தித்வா புயலுக்குப் பின்னர் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ ஜனசக்தி லைஃப் முன்வந்துள்ளது

Share

Share

Share

Share

காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும், JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமுமான ஜனசக்தி லைஃப் அண்மையில் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியொன்றை நிறைவேற்றியிருந்தது. நிறுவனத்தின் Life Operations குழு தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தின் ஊடாக தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பாடசாலையான மஹோ/ பக்மீவேவ ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

இந் நடவடிக்கை, குறிப்பாக வசதி குறைந்த சமூகங்களில், உள்வாங்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கான சம அணுகலுக்கான ஜனசக்தி லைஃப்பின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். புயலுக்குப் பின்னர், மாணவர்களின் உடனடி கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன் ஊடாக அவர்கள் பாதுகாப்பாக, கல்வி கற்கக் கூடிய சூழலில் கற்றலை மீண்டும் தொடங்கினர்.

இம் முயற்சியின் பகுதியாக, ஜனசக்தி லைஃப் புத்தகங்கள், பாடசாலைப் பைகள், எழுதுபொருட்கள் மற்றும் Multimedia projector ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியது. இது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாடசாலையின் ஒட்டுமொத்த வகுப்பறை வளங்களையும் மேம்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே, “ஜனசக்தி லைஃப்பில் நிதிப் பாதுகாப்பைத் தாண்டி நாங்கள் சேவையாற்றும் சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதும் எமது பொறுப்பாகும். குறிப்பாக இடர் ஏற்படும் காலங்களில் கல்விக்கான ஆதரவு என்பது எதிர்காலத்திற்கான முதலீடாகும். மீட்பு முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற எங்கள் கொள்கையை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது. மேலும், எந்தவொரு பிள்ளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.

Life Operations குழுவால் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்திற்கு நிறுவனத்தின் ஏனைய பல பிரிவுகளைச் சேர்ந்த சக ஊழியர்கள் ஆதரவு வழங்கினர். இது வலுவான கூட்டுணர்வையும் ஒத்துழைப்பையும் சமூகப் பொறுப்புணர்வுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்த சமூகச் செயற்பாட்டின் தாக்கம் குறித்துப் பேசிய, Life Operations பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் பாத்திமா அஹ்மீர், “புயலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இம் மாணவர்களின் தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எமது ஆதரவு ஊடாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் அதே வேளை அன்றாட கற்றலை மேம்படுத்துவதே நோக்கம் ஆகும். நிறுவனம் முழுவதிலுமிருந்து இம் முயற்சிக்கு கிடைத்த பேராதரவு உண்மையிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.” என்றார்.

இது போன்ற முயற்சிகள் மூலம், ஜனசக்தி லைஃப் பொறுப்பான நிறுவனமாக அதன் பங்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கல்வி மற்றும் நீண்டகால சமூக நல்வாழ்வுக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கும் அதே வேளை அதன் செயல்பாடுகளில் சமூக மேம்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது.

ஜனசக்தி லைஃப் பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

Prime Group Drives Knowledge‑Building Program...
IMRA Awards 2026 opens applications...
Thayalan Bartlett Named Among APAC’s...
Gartner® Peer Insights™ ‘வாடிக்கையாளர் தெரிவு’...
Janashakthi Life transforms workplace compassion...
Smart Quest marks 20 years...
சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026...
City of Dreams Sri Lanka...
Smart Quest marks 20 years...
சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026...
City of Dreams Sri Lanka...
Huawei අඛණ්ඩව දෙවන වරටත් Gartner®...