பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் City of Dreams Sri Lanka

Share

Share

Share

Share

கொழும்பு, 2026 மார்ச் 26: இம்முறை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் கலை மெற்றும் கலாசார விழுமியங்களை மையமாகக் கொண்ட ‘சிக்னேச்சர் அவுருது’ (Signature Avurudu) எனும் நான்கு நாள் விசேட கொண்டாட்டத்திற்கு ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விழா, காலத்தால் அழியாத பாரம்பரியப் பழக்கவழக்கங்களை நவீன நேர்த்தியுடன் இணைத்து, சிங்கள – தமிழ் புத்தாண்டின் உன்னதத்தை வண்ணமயமாகவும் உற்சாகமாகவும் பிரதிபலிக்கவுள்ளது. தலைநகரின் இதயப்பகுதியில் ஒரு கிராமியத் திருவிழாவின் அழகையும், தனித்துவத்தையும் உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த களம், வருகை தரும் விருந்தினர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும்.

இந்தக் கொண்டாட்டத்தின் மிக முக்கிய அங்கமாக, நிறுவனத்தின் முகாமைத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்படும் ‘பஹன் பூஜை’ எனும் மங்கல விளக்கேற்றும் நிகழ்வு அமையவுள்ளது. இது புதிய ஆண்டின் செழிப்பு, ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கத்தின் அடையாளமாகத் திகழ்வதோடு, நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கான ஒரு ஆன்மீகத் தூண்டலாகவும் அமையும்.

கொண்டாட்டங்களின் நான்கு நாட்களும் ரபான் இசை மற்றும் பாரம்பரிய மேள தாளங்களின் அதிரும் ஓசையுடன், கண்கவர் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன. அத்துடன், இலங்கையின் புகழ்பெற்ற விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய உடையணிந்த வரவேற்பாளர்களின் இன்முக உபசரிப்பு, இங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஒரு கௌரவமான உணர்வை வழங்கும்.

இதில் முக்கிய சிறப்பம்சமாக, சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கே உரிய பாரம்பரிய இனிப்புப் பலகாரங்கள் மற்றும்; சிற்றுண்டிகளுடன் கூடிய பிரம்மாண்டமான விருந்துபசாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டுத் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட ‘அவுருது’ உணவு வகைகள் மற்றும் புத்தாக்க பானங்கள் என ஒரு சுவையான விருந்தே விருந்தினர்களுக்காக இங்கு காத்திருக்கின்றது.

அனைவருக்கும் பொதுவான ஒரு கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘சிக்னேச்சர் அவுருது’, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாக அமையும். இது ஒரு பண்டிகை என்பதைத் தாண்டி, ஒருமைப்பாடு மற்றும் புதுப்பித்தலின் உணர்வை வெளிப்படுத்துகிறது. ஏப்ரல் மாதம் பாரம்பரியமும், நவீனமும் சங்கமிக்கும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில், உங்கள் இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் புத்தாண்டுத் தருணங்களைக் கொண்டாடுங்கள்.

22/5/2026
Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் இலங்கையில்...
ඇමරිකානු ආයෝජිකා Sandhya Ajjarapu, Kandy...
Hellmann සහ MAS සමූහය එක්ව...
10 වන Huawei ICT තරඟයේ...
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,...
Prime Group strengthens commitment to...
Hellmann and MAS Holdings launch...
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,...
Prime Group strengthens commitment to...
Hellmann and MAS Holdings launch...
Prime Melwa Formally Commences Asia’s...