செலான் வங்கி இந்த campaignஇற்கு அப்பால் தனது முயற்சிகளை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளது. நிதிக் கல்விசார் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் சேவைகள் தொடர்பான விளக்கங்களை சைகை மொழி மூலம் நடாத்தும் திட்டங்களுடன் உண்மையிலேயே அனைத்து தரப்பினரையும் நன்கறிந்து சேவை செய்யும் வங்கியாக அதன் நற்பெயரை மேலும் மேம்படுத்த திண்ணமாயுள்ளது.
ஒரு வர்த்தக நாமமாக, செலான் வங்கி தொடர்ந்து நன்மையான மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. அதன் சர்வதேச அங்கீகாரமும் விருதும் வென்ற சுதந்திர தின campaign ஊடாக தேசிய கீதம் மூலம் சமூகங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது போன்று இது, விழிப்புணர்வு மூலமான சமூக வலுப்படுத்தலுக்கான செலான் வங்கியின் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.
வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளான டிக்கிரி சேமிப்புத் திட்டம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற சேவைகள், தேயிலை சிறு உடைமையாளர்களுக்கான ஆதரவு மற்றும் ஏற்றுமதி நிபுணர் சேவை சிறுவர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. இந்த முன்முயற்சிகள் குறிப்பாக பல்வேறு சமூக குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதன் மூலம் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களின் வளர்ச்சிக்கு வங்கி உதவுகின்றது. இது, முடிவில் தேசத்தின் முழுமையான வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பங்களிக்கிறது.