தேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் புதிய அடித்தளத்தை உருவாக்கி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபராக (AP) உரிமம் பெற்ற முதல் வங்கிகளில் ஒன்றாக மாறியது.
நிபுணத்துவத்துடன் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி என்ற விடயங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மாதிரி நகரம்தான் கொழும்பு துறைம நகரம். மிக உயர்ந்த தரத்தில் வர்த்தக, வாழ்க்கை முறை மற்றும் குடியிருப்பு வாய்ப்புகளை வழங்கும் பிராந்தியத்தின் நவீன சேவை மத்திய நிலையமாகவும் எதிர்காலத்தின் நிதி மையமாகவும் இந்த நகரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தீவு வாழ்க்கை, சென்ட்ரல் பார்க் வாழ்க்கை, மரினா, சர்வதேச தீவு மற்றும் நிதி மாவட்டம் என ஐந்து தனித்துவமான பகுதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தின் நிலப்பரப்பான 269 ஹெக்டேர் மொத்த நிலப்பரப்பையும், 6.4 மில்லியன் சதுர மீட்டர் மொத்த கட்டப்பட்ட பரப்பையும் கொழும்பு துறைம நகரம் கொண்டுள்ளது. நகரத்தில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 273,000, 143,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மொத்த எதிர்பார்க்கப்படும் முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட துறைமுக நகர ஆணைக்குழு மசோதா, மாற்றத்தை உருவாக்கும் கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழிவகுக்கிறது, 25 ஆண்டுகள் வரையிலான வரி விலக்குகளை வழங்குகிறது – சர்வதேச வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை இடம்பெயர்த்து, முக்கிய முதலீடுகளை ஈர்த்து, உலகளாவிய திறமையை ஈர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வழிவகுக்கும் முக்கிய காரணியாகும்.
ஆசியா பசிபிக் பகுதி 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக இருந்தது மற்றும் உலக வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மற்ற பகுதிகளை ஆசியாவுடன் இணைக்கும் அனைத்து முக்கிய கடல் வழிகளின் மையத்தில் இலங்கை அமைந்துள்ளது. “நிதி, சுகாதாரம், கல்வி, ஓய்வு, விருந்தோம்பல் ஆகியவற்றில் உலகின் முன்னணி வர்த்தகநாமங்களுடன் இலங்கை வழங்கும் சிறந்தவற்றைக் ஒன்றிணைப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், உண்மையிலேயே உலகளாவிய அளவில் சேவைகள் ஏற்றுமதிக்கான தெற்காசிய மையப் புள்ளியை உருவாக்கும்.
“கொழும்பில் துறைமுக நகரத்தில் முதலீடு செய்து செயல்படும் அனைத்து வணிகங்களுக்கும் ஆதரவளிக்கும் உண்மையான உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த வங்கித் தீர்வுகளை வழங்குவதன் மூலம், இந்த வளர்ச்சி அதன் அதிகபட்ச திறனை அடைவதை உறுதி செய்வதில் HNB போன்ற வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, ஜொனதன் அலஸ் தெரிவித்தார்.
தொடர்ச்சியான கடுமையான மதிப்பீடுகள், சட்ட மற்றும் பூர்வாங்க ஒழுங்குமுறை அனுமதிகளுக்குப் பிறகு, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவினால் AP உரிமம் HNBக்கு வழங்கப்பட்டது.
“இலங்கையின் பொருளாதாரத்திற்குள் ஒரு பாரம்பரிய வர்த்தக நாமமாக, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் ஒவ்வொரு முக்கிய தூணிலும் நாம் முன்னிலையில் இருந்தோம். கொழும்பு துறைமுக நகருக்குள் இயங்குவதற்கான பூர்வாங்க அனுமதியைப் பெற்ற முதல் வங்கிகளில் ஒன்றாக, அந்தப் பாரம்பரியத்தை இன்று தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம். உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களுடனும் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புரீதியாக முக்கியமான வங்கியாக, கொழும்பு துறைமுக நகரம் தேசத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் முன்னோடியில்லாத வாய்ப்புகளைத் திறந்து விடுவதைக் காண்கிறோம்.
“கடந்த தசாப்தத்தில் HNB அடைந்துள்ள விரிவான நிறுவன மற்றும் டிஜிட்டல் மாற்றத்துடன், உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட அனைத்து வணிகங்களுக்கும் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம் கொழும்பு துறைமுக நகரம் முழுவதும் முதலீடு மற்றும் வளர்ச்சியை செயல்படுத்த உதவுவதற்காக எங்கள் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும். இந்த வகையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற நிதி மையங்களுக்கு இணையாக போட்டியிடும் வகையில் கொழும்பு துறைமுக நகரத்தை உயர்த்த உதவுவதுடன், தெற்காசியாவின் தனித்துவமான பலத்தைப் பயன்படுத்தி, சேவைகள் ஏற்றுமதியில் ஒரு புதிய உலகளாவிய அளவுகோலை உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர் – மொத்த வங்கிக் குழுமம், தமித் பல்லேவத்த தெரிவித்தார்.