Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு Plan for Change திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த MAS

Share

Share

Share

Share

இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான MAS Holdings, தனது ‘Plan for Change’ திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அண்மையில் இரண்டு அதிகாரப்பூர்வ bluesign® கூட்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. அதன்படி, MAS Holdingsஇன் கீழ் இயங்கும் Texo (Pvt) Ltd (பருத்தி துணி பதப்படுத்தும் தொழிற்சாலை) மற்றும் Noyon Lanka (லேஸ் உற்பத்தி நிறுவனம்) ஆகியவை இத்திட்டத்தில் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொறுப்பான உற்பத்தி செயல்முறைக்காக நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் bluesign® கூட்டாளிகளாக மாறுவதன் மூலம், MASஇன் ஈரப்பத துணி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் 75% பொறுப்பான இரசாயன நிர்வகிப்புக்கான உயரிய சர்வதேச தரங்களுக்கு இணங்கும். இது MASஇன் Plan for Change 2030 நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கு பெரும் வலிமையை வழங்கும் என்பது உறுதி.

இந்தத் திட்டத்தில் bluesign® முறைமைக் கூட்டாளியாக மாறுவது என்பது எளிதான காரியமல்ல. இதற்காக, நிறுவன செயல்முறைகளையும் இயக்கத் தரங்களையும் உலகின் உயரிய மட்டத்திற்கு உயர்த்த பெரும் அர்ப்பணிப்பும் முதலீடும் தேவைப்படுகிறது. இங்கு, அந்தத் தொழிற்சாலைகளில் துணி நெசவு, சாயமிடுதல், வடிவமைப்புப் பணிகள் மற்றும் லேமினேட் செய்தல் போன்ற அனைத்து உற்பத்திப் படிநிலைகளும் கடுமையான சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதாக ஒரு சுயாதீன நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது.

துணி உற்பத்தியில் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களை அகற்றுதல், வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான உலகில் அங்கீகரிக்கப்பட்ட முறையாக bluesign®ஐக் குறிப்பிடலாம். இதில் கூட்டாளிகளாக மாறுவதன் மூலம், உலகளாவிய உற்பத்தியாளர் வலையமைப்பில் இணைவதற்கு Texo மற்றும் Noyon தொழிற்சாலை நிறுவனங்களுக்கு சாத்தியமாகியுள்ளதோடு, அது MASஇன் உள்நாட்டு விநியோக சங்கிலியை மேலும் வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இந்த சிறப்பான மைல்கல்லைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த MAS Holdingsஇன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பொது முகாமையாளர் தனுஜி ஜயபால் கூறியதாவது: “தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட நிலைத்த செயல்முறைகளை எங்கள் இயக்கங்களில் இணைத்துக்கொள்வதற்கான MASஇன் அர்ப்பணிப்பு இந்த சாதனையின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் எங்கள் வர்தத்தக நாம கூட்டாளிகளுக்கும் ஒட்டுமொத்தத் தொழில்துறைக்கும் பொறுப்புடன் கடமைப்பட்டிருப்பதை உறுதி செய்யும் ஒரு வாய்ப்பாக bluesign® ஐ அறிமுகப்படுத்த முடியும்” என தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டாண்மை காரணமாக Texo மற்றும் Noyon bluesign®இன் இரசாயன நிர்வாக முறைமையின் கீழ் இயங்கும்; அதன் மூலம் உற்பத்திப் பணிகளுக்கு bluesign®இன் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான இரசாயனப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் இரசாயனப் பொருட்களின் தன்மை மற்றும் செயல்பாடு குறித்து அளவிடுவதற்கு CUBE, FINDER மற்றும் GUIDE போன்ற bluesign®இன் நவீன டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இங்கு கருத்துத் தெரிவித்த bluesign®இன் தலைமை வணிக முகாமையாளர் பார்பரா ஒஸ்வால்ட்,: “MASஇன் மேலும் இரண்டு நிறுவனங்கள் bluesign® முறைமைக் கூட்டாளிகளாவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். Texo மற்றும் Noyon ஆகியவற்றை bluesign® குடும்பத்திற்கு மிகவும் அன்புடன் வரவேற்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக bluesign® முறைமையுடன் MAS இணைந்தது, அதன் MAS Fabrics – Intimo அந்தச் சான்றிதழைப் பெற்ற தெற்காசியாவின் முதல் ஆடைத் தொழிற்சாலை நிறுவனமாக மாறியதன் மூலமாகும். MAS நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பு முழுவதும் பாதுகாப்பான இரசாயனப் பயன்பாட்டை உயர்த்துவதில் தெளிவான வளர்ச்சியை இந்தப் புதிய நடவடிக்கை மூலம் வெளிப்படுத்துகிறது.

HNB, නවතම වාහන මාදිලි රැසක්...
දිට්වා සුළි කුණාටුවෙන් විනාශ වූ...
භාතිය සහ සන්තුෂ්, Soho Hospitality...
இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய...
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின்...
Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு...
TAGS Awards 2025 நிகழ்வில் HNB...
සිය ගනුදෙනුකරුවන්ගේ බැංකුකරණ අත්දැකීම වැඩිදියුණු...
Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு...
TAGS Awards 2025 நிகழ்வில் HNB...
සිය ගනුදෙනුකරුවන්ගේ බැංකුකරණ අත්දැකීම වැඩිදියුණු...
ITC Ratnadipa Presents an Easter...