ஜனசக்தி பைனான்ஸ் 2026-27இன் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபத்தில் 51% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது

Share

Share

Share

Share

2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய இலாபத்தில் 27% அதிகரிப்பு,
நிகர தொழிற்பாட்டு வருமானத்தில் 24.7% வளர்ச்சி

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, 2026/27 நிதியாண்டை முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளின் வலுவான வளர்ச்சியுடன் ஆரம்பித்துள்ளது. 2026 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் (NPAT) கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 51% அதிகரித்து ரூ.90.4 மில்லியனாகப் பதிவாகியுள்ளது (2025/26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.59.9 மில்லியனாக இருந்தது).

நிறுவனம் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) ரூ.138.2 மில்லியனை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 27.1% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது (ரூ.108.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது). அதேவேளை நிகர தொழிற்பாட்டு வருமானம் முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ.671.6 மில்லியனுடன் ஒப்பிடும்போது 24.7% வளர்ச்சியடைந்து ரூ.837.8மில்லியனாக பதிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் பிரதான கடன் வணிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியால் இலாபத்தன்மையின் வலுவான முன்னேற்றம் ஆதரிக்கப்பட்டது. கடன்கள் மற்றும் வருமதிகளின் பெறுமதி (Loans and Receivables Portfolio) கடந்த ஆண்டின் ரூ.23.8 பில்லியனுடன் ஒப்பிடும்போது 44.7% அதிகரிப்பை பிரதிபலித்து ரூ.34.5 பில்லியனாக விரிவடைந்தது.

அதே வேளை, நிறுவனம் நிலையான வைப்புத்தளத்தை பராமரித்ததுடன் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ.16.9 பில்லியன் வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது 8.1% அதிகரிப்பை பதிவுசெய்து, ரூ.18.3 பில்லியனை எட்டியது.

செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா, “ஜனசக்தி பைனான்ஸ் புதிய நிதியாண்டை வலுவான நிலையில் ஆரம்பித்துள்ளதுடன், இலாபத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து அதன் பிரதான வணிகச் செயற்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. நிகர இலாபத்தில் பதிவுசெய்யப்பட்ட 51% அதிகரிப்பு, நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு தெளிவான சான்றாகும். முன்னோக்கிச் செல்லும் நிலையில், நெறிமுறையான வளர்ச்சி, சிறந்த ஆளுகை மற்றும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நிலையான பெறுமதியை உருவாக்குவதில் தெளிவான கவனம் ஆகியவற்றின் மூலம் இந்த வலுவான அடித்தளத்தை மேலும் கட்டியெழுப்புவதே எமது முன்னுரிமையாக இருக்கும்.” என்றார்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கூறுகையில், “எங்களின் முதல் காலாண்டு பெறுபேறுகள், வணிகம் முழுவதும் நாங்கள் அடைந்து வரும் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. நிகர தொழிற்பாட்டு வருமானம் 24.7% வளர்ச்சியடைந்துள்ளதுடன் வரிக்கு முந்தைய இலாபம் 27% ஆல் அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் வருமதிகளின் பெறுமதி ரூ.34.5 பில்லியனாகத் தொடர்ச்சியாக விரிவடைந்தமை, எங்கள் கடன் வழங்கும் பிரிவின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. எமது வாடிக்கையாளர் உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலமும் அணுகலை விரிவுபடுத்துவதன் ஊடாகவும் செயற்பாடுகளின் செயல்திறனையும் வினைத்திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி இம் முன்னேற்ற வேகத்தை நீடித்த வளர்ச்சியாக மாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

இலங்கையின் வங்கி சாரா நிதி நிறுவனத் (NBFI) துறையில் ஜனசக்தி பைனான்ஸ் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வேளையில், சமீபத்திய காலகட்டங்களில் அது அடைந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக இந்த முதல் காலாண்டு செயல்திறன் அமைந்துள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் ஒரு பகுதியாக, ஜனசக்தி பைனான்ஸ் தனது கடன் மற்றும் வைப்புச் சேவைகளை விரிவுபடுத்துதல், வாடிக்கையாளர் நலனை வலுப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட வளர்ச்சி உத்தியைப் பின்பற்றி வருகிறது. நிறுவனம் தனது பரந்த வளர்ச்சி இலக்குகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில், முதல் காலாண்டில் அதன் செயல்திறன் நேர்மறையான அடித்தளத்தை வழங்குகிறது.

பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் நெறிமுறையான நிதிநிலைக் கணக்கு முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் ஜனசக்தி பைனான்ஸ் தனது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு நீண்டகால மதிப்பை உருவாக்கும் அதே வேளை, நிலையான வளர்ச்சியை வழங்குவதிலும் உறுதியாக உள்ளது.

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 45 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி – https://www.janashakthifinance.lk/

BYD Mobile App හඳුන්වා දී...
නල්ලූර් කන්දස්වාමි කෝවිල් මංගල්‍යයේ ආගමික...
ITC Ratnadipa Welcomes Chef Prakhar...
28 Years of Fitness Evolution:...
5 ශ්‍රේණියේ දරුදැරියන් 6,500 කට...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின்...