CA Sri Lanka இனது 60 ஆவது ஆண்டு நிறைவு TAGS விருதுகள் 2025இல் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மதிப்புமிக்க விருதுகளை வென்றது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியானது CA Sri Lanka வின் 60 ஆவது ஆண்டு நிறைவு TAGS விருதுகள் 2025இல் (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைத்தன்மை) மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டது. இது நிறுவன நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவன அறிக்கையிடலில் உயரிய நிலைகளை பேணும் அதன் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

TAGS விருதுகளின் 60 ஆவது ஆண்டு நிறைவு “வைர விழா” அண்மையில் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE) ஆதரவு வழங்கியிருந்தது. TAGS விருதுகள், ஆறு தசாப்த காலமாக நிதி மற்றும் நிதி சாராத அறிக்கையிடலில் விசேடத்துவத்தை வெளிப்படுத்துவதோடு சிறந்த வெளிப்படுத்தல் நடைமுறைகளை கடைபிடிக்கும் நிறுவனங்களை கௌரவிக்கின்றது.

2025 விருதுகளில் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி கூட்டு நிறுவன நிர்வாக வெளிப்படுத்தலுக்கான (நிதிச் சேவைகள் சிறப்பு விருதுப் பிரிவு) அங்கீகாரச் சான்றிதழையும் ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான அங்கீகாரச் சான்றிதழையும் அத்துடன் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பிரிவில் (குழுமச் சொத்துக்கள் ரூ.25–75 பில்லியன்) வெண்கல விருதையும் வென்றது.

CA Sri Lanka இனால் வழங்கப்பட்ட இந்த கௌரவங்கள், கடுமையான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. இவ்விருதுகள், இலங்கையின் நிதி மற்றும் லீசிங் துறையில் பொறுப்புடன் செயல்படும் மற்றும் வலுவான நிர்வாக அமைப்பைக் கொண்ட நிறுவனமாக ஜனசக்தி பைனான்ஸின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.

இவ்விருதுகள், நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டறிக்கை குறித்து வழங்கப்பட்டன. அவ் அறிக்கை, நிறுவனத்தின் நிதி செயல்திறன், நிர்வாக கட்டமைப்பு, இடர் முகாமைத்துவ நடைமுறைகள், நிலைத்தன்மை முயற்சிகள் மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்க அணுகுமுறைகளை தெளிவாக விளக்குகிறது. இது வெறும் நிதி அறிக்கையாக மட்டுமல்லாமல், நிறுவனத்தின் முழுமையான தகவல் தொடர்பு கருவியாகவும் செயல்படுகிறது. நிதிச் சேவைத் துறைக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அறிக்கை, கூட்டு நிறுவன நிர்வாக வெளிப்பாட்டில் தனது முக்கியத்துவத்தால் தனித்து விளங்குகிறது. மேலும், நிர்வாக கட்டமைப்புகள், உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் குறித்து தெளிவான உள்விடயங்களையும் வழங்குகிறது.

நிதி மற்றும் நிதி சாராத தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கும் இந்த அறிக்கை, நிர்வாகம் எவ்வாறு நிலையான செயல்திறனையும் மூலோபாய வளர்ச்சியையும் ஆதரிக்கும் அதே வேளை ஒழுங்குமுறை தேவைகள், வளர்ந்து வரும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச சிறந்த அறிக்கையிடல் நடைமுறைகளையும் பின்பற்றுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த சாதனை குறித்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்து தெரிவிக்கையில், “TAGS விருதுகள் 2025 இல் பெறப்பட்ட கௌரவங்கள் ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். எமது அறிக்கையிடல் கலாச்சாரத்தில் பொதிந்துள்ள ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அவை பிரதிபலிக்கின்றன. எங்கள் ஆண்டறிக்கை, இணக்கப்பாட்டைக் கடந்து நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம், இடர்களை கையாளுகிறோம் மற்றும் நிலையான மதிப்பை உருவாக்குகிறோம் என்பதைக் குறித்து எமது பங்குதாரர்களுக்கு தெளிவான புரிதலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. CA Sri Lanka வின் இந்த சுயாதீன அங்கீகாரம், எங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள் மற்றும் வணிகப் பங்காளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.” என்றார்.

அவர் மேலும், “கூட்டு நிறுவன நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, ஒழுங்குபடுத்தல் ஒழுக்கம் மற்றும் வெளிப்படுத்தல் விசேடத்துவம் ஆகிய துறைகளில் நிறுவனம் கடைப்பிடித்து வரும் உயர் தராதரங்களை இவ்விருதுகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், அறிக்கையிடல் நடைமுறைகளின் தரத்தையும் தெளிவையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் பொறுப்பான நிதி அறிக்கையிடலில் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தொடர்ந்து வலுவான அளவுகோல்களை அமைத்து வருகிறது. TAGS விருதுகள் 2025இல் கிடைத்த அங்கீகாரம், பங்குதாரர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு நம்பகமான, வெளிப்படையான மற்றும் எதிர்காலத்தின் மீதான அவதானம் கொண்ட நிதி நிறுவனமாக நிறுவனத்தின் வர்த்தகநாம நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.

முற்றும்.

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும்...
Syntetica raises $30M Series A...
ජපන් නියෝජිතයින් 250කගේ සහභාගීත්වයෙන් ‘Little...
Geoffrey Bawa Trust Expands Sri...
කොළඹ නගරයේ ආගන්තුක සත්කාර සහ...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...