சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், “அவள் செழித்து வளர்கிறாள்” எனும் இணையவழி சுகாதார மன்றத்தினை நடத்திய Suwa Diviya

Share

Share

Share

Share

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதிகாரமளித்தலைக் கொண்டாடும் நிகழ்நிலை சுகாதார மன்றமான “அவள் செழித்து வளர்கிறாள்” (She Thrives) என்ற இணையதளத்தை Suwa Diviya ஆனது அறிமுகப்படுத்துகின்றது. மார்ச் 9, 2024 அன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெற்ற இம்மெய்நிகர் நிகழ்வானது, இலங்கை வாழ் பெண்களுக்கு அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ளும் வகையினில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தியது. Suwa Diviya என்பது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது நீரிழிவு நோயினைத் தடுப்பது மற்றும் முகாமைத்துவம் செய்வதில் இது கவனம் செலுத்தியது.
“She Thrives” என்பது சாதாரண சுகாதார மன்றம் அல்ல; இது ஒரு முன்னேற்றுவிக்கும் தளமாகும், இது பெண்களை அவர்களின் தனித்துவமான சுகாதார விடையங்கள் தொடர்பாக ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் போன்ற பரவலான பிரச்சினைகளை கையாள்வதிலிருந்து ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறைகளை ஆராய்வது வரை, இந்த மன்றம் பங்கேற்பாளர்கள் வளரத் தேவையான அறிவு மற்றும் உத்திகளினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியினை மருத்துவ ஆலோசகரும் பொதுமருத்துவருமான “Suwa Diviya” நிறுவனத்தின் இஸ்தாபகருமான Dr. கயத்ரி பெரியசாமியின் தலைமையில் நடைபெற்ற “அவள் செழித்து வளர்கிறாள்” எனும் மகுடத்திலான, பெண்களின் உடல்நலம் தொடர்பாக புகழ்பெற்ற நிபுணர்களின் தலைமையில் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. நிபுணர்களின் குழுவில் பங்கு பற்றியவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
Prof. சந்திரகா விஜயரத்ன: பெண்களின் நீரிழிவு நோய் தொடர்பான ஆற்றல்மிக்க நிபுணரான பேராசிரியர் சந்திரகா விஜயரத்ன அவர்கள் “இந்நிலையில் பெண்கள் தமது குடும்பத்தினரிடமிருந்தும், பரந்த சமூகச் சூழல்களிலும் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் தொடர்பாக ஆராய்கிறார். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உணவுக் குறிப்புகளில் தனது திறமையைப் பயன்படுத்தி, அவர் விவாதத்திற்கு ஒரு தனித்துவமான தொலை நோக்குப் பார்வையினை வழங்கினார்.
Dr. சகுந்தலா செனிவிராட்ன: ஒர் மருத்துவ ஆலோசகராகவும், மகளிர் மருத்துவ நிபுணராகவும், பெண்களின் ஆரோக்கியம் தொடர்பாக மிகவும் முக்கியமானதும் ஆனால் அவை தொடர்பாக நாம் விவாதிக்கக் கூச்சப்படும் தலைப்புகளான, பொதுவாகவே மகளிர் எதிர்ப்படும் நோய்கள் , பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் உருவாக்கக்கூடிய புற்றுநோய்கள், மார்பக புற்றுநோய்கள் என்பனவற்றினை எவ்வாறு தடுப்பது தொடர்பான பிரச்சினைகளினைக் கையாண்டார்.
Dr. ரேணுகா ஜயதிசா: ஓர் மருத்துவ ஆலோசகரும் ஊட்டச்சத்து நிபுணருமான இவர் புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதில் உணவின் முக்கிய பங்கு குறித்து விளக்கமளித்து, ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக மதிப்புமிக்க வழிகாட்டுதல்களினை வழங்கினார்.
Dr. திலுக்ஷி பிலிபிட்டிய: ஓர் மருத்துவ ஆலோசகரும் சிறுநீரக நிபுணருமான இவர், சிறுநீரகங்களைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான சரியான விளக்கங்களினைத் வழங்கி சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக மதிப்புமிக்க ஆதாரங்களினை வழங்கினார்.
திருமதி. நீலகி காசிலிங்கம்: அனுபவம்வாய்ந்த இயன்முறை உடற்கூற்றியல் நிபுணரான இவர் உடல்நலக் குறைபாடுகளினைத் தடுப்பதிலும், முதுகுவலி போன்ற பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்துவதிலும் உடற்பயிற்சி மற்றும் இயக்கத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார்.
“இம்முயற்சியினை முன்னெடுப்பதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். பெண்கள் ஒன்றிணைந்து நிபுணர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், தமது உடல்நலம் குறித்த தகவலறிந்து முடிவுகளினை எடுக்கவும், ஒரு ஆதரவான சூழலினை உருவாக்குவதே ‘அவள் செழித்து வளர்கிறாள்’ என்ற திட்டத்தின் குறிக்கோளாகும். என்று Dr. பெரிசாமியா குறிப்பிட்டார்.
பங்கேற்பாளர்கள் யாவரும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், ஊடாடும் அமர்வுகள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளினை எதிர்பார்க்க முடியும். நீங்கள் ஆலோசனை தேடுகிறீர்கள் எனில் , அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் எனில், அல்லது வெறுமனே உத்வேகம் தேடுகிறீர்கள் எனில், “She Thrives” என்பது பெண்கள் யாவரும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும், ஆதரவளிக்கவும் இது ஓர் உகந்த இடமாக இருக்கும்.
“She Thrives” என்ற நிகழ்ச்சியில் பெண்களின் வலிமை, நெகிழ்திறன் மற்றும் அழகினைக் பெருமைப்படுத்துவதில் எம்முடன் ஒன்று சேருங்கள், ஏன்னெனில் பெண்கள் ஒன்று சேரும்போது, பல வியக்கவைக்கும் விடையங்கள் நிச்சயம் உருவாகும்! பதிவு செய்துகொள்ள Suwa Diviya facebook இல் பின்தொடரவும்.

GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
TikTok Releases Q2 2024 Community...