HNB FINANCE PLC இன் புதிய தலைவராக ராஜீவ் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

Share

Share

Share

Share

ராஜீவ் திஸாநாயக்க 2024 ஜனவரி 8 முதல் HNB FINANCE PLC இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் HNB FINANCE இன் தலைவராக கடமையாற்றிய டில்ஷான் ரொட்ரிகோவிற்குப் பின்னர் ராஜீவ் திஸாநாயக்க அதன் புதிய தலைவராக செயற்பட்டு வருகிறார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ராஜீவ் திசாநாயக்க, 2017 ஆம் ஆண்டு முதல் HNB FINANCE இன் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கு முன், தணிக்கை மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளதுடன், இன்று, அவர் மூலோபாய மற்றும் முதலீட்டு மறுஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றி தனது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்.

ராஜீவ் திஸாநாயக்க வங்கி மற்றும் மூலதனச் சந்தைகளில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். அவர் தற்போது HNB இல் சிறு, நடுத்தர மற்றும் சிறு நிதிகளின் துணை பொது முகாமையாளராகவும் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர், அவர் HNB இன் தலைமை நிதி அதிகாரியாகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.

தலைவர் என்ற வகையில், ராஜீவ் திஸாநாயக்க, HNB FINANCE நிறுவனத்தை அதன் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலமும், வணிக வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் மூலமும் வழிகாட்டுவார். அவர் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் நிதித் துறையை மேலும் வலுப்படுத்துவார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வழிகாட்டுவார்.

HNB FINANCE இன் தலைவர் என்ற பதவியைத் தவிர, திஸாநாயக்க Acuity Partners (Pvt.) Ltd, Lanka Venture PLC மற்றும் Lanka Energy Fund PLC ஆகியவற்றின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். CFA தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராக இருப்பதுடன், பட்டய நிர்வாகக் கணக்காளர்களின் உறுப்பினராகவும், பட்டய உலகளாவிய முகாமைத்துவக் கணக்காளராகவும் அவர் தனது தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொண்டார்.

 

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...