TikTok ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களுக்கான செயலமர்வு

Share

Share

Share

Share

2024, செப்டம்பர், இலங்கை – இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில் TikTok அண்மையில் நடத்திய செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

#GrowWithTikTok Masterclass என்று பெயரிடப்பட்ட இந்த செயலமர்விற்கு, தங்களது வணிகங்களை வளர்த்துக்கொள்வதற்கு TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ள, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் உரிமையாளர்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமது வணிகங்களின் நாமத்தை விளம்பரப்படுத்தவும், இளைஞர்களுடன் இணைந்து செயல்படவும் மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் TikTok இன் தனித்துவமான அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த சிறப்புப் பயிற்சியைப் பெறும் வாய்ப்பு இந்த செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு கிடைத்தது.

இந்த செயலமர்வின் போது, வணிகத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக, அந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை TikTok நடத்தியது.

இது தவிர, இந்த செயலமர்வில் பங்கேற்றோருக்கு TikTok இன் சக்திமிக்க உள்ளடக்க உருவாக்க சாதனங்கள், பார்வையாளர்களை ஈர்க்கும் சிறந்த நடைமுறைகள் மற்றும் TikTok பிரச்சாரங்களை மேம்படுத்துவதற்கான பயனுள்ள உத்திகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், குறைந்த செலவில் தங்கள் வணிகங்களை மேம்படுத்த TikTok ஐப் எவ்வாறு யன்படுத்துவது குறித்த தெளிவொன்று பங்கேற்பாளர்களுக்கு கிடைத்தது. மேலும், TikTok ஐப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய சமூக வழிகாட்டுதல்கள், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்கும் செயல்முறை பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

TikTok மூலம் பார்வையாளர்களுக்கு பொருத்தமான படைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்குவதற்காக, பரஸ்பர தகவல்தொடர்பு மூலம் தகவல்களைப் பகிரக்கூடிய வகையில் அனைத்து அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், TikTok இன் #GrowWithTikTok Masterclass செயலமர்வு மூலம் மற்ற வணிகங்கள் மற்றும் தனிநபர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அத்துடன், சம வயதுடைய நண்பர்களுடன் இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான விவாதங்களை நடத்துவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. உள்ளூர் வணிகங்களிடையே தங்கள் சமூகத்திற்கான ஒத்துழைப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் கூட்டு வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலமர்வு ஒரு காரணமாக அமையும்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களை வளர்ப்பதற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் TikTok இன் பணியின் மற்றொரு படியாக இது அமைந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலத்தை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களின் முன்னேற்றத்தில் முன்னணி பங்காளியாக இருப்பதே TikTok இன் நோக்கமாகும்.

“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் –...
அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு...
Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...