காதலர் தினத்தன்று, TikTok ஆனது #ValentinesDay என்ற Hashtag இன் மூலம் காதல் மற்றும் படைப்பாற்றலினை ஊக்குவிக்கின்றது.

Share

Share

Share

Share

மன்மதனின் அம்பானது குறி வைத்ததினைப் போன்று, காதலர் தினத்தினை Digital முறையில் கொண்டாடுவதில் TikTok ஆனது முன்னணியில்த் திகழ்கின்றது. இது பாவனையாளர்களினை நவநாகரீகமான மற்றும் மனமகிழ்வூட்டும் அனுபவத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றிணைக்கின்றது. அதன் பல்வேறு உள்ளடக்கங்கள் மற்றும் பாவனையாளர் நட்பு அம்சங்களுடன், TickTok ஆனது பாதுகாப்பான மற்றும் மனதிற்கு இசைவான நிகழ்நிலை சூழலினை ஊக்குவிக்கின்றது, இது படைப்பாளர்களுக்கும் தம்பதிகளுக்கும் மிகவும்உகந்ததாகும். காதல் ஜோடிகள் Dating செய்ய உகந்த இடம் எதுவெனத் தேட, காதலர்கள் பயணத்தினை மேற்கொள்ளத் திட்டமிடுவதோ அல்லது சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பதோ இது போன்ற அம்சங்களினைப் பாவனையாளர்கள் தளத்தில் ஊக்கமளிக்கும் Content களின் மூலம் சொல்லப்படும் விடையத்தில் இருந்து எளிதாகக் கண்டறியலாம்.

TikTok ஆனது கவர்ச்சியின் ஓர் மையமாக அதன் பல்வேறு வித்யாசப்பட்ட உள்ளடக்கங்களுடன் கவர்ந்திழுக்கின்றது, சிறிய அளவிலான வீடியோக்கள் ஆனால் பல்வேறுபட்ட விடையங்கள் என்பனவற்றினை அள்ளி வழங்குகின்றது. ‘Eric & Mani Heinrichs’ என்பவர்களின் புகைப்படத்தினில் பல்வகை நகைச்சுவைக் குறும்புகள், ‘மனைவியுடன் பயணம்’ படத்தின் மயிர்கூச்சரியும் வகையிலான பயணங்கள், Eshi Dias வாழ்க்கை முறை சிந்தனைகள் தொடர்பான விடையங்கள் என எதுவாக இருந்தாலும் TikTok ஆனது அதன்பாவனையாளர்களின் நெஞ்சங்களில் எளிதில் உள்நுழைந்து உத்வேகம் அளிக்கும் துணுக்குகள் என ஏராளமான தகவல்கள், பொழுதுபோக்கு என்பனவற்றிற்கு ஓர் அணுகக்கூடிய மையமாக உருமாறியுள்ளது.

இம் முறை காதலர் தினத்தன்று, TikTok ஐ உருவாக்கியவர்கள் தமது அன்பினை அதன் அனைத்து வடிவங்களிலும் ஏற்றுக்கொண்டு, நினைவுகூர்கின்றனர். அவர்களின் பங்களிப்புகள் TikTok இன் பல்சுவை கொண்ட Content களை சுவைமிக்க தாக்குகின்றது. ஒவ்வொரு பாவனையாளரும் தமது தனித்துவமான சிரப்பம்சங்களினை இனம் கண்டுகொள்ள உதவுகின்றது, அது மட்டும் அல்லாது ஒவ்வொரு படைப்பாளரும் தத்தமது பார்வையாளர்களுடன் இணையவும் இது உதவுகின்றது.

Eric & Manisha Heinrichs (@ericandmani)

Content களை உருவாக்கும் ஒரு தம்பதிகளாக, எமது பயணமானது உண்மையில் விளையாட்டாக கிண்டல் செய்வதன் மூலம் தொடங்கியது. நாம் ஒருவருக்கொருவர் இருக்கக்கூடிய வினோதமான பழக்கவழக்கங்கள் அல்லது குணங்களை நன்கு கவனித்து, அவை எவ்வளவு தொடர்புடையவை என்பதை உணர்ந்தோம். இவ்வதானிப்புகள், நாம் Camera வில் எமது அன்றாட நடவடிக்கைகளினை நாடகமாக்க முடியும் என்று எமது யோசனைகளைத் தூண்டின. அதனாலதான் எமது Video களில் எப்போதும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் உரையாடல்கள், எண்ணங்கள் அல்லது நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெற்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பாக TikTok கின் ஆரம்ப நாட்களில் இருந்து நமது Content கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதனைப் பார்க்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட காலமாக, நாம் தனித்தனி பக்கங்களை வைத்திருந்தோம், ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, ‘Eric’ ஐ ‘Eric & Mani.’ என்று இணைப்பதன் மூலம் ஒரு மைல்கல்லை எட்டினோம். அப்போதுதான் எங்கள் பக்கத்தில் எங்கள் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதை நாம் உணர்ந்தோம்.

மனைவியுடன் மேற்கொண்ட பயணம் (@travelwithwifelk)

Content களினை உருவாக்குவதற்கான எமது பயணம் You tube இல் தொடங்கியது, அங்கு நாம் எமது படைப்பு முயற்சிகளினை கதைகள் மற்றும் அனுபவங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிதோம். இருப்பினும், TikTok என்ற ஒரு விடையம் இருப்பதனைக் கண்டுபிடித்தபோது, அதன்பால் ஈர்க்கக்கப்பட்டோம், நாம் பார்க்கும் விதமே மாறியது, அதிக பயண உள்ளடக்கங்களினைச் செல்ல ஆரம்பிதோம். காதலர் தினத்தில் வருவாய்க்கு ஏற்றபடி அத்தினத்தினைக் கழிக்க விரும்புபவர்களுக்கு, Ella எனும் இடத்திற்கு புகையிரதப் பயணத்தினைப் பரிந்துரைக்கின்றோம். இந்த புகையிரதமானது Kandy க்கும் Ella வுக்கும் இடையே உள்ள அற்புதமான தேயிலைத் தோட்டங்களின் ஊடாகப் பயணிக்கின்றது. நீங்கள் உணவருந்த வேண்டுமா. ஆம் , காதலர் தினத்திற்காக, இருக்கவே இருக்கின்றது Nelum Kuluna இல் உள்ள Blue Orbit Restaurant, அதனை நாம் மிகவும் பரிந்துரைக்கின்றோம். அற்புதமான சூரிய அஸ்தமனம் மற்றும் கொழும்பின் பரந்த காட்சிகள் என மறக்க முடியாத ஒரு மாலை வேளைக்கு ஓர் சிறந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன, அதுமட்டும் அல்லாது, இது இருவருக்கு ஒரு காதல் இரவு உணவுக்கு Blue Orbit Restaurant ஆனது வழிவகுக்கின்றது.

Eshi Dias (@eshi.dias)

………………………………………

எமக்குப் பிடித்த ஓர் TikTok ஒன்றினைக் கண்டறிந்தால், அதனை முயற்சிதுப் பார்க்க நாம் ஆவலுடன் இருக்கின்றோம். எமது Content கள் ஆவன பெரும்பாலும் நிஜ வாழ்க்கையின் சூழ்நிலைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இதனை ஓர் தம்பதியினராக பகிர்ந்து கொள்வதனையே நாம் மிகவும் விரும்புகின்றோம், ஏனென்றால் இம் முயற்சி மூலம் மற்றும் பல்வேறு தம்பதிகளினையும் தொடர்புபடுத்த முடியும் என்பதனை நாம் நன்கறிவோம். எமது வாழ்க்கை முறை மற்றும் பயண Contentகள் அனைத்திலும், ஒரு அம்சம் உண்மையில் தனித்து நிற்கிறது, அது தான் நமது ஒருங்கிணைந்த உடைகள். சுமார் ஒரு மாதமாக, நாம் Clap Transition Video களினைச் செய்தோம், பொருத்தமான உடைகளில், அவை எமது TikTok பார்வையாளர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. காதலர் தினத்தன்று, சிவப்பு நிறமானது ஓர் முக்கிய வர்ணத் தேர்வாகும். நீங்கள் இருவரும் சிவப்பு நிற உடைகளைத் தேர்வு செய்தாலும், செய்யாவிட்டாலும், ஒரே நிறத்தினில் ஒருங்கிணைந்திருப்பது என்பது நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கும்! உங்கள் இருவரிடமும் முழுமையான பொருந்தக்கூடிய ஆடைகள் இல்லையெனில், நீங்கள் எப்போதும் இரண்டு வண்ணங்களை கலக்க முடியும் இதன்மூலம் பொருந்தும் வகையினில் ஓர்ஒருங்கிணைந்த தோற்றத்தினை உருவாக்க முடியும்.

பாதுகாப்பானதும் மற்றும் ஒத்திசைவானதுமான நிகழ்நிலை சூழல் ஒன்றினை உருவாக்குவதில் TikTok இன் அர்ப்பணிப்பானது, படைப்பாளிகளுக்கு, குறிப்பாக தம்பதிகளுக்கு, அவர்கள் மென்மேலும் செழித்து வளர ஒரு ஆதரவான தளத்தினை வழங்குகின்றது. காதலர் தினம் நெருங்கி வருவதால், TikTok இன் பாதுகாப்பு முயற்சிகள் Eric & Mani, மனைவிடன் பயணம், மற்றும் Eshi Dias போன்ற படைப்பாளிகளுக்கு தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஓர் ஆதரவான சூழலுக்கு உத்தரவாதம் வழங்குகின்றது. தெளிவான சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திறன்மிக்க உள்ளடக்க கண்காணிப்பு மூலம், TikTok காதல், ஒற்றுமை மற்றும் கலை வெளிப்பாடு வளரும் ஓர் களமாக மாறுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...