இலங்கையின் திறந்த வகை வருமான நிதியங்களில் (Open-Ended Income Funds) அதிகபட்ச 5 ஆண்டு CAGRஐ First Capital Fixed Income Fund வழங்குகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான First Capital Holdings PLC இன் செல்வ (wealth) முகாமைத்துவப் பிரிவான First Capital Asset Management Limited (FCAM), அதன் அலகு நம்பிக்கை நிதிய (unit trust) திட்டங்களை First Capital Fixed Income Fund (FCFIF) ஊடாக மேம்படுத்தியுள்ளது. இது முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்துவதுடன் பல்வேறு நிதி மற்றும் முதலீட்டு இலக்குகளை கொண்ட முதலீட்டாளர்களுக்கு தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் அலகு நம்பிக்கை நிதியங்களை எளிதில் […]

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்தும் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இலங்கையின் விவசாயத் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி.எஸ். சேனாநாயக்க அவர்கள், உண்மையான இலங்கையின் அடையாளத்தை நன்கு உணர்ந்தவராக நடவடிக்கை எடுத்தார். அதுவரை வறண்ட நிலமாக இருந்த திகாமடுல்ல பகுதியை நீர் வளத்தால் வளப்படுத்தும் பொருட்டு, சேனாநாயக்க சமுத்திரத்தைக் கட்டுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கினார். செழிப்பான நிலப்பரப்பைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் விவசாய மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரும் திட்டமான சேனாநாயக்க சமுத்திரத்தின் இடது கரையில் இருந்து ஊட்டம் […]

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கான திறன் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட அமுல்படுத்துவது குறித்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட 301 ஆம் பிரிவின் கீழான விசாரணைகளின் இறுதி முடிவுகளின்படி, 18 நாடுகளுக்கு 10% தீர்வை வரி (Tariff) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வைக் கொள்கையின் கீழ் ஏனைய 42 நாடுகளுக்கு 12.5% தீர்வை வரி விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் […]

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை மீண்டும் கட்டியெழுப்ப “Nana Savi Mehewara” திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் HNB

தித்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்வி செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய முயற்சியான Nana Savi Mehewara திட்டத்தை, இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. HNB பரந்த கிளைக் கட்டமைப்பின் மூலம், Nana Savi Mehewara திட்டம் இலங்கை முழுவதிலும் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்தது. 250க்கும் மேற்பட்ட HNB கிளைகளில் அமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் நாட்டின் […]

பயிர் திருட்டு காரணமாக இலங்கையின் விவசாயத் துறைக்கு மில்லியன் கணக்கில் இழப்பு: அவசர அரசாங்க நடவடிக்கைக்கு தொழில் துறை அழைப்பு

மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் மிளகு, ஏலக்காய், கறுவா உள்ளிட்ட உயர்மதிப்புப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படும் சம்பவங்கள், அந்தத் துறையில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், நிறுவனங்கள் பாதுகாப்பிற்காகப் பெருந்தொகையைச் […]

கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பதக்க மேடை (Podium) மற்றும் விளையாட்டு ஆடைகளை எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கைப் பொதுநலவாய விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகளின் தொகுப்பு, ஜூலை 15ஆம் திகதி கொழும்பிலுள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்ற இலங்கை […]

இலங்கையில் மனிதர்களும் இயற்கையும் எவ்வாறு இணைந்து செழிக்க முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கும் ஜெஃப்ரி பாவா மூனமல் விருது

கொழும்பு, செவ்வாய்க்கிழமை 21 ஜூலை 2026: ஜெஃப்ரி பாவா மூனமல் விருது, இலங்கையில் வடிவமைப்பு பற்றிய ஒரு புதிய சிந்தனை முறையை அறிமுகப்படுத்துகிறது; இது மனிதர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், அவர்களைச் சுற்றியுள்ள நிலம், நீர், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அமைப்புகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்வதை ஊக்குவிக்கும் புத்தாக்கமான வடிவமைப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வடிவமைப்புகள், மீட்டெடுக்கப்பட்ட இயற்கை நிலப்பரப்புகள், […]

ஜனசக்தி லைஃப், பொசன் பக்தர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான ஆதரவை வலுப்படுத்துகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தகநாமமான ஜனசக்தி லைஃப், பொசன் பூரணைக் காலத்தில் அனுராதபுரத்தில் சுகாதார சேவைகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் நலனை ஆதரிக்கும் வகையில் சமூகம் சார்ந்த முன்னெடுப்பை மேற்கொண்டது. நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியதுடன் மருத்துவ உதவியை நாடும் வருகையாளர்களின் அணுகலை மேம்படுத்துவதற்காக வைத்தியசாலைக்கு புதிய பெயர்ப் பலகையையும் நிறுவியது. யாத்திரைக் காலத்தில் மக்கள் நடமாட்டத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் உதவும் நோக்கில் ஜனசக்தி […]

சம்மேளன ஒழுங்குமுறை சீர்திருத்தம் மற்றும் நோயாளி அணுகலை மேம்படுத்தி வரும் நிலையில், சாந்த பண்டார மீண்டும் SLCPI தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 65ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், சன்ஷைன் ஹெல்த்கேர் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாந்த பண்டார 2026/27ஆம் ஆண்டுக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சுகாதாரப் பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இவருடன் அரசாங்கப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், முன்னாள் தலைவர்கள், உறுப்பு நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த ஏனைய […]

ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது குறித்து ஐபிஜி நிறுவனம் அறிக்கை

லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் தொடரின் வணிக மற்றும் நிகழ்வு உரிமைகளைத் கொண்டுள்ள ஐபிஜி (IPG) நிறுவனம், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மற்றும் முன்னாள் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரரான மன்ஜோத் கல்ரா விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியான செய்திகள் குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐபிஜி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: லங்கா […]