TAGS Awards 2025 நிகழ்வில் HNB FINANCE வெள்ளி விருது வென்று சாதனை

Share

Share

Share

Share

இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS Awards 2025இன் வைர விழா நிகழ்வில், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் பிரிவில் (மொத்த குழும சொத்துக்கள் 25–75 பில்லியன் ரூபா) HNB Finance PLC வெள்ளி விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இவ்விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்ற வெற்றியாக அமைந்தது.

கடந்த ஆண்டு வென்ற வெண்கல விருதிலிருந்து (Bronze), இம்முறை வெள்ளி விருதிற்கு (Silver) HNB Finance முன்னேறியுள்ளது. இது வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக்கூறல் (Accountability), ஆளுமை (Governance) மற்றும் நிலைத்தன்மை (Sustainability) ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. TAGS Awards 2025இல் வெள்ளி விருதை வென்றது மாத்திரமன்றி, ‘ Corporate Governance Disclosure – Financial Services’ மற்றும் ‘ Integrated Reporting’ ஆகிய சிறப்பு விருதுப் பிரிவுகளிலும் இந்நிறுவனம் அங்கீகாரச் சான்றிதழ்களைப் (Certificates of Recognition) பெற்றுக்கொண்டது. இந்த கௌரவங்கள், வலுவான ஆளுமை நடைமுறைகள் மற்றும் உயர் தரத்திலான வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கையிடலைப் பேணுவதில் நிறுவனத்தின் நிலையான அர்ப்பணிப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கூறுகையில்: “இந்தச் சாதனையானது, வருடாந்த அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவன நடத்தையின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணுவதில் நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது எமது நெறிமுறை சார்ந்த நடைமுறைகள் மற்றும் தொழில்துறை தரநிலைகளுடனான முழுமையான இணக்கப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்காக TAGS விருதுகள் குழுவிற்கும் இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்திற்கும் (CA Sri Lanka) எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை சார்ந்த உழைப்பு இன்றி இந்த கௌரவத்தை வென்றிருக்க முடியாது; இந்த வெற்றியில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.” என தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 60ஆவது TAGS Awards 2025இன் பிரம்மாண்டமான இறுதி நிகழ்வு, நிறுவன அறிக்கையிடலில் (Corporate Reporting) சிறந்து விளங்குபவர்களைக் கௌரவித்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள், பாரிய நிறுவனக் கூட்டமைப்புகள் முதல் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SMEs) வரை பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன. நிதி மற்றும் நிதிசாரா அறிக்கையிடலில் உயர்தரமான நடைமுறைகளைப் பேணுவதில் தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அதேவேளை, நிறுவன அறிக்கையிடலின் தரநிலைகளை உயர்த்துவதிலும் இவை முன்னோடியாகத் திகழ்ந்தன.

காலத்திற்கேற்ற மற்றும் தகவல் செறிந்த வருடாந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பங்குதாரர்களுடன் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதே இவ்விருதுகளின் நோக்கமாகும். அத்துடன், நிதி மற்றும் நிதிசாரா தகவல்களை வலுவான முறையில் முன்வைப்பதை ஊக்குவித்தல், சட்டரீதியான தேவைகள் மற்றும் இலங்கை கணக்கீட்டுத் தரநிலைகளுடனான இணக்கப்பாட்டை உறுதி செய்தல் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையிடல் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதை வளர்த்தெடுத்தல் ஆகியவையும் இதன் இலக்குகளாகும். இந்த நிகழ்வானது நாட்டின் நிறுவனத் தலைமைகளை ஒன்றிணைத்ததுடன், மேம்பட்ட டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் ஒருங்கிணைப்பு மூலம் மேலும் வலுவடைந்துள்ள ‘Corporate Reporting’ வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகவும் அமைந்தது.

இந்தச் சாதனைகள், HNB Finance நிறுவனத்தின் அறிக்கையிடல் தரநிலைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், பொறுப்பான வளர்ச்சி, வலுவான ஆளுமை மற்றும் பங்குதாரர்களுடனான நம்பிக்கையூட்டும் ஈடுபாடு ஆகியவற்றில் கொண்டுள்ள பரந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன. இது வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியான சிறந்து விளங்கும் செயல்பாடுகளுக்கான தெளிவான திசையை அமைத்துக் கொடுக்கின்றது.

දිට්වා සුළි කුණාටුවෙන් විනාශ වූ...
භාතිය සහ සන්තුෂ්, Soho Hospitality...
இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய...
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின்...
Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு...
TAGS Awards 2025 நிகழ்வில் HNB...
සිය ගනුදෙනුකරුවන්ගේ බැංකුකරණ අත්දැකීම වැඩිදියුණු...
ITC Ratnadipa Presents an Easter...
TAGS Awards 2025 நிகழ்வில் HNB...
සිය ගනුදෙනුකරුවන්ගේ බැංකුකරණ අත්දැකීම වැඩිදියුණු...
ITC Ratnadipa Presents an Easter...
Rotary Club of Colombo Uptown...