ஆயிரக்கணக்கான விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றி கட்டமைக்கப்பட்ட சரணாலயம் Animal SOS Sri Lanka

Animal SOS Sri Lanka என்பது ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும், இது இலங்கையின் தெற்கு கரையோரத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் விலங்குகளை மரணத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கு சிறந்த நாளைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுகின்ற நிறுவனமாகும். திருமதி Kim Cooling அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உண்மையான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்கும் பணியைச் […]
2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி வளர்ச்சியுடன் எதிர்கால வளர்ச்சி எல்லைகளை விரிவுபடுத்தும் இலங்கை ஆடைத் தொழில்

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதுடன், இது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. நாட்டின் நேரடி ஜவுளி ஏற்றுமதியைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் விடா முயற்சியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. […]
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறையை நடத்திய HNB FINANCE

பாடசாலை மாணவர்களின் படைப்புத் திறன்கள் மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், HNB FINANCE PLC இன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ”HNB Finance Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறை, கடந்த ஆண்டு ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியின் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு HNB FINANCE “யாலு” சிறுவர் சேமிப்புக் கணக்கு பூரண அனுசரணை வழங்கியது. கல்வி அமைச்சின் முன்னாள் கலை […]
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha K.

சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து, பல படைப்பாளிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தை விழிப்பூட்டும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக மாறியுள்ளது. சாஷா கே. அல்லது சாஷா கருணாரத்னவும் இத்தகைய வாய்ப்பின் மூலம் TikTok தளத்தில் வெற்றி பெற்ற ஒரு படைப்பாளி ஆவார். ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமான இவர், தொலைக்காட்சியின் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து, மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சென்றடைவது ஒரு TikTok படைப்பாளராக ஆகும். தொகுப்பாளராhக தனது அனுபவத்தையும், திறமையையும் சிறப்பாகப் பயன்படுத்தி, […]
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

இலங்கையின் ஆடைத் தொழிலில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துள்ளது. “Inclusive Threads” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் ஆதரவுடன், Better […]
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் அமைந்தன. இது புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரஸ்பர அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது. இதன்போது 2025 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட, சுற்றுச்சூழலுக்கு […]
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்(CCCI)

இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கலாச்சார மற்றும் பொருளாதார அடித்தளமாக, தேங்காய் வீட்டுக்கு தேவையான உணவுக்கும் இன்றியமையாதவை மற்றும் நாட்டிற்கான அந்நிய செலாவணிக்கும் குறிப்பிடத்தக்க மூலமாவும் உள்ளது. நாட்டின் சராசரி மாத தேவை 250 மில்லியன் தேங்காய்கள் ஆகும், இதில் 150 மில்லியன் உள்நாட்டில் […]
Sunshine Foundation for Goodஇன் 20வது நீர் சுத்திகரிப்பு அலகு சேனகமவில் திறந்து வைக்கப்பட்டது

தியசரண திட்டத்தின் மூலம் இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் நன்மையைக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை சன்ஷைன் வலியுறுத்துகிறது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூகம் எதிர்கொள்ளும் நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொடர்ந்து உறுதியளிக்கும் முயற்சியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (SFG), அதன் 20வது RO Plantஐ ஆரம்பித்தது. நாவுலவில் உள்ள சேனகம, கிராமத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு அலகு (RO Plant) அண்மையில் திறக்கப்பட்டது. […]
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்

முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் திரு. சுனில் பொஹோலியத்த அவர்கள் சுமார் 170 வருடங்களாக காலத்திற்கு காலம் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியிலும் வலுவாக முன்னோக்கிச் செல்ல முடிகிறது.இந்த காலகட்டத்தில், தொழில்துறையின் உரிமையாளர் தன்மையானது 124 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனித்துவ உரிமையிலிருந்து சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்திற்கு (1948 – 1975, 27 ஆண்டுகள்) குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேசியவாத உணர்வுகள் நில உரிமைகளின் முடிவுகளில் மாற்றங்களுக்கு […]
இலங்கையர்களின் புன்னகைக்கு வலுவூட்டும் DENTA வின் ‘வளரும் புன்னகைக்கான பல் பராமரிப்பு’ நிகழ்ச்சித் திட்டம்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையர்களின் வாய் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி வர்த்தக நாமமான DENTA, அதன் தனித்துவமான ‘வளரும் புன்னகைக்கான பல் பராமரிப்பு’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வாய் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவர்களுக்காக இலவச பற்சிகிச்சை மருத்துவ முகாம்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]