Gartner® Peer Insights™ ‘வாடிக்கையாளர் தெரிவு’ விருதை தொடர்ந்து 2ஆவது ஆண்டாக வென்று Huawei சாதனை

Share

Share

Share

Share

2026 ஆம் ஆண்டிற்கான Gartner Peer Insights மதிப்பீட்டில் காப்புப்பிரதி மற்றும் தரவுப் பாதுகாப்பு (Backup and Data Protection) பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் தேர்வாக Huawei நிறுவனம் அண்மையில் கௌரவிக்கப்பட்டது. இது அந்நிறுவனம் இந்த கௌரவத்தை தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது முறையாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, 241 வாடிக்கையாளர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் Huawei நிறுவனத்திற்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் OceanProtect தயாரிப்புகள் தரவுப் பாதுகாப்பிற்கு (Data Protection) பரிந்துரைக்கப்படுவதற்கு 100% தகுதியானவை என வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Gartner Peer Insights என்பது வணிக மென்பொருள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நபர்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் மதிப்புரைகளை வழங்குவதற்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளமாகும். வாடிக்கையாளர் அனுபவம், பயன்பாட்டின் எளிமை மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் பிரபலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் Huawei நிறுவனத்திற்கு இந்த மதிப்பீடு கிடைத்துள்ளது. குறிப்பாக, சந்தையில் பொதுவான பயனர் ஆர்வம் மற்றும் மதிப்பாய்வு புள்ளிகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த மதிப்பீட்டிற்காகக் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் Huawei நிறுவனம் OceanProtect வாடிக்கையாளர் மதிப்பீடுகளில் 5 புள்ளிகளுக்கு 4.9 என்ற அதிக புள்ளிகளைப் பெற்று, நிதி, உற்பத்தி மற்றும் வலுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. Huawei நிறுவனம் OceanProtect தயாரிப்புகளின் தரம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை குறித்து உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த Huawei தரவுப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் திரு. சாங் கே ((Song Ke), “தரவுப் பாதுகாப்பிற்காக Gartner Peer Insights வாடிக்கையாளர் தேர்வாக OceanProtect மீண்டும் விருது பெற்றிருப்பது Huawei நிறுவனம் அடைந்த ஒரு தனித்துவமான கௌரவமாகும். இது எமது தயாரிப்புகளின் நவீனமயமாக்கல் மற்றும் சிறந்த சேவை குறித்து வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.” எனத் தெரிவித்தார். மேலும், தொடர்ச்சியான புத்தாக்கத்திற்காக உழைக்கும் தமது நிறுவனம், எதிர்காலத்திலும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வேகமான, செலவு குறைந்த மற்றும் வலுவான தரவுப் பாதுகாப்பு தீர்வுகளை வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தயாரிப்புகள் குறித்த மேலதிக விபரங்களை https://e.huawei.com/en/products/storage/oceanprotect என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Janashakthi Finance Wins Silver at...
Lina Manufacturing wins two awards...
Sri Lanka International Insurance Summit...
MAS සමුහයේ සහ Brandix ලංකා...
Capital Trust Properties wins Asia...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
HNB FINANCE பணிப்பாளர் சபைக்கு சிவராஜா...