இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Smart Village திட்டத்தில் பங்குபெறும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளை வலுவூட்டும் நோக்கில் Sri Lanka Agripreneurs’ Forum (SLAF) மற்றும் Agro World (Pvt) Ltd ஆகியவற்றுடன் தனது மூலோபாய பங்காளித்துவத்தை அண்மையில் அறிவித்தது.
SLAF மற்றும் Agro World பங்கேற்புடன் HNB தலைமை அலுவகத்தில் மூன்று தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒத்துழைப்பு இந்த விவசாயிகளுக்கு நிதி தேவைகள், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் புதிய சந்தைகளுக்கான வாய்ப்புக்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறைந்த உற்பத்தித்திறன், பல்வகைப்படுத்தல் இல்லாமை, சந்தை இணைப்புகள் இல்லாமை, உள்ளீடுகள் கிடைக்காமை மற்றும் மிகவும் தேவையான கடன் வசதிகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகலை எதிர்கொள்ளும் விவசாய நிறுவனங்களை இந்த முயற்சி ஆதரிக்கிறது.
“புதிய சந்தைகளை ஸ்தாபித்தல், உலகளாவிய போக்குகளைப் புரிந்துகொள்வது மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது இலங்கை வெற்றிபெற மிகவும் முக்கியமானது. எங்களின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சிறந்த நிதியுதவி வழங்குவது, உற்பத்தியை மேம்படுத்த புதிய நுட்பங்களை கடைப்பிடிப்பது மற்றும் உள்ளுரிலும் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி அவர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்.” என HNB துணைப் பொது முகாமையாளர், SME & Microfinance, ரஜீவ் திஸாநாயக்க தெரிவித்தார்.
“குறிப்பாக வளர்ந்து வரும் சந்தை நிலைமைகள் மற்றும் மாறிவரும் வானிலை முறைகளின் தாக்கம் ஆகியவற்றுடன் போராடும் விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகள் சவாலானவையாக இருந்தது. விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதன் மூலமும், எங்கள் விவசாயிகளுக்கு நிலையான சந்தைகளை நிறுவுவதன் மூலமும் விவசாயத் தொழிலை மேம்படுத்துவதில் HNB உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என Agro World (Pvt) Ltd, நிறுவனர், பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான டாக்டர் செல்வநாதன் அனோஜன் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் HNB, SLAF மற்றும் Agro World ஆகியவற்றிலிருந்து விரிவான ஒத்துழைப்புகளைப் பெறுவார்கள், மானியங்கள், குறைந்த வட்டியில் கடன்கள், அதிநவீன விவசாய நுட்பங்கள் மற்றும் அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை ஆகியவற்றை எளிதாக்கும்.
Agro World, மற்றும் Sri lanka Agro Forum மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து, பங்குபெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மானியம் வழங்குவதற்கு வசதியாக இருக்கும். ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, விவசாயிகளை மேலும் மேம்படுத்துவதற்கு HNB சலுகைக் கடன்களை வழங்கும் மற்றும் Agro World தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புக்களை வழங்கும்.